குட் நியூஸ்.. ஓமிக்ரானுக்கு எதிராக வேலை செய்யும் ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி.. ஆய்வு முடிவு சொல்வதென்ன?
டெல்லி: தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் உலக நாடுகளில் வேகமாக பரவி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரான் தாக்கம் இருப்பதாக கூறப்படுகிறது.
30 முறை உருமாற்றம் அடைந்துள்ளதாக கூறப்படும் இந்த மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவிலும் ஓமிக்ரான் வேகம்
இந்தியாவிலும் ஓமிக்ரான் வைரஸ் ஏற்கனவே புகுந்து விட்டது. முதன் முதலாக கர்நாடகா மாநிலத்தில் கால் பதித்த ஓமிக்ரான் வைரஸ் தற்போது டெல்லி, மகாரஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா என பல்வேறு மாநிலங்களுக்கு பரவி விட்டது. இந்தியாவில் 250-க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் பாதிப்புகள் உள்ளன. ஓமிக்ரான் வேகமாக பரவினாலும் டெல்டாவை விட இதன் ஆபத்து குறைவுதான் என்று ஒரு பக்கம் கூறினாலும், மறு பக்கம் இது ஆபத்தானதுதான் என்று தகவல்கள் வருகின்றன.

ஆஸ்ட்ராஜெனெகா பூஸ்டர் டோஸ்
கொரோனாவுக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதமாக செயல்பட்டு வரும் தடுப்பூசிகள் ஓமிக்ரானுக்கு எதிராக செயல்திறன் மிக்கதா என்று இன்னும் முழுமையாக தெரியவில்லை. இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் ஆய்வு நடத்தி வரும் நிலையில் ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் ஓமிக்ரான் வைரசுக்கு எதிராக வேலை செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் தென் கொரியாவில் தயாரிக்கப்பட்ட வக்ஸ்வேரியா என்ற பிராண்ட் பெயர்களின் கீழ் விற்பனை செய்யப்படும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் ஓமிக்ரானுக்கு எதிரான செயல் திறன் குறித்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் வெவ்வேறு ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வு நடத்தியது. அப்போது ஓமிக்ரான் வைரஸ் மாறுபாட்டிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை(ஆண்டிபாடி) அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி அதிகரிக்கும் என்று தெரியவந்துள்ளது.

ஆய்வு முடிவுகள்
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் மூன்றாவது டோஸைப் பெற்ற ஒரு மாதத்திற்குப் பிறகு தனிநபர்களிடமிருந்து பெறப்பட்ட செரா, இரண்டாவது டோஸுக்கு ஒரு மாதத்திற்குப் பிறகு டெல்டா மாறுபாட்டிற்கு எதிராகக் காணப்பட்ட அளவுகளுடன் ஒப்பிடும்போது, ஓமிக்ரான் மாறுபாட்டை நடுநிலையாக்க முடிந்தது என்று ஆய்வில் கண்டறியப்பட்டது.
Recommended Video

ஆன்டிபாடிகளின் அளவுகள் அதிகரிப்பு
மேலும், மூன்றாவது டோஸுக்குப் பிறகு ஆன்டிபாடிகளின் அளவுகள், முன்னதாக டெல்டா உள்ளிட்ட பிற வகைகளால் பாதிக்கப்பட்ட நபர்களிடம் காணப்பட்டதை விட அதிகமாக இருப்பதும் ஆய்வில் உறுதியாகி உள்ளது. எப்படியோ ஏதாவது ஒரு தடுப்பூசியை கொண்டு ஓமிக்ரான் வைரஸை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக! -
Rasi Palan: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கான மார்ச் மாத பலன்.. முழு விவரம் இதோ -
வேளச்சேரி- பரங்கிமலை ரயில்.. மிகப்பெரிய சம்பவத்தை 'சைலண்ட்' ஆக செய்த மத்திய அரசு.. பின்னணி












Click it and Unblock the Notifications