அடேங்கப்பா.. கார்பரேட் நிறுவனங்களில் 80% நன்கொடையை பெற்ற பாஜக.. திமுக,அதிமுகவுக்கு எவ்வளவு தெரியுமா
டெல்லி: கடந்த 2019-20 நிதியாண்டில் ஒட்டுமொத்த தேர்தல் நன்கொடையில் பாஜக மட்டும் சுமார் 80%, அதாவது 271.5 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.
இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்குத் தனி நபர்கள் தொடங்கி கார்பரேட் பெரு நிறுவனங்கள் வரை அனைவரும் தேர்தல் நிதி கொடுப்பது வழக்கமான ஒரு நிகழ்வு தான்.
அதிலும் தேர்தல் காலங்களில் இந்த நிதி அளிப்பது பல மடங்கு அதிகரிக்கும். இந்நிலையில், 2019-20 நிதியாண்டில் அரசியல் கட்சிகள் பெற்ற தேர்தல் நன்கொடை குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.

பாஜகவுக்கு மிக அதிகம்
electoral trust-கள் மூலம் பெறப்படும் நன்கொடைகளில் பாஜக வேறு எந்த கட்சிகளையும்விட அதிகபட்சமாக 276.45 கோடி ரூபாயை நன்கொடையாகப் பெற்றுள்ளது. குறிப்பாக ப்ருடெண்ட் அறக்கட்டளையில் இருந்து நிறுவனத்திடம் இருந்து ரூ .217.75 கோடி, ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ .45.95 கோடி, ஏ பி பொதுத் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ .9 கோடி, சமாஜ் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ .3.75 கோடியை பாஜக பெற்றுள்ளது.

ரூ 58 கோடியைப் பெற்ற காங்கிரஸ்
மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ் 58 கோடி ரூபாயைப் பெற்றுள்ளது. அதில் ப்ருடெண்ட் அறக்கட்டளையில் இருந்து ரூ. 31 கோடியும், ஜன்கல்யன் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ. 25 கோடியும், சமாஜ் தேர்தல் அறக்கட்டளையில் இருந்து ரூ. 2 கோடியும் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த வருமானம் 2019-20 நிதியாண்டில் 682 கோடி ரூபாயாக உள்ளது. இது 2018-29ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 25% குறைவாகும்.

மாநில கட்சிகள்
அதேபோல மாநில கட்சிகள் எனப் பார்க்கும்போது, டிஆர்எஸ் ரூ 130 கோடி, சிவசேனா ரூ 111 கோடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ 92 கோடி, அதிமுக ரூ 89 கோடி, திமுக ரூ 64 கோடி, ஆம்ஆத்மி ரூ 49 கோடியை நன்ககொடையாக பெற்றுள்ளன. தேர்தல் பாண்டுகள் மூலமும் மாநிலக் கட்சிகள் அதிகளவில் நன்கொடை பெற்றுள்ளன. டிஆர்எஸ் ரூ 89 கோடி, ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ரூ 74 கோடி, திமுக ரூ 45 கோடி, சிவசேனா ரூ 40 கோடி, ஆம்ஆத்மி ரூ 17 கோடியை, அதிமுக ரூ 6.05 கோடி நன்கொடையாகப் பெற்றுள்ளன.

யாருக்குச் சென்றது அந்த ரூ 3 கோடி
அதில் பிர்லா நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட ரூ 3 கோடி எந்த அரசியல் கட்சிக்கு அளிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை ப்ருடெண்ட் அறக்கட்டளை வெளியிடவில்லை. அந்தத் தொகை தேர்தல் பாண்டுகள் மூலம் பெறப்பட்டவை என்பதால் எந்த அரசியல் கட்சிக்குக் கொடுக்கப்பட்டது என்பது குறித்த தகவல்களை வெளியிடத் தேவையில்லை என ப்ருடெண்ட் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

நன்கொடை அளிக்கும் முறை
பொதுவாக, இந்தியாவில் கார்பரேட் பெரு நிறுவனங்கள் ப்ருடெண்ட் போன்ற தொண்டு நிறுவனங்கள் மூலமே அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும். அரசியல் கட்சிகளும் செக், டிடி உள்ளிட்டவை மூலமே பணத்தைப் பெற்றுக் கொள்ளும். அதேபோல தேர்தல் பாண்டுகள் மூலம் ஒருவர் அரசியல் கட்சிகளுககு நிதி அளிக்கலாம். தேர்தல் பாண்டுகளில் யார் நிதி அளிக்கிறார்கள் என்பதை வெளியிட வேண்டியது கட்டாயம், ஆனால் யாருக்கு அளிக்கிறார்கள், அதாவது எந்த அரசியல் கட்சி அந்த நிதியைப் பெறுகிறது என்பதை வெயிட தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி – ஸ்டாலினுடன் பணி! டிகே சிவக்குமாரின் ஆலோசகரானார் தேர்தல் வியூக வகுப்பாளர் சுனில் கனுகோல் -
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது? காங்கிரசுடன் இணைக்கும் மம்தா? 1998ல் பிரிந்தது ஏன்? பின்னணி -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
சோனியா காந்தியை நேரில் சென்று சந்தித்த முதல்வர் விஜய்.. இந்தியா கூட்டணியின் முக்கிய அங்கமாகும் தவெக! -
ம.பி.யில் காங்கிரசுக்கு பறிபோன ராஜ்யசபா எம்பி சீட்... திமுக எம்பி வில்சன் கிண்டலாக பதிவு -
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்!












Click it and Unblock the Notifications