டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அயோத்தி வழக்கில் சமரசம் ஏற்படவில்லை.. மத்தியஸ குழுவிற்கு மேலும் அவகாசம்.. உச்ச நீதிமன்றம் அதிரடி

அயோத்தி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டது.

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் சமரசம் ஏற்படாததால் மத்தியஸ குழுவிற்கு கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அயோத்தி பாபர் மசூதி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் சமரசம் ஏற்படாததால் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டது. இரண்டு மாதங்களாக நடந்த மத்தியஸ பேச்சுவார்த்தை பாதி முடிந்துள்ள நிலையில், இன்று இந்த அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்ற விசாரணை நடந்தது.

1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்று பிரச்சனைதான் இந்த முக்கிய வழக்கிற்கு காரணம் ஆகும்.

எந்த அமைப்பு அந்த நிலத்திற்கு உரிமை கோர முடியும் என்பதுதான் இந்த பிரச்சனைக்கு காரணம். இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றனர்.

தற்போது விசாரணை நடக்கிறது

தற்போது விசாரணை நடக்கிறது

இதன் மீதான விசாரணை நடந்து வருகிறது. அயோத்தி வழக்கு தொடர்பான 14 மேல்முறையீட்டு மனுக்கள், மற்றும் புதிய மனு ஒன்று ஆகியவற்றின் மீதான விசாரணை நடந்து வருகிறது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

கடந்த விசாரணையின் போது இந்த வழக்கில் மத்தியஸம் பேசும் அமைப்பு ஒன்றை உருவாக்கி உச்ச நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது. அயோத்தி பிரச்சனையில் இந்து, இஸ்லாமிய அமைப்புகளுக்கு இடையில் மத்தியஸம் பேச, 3 பேர் கொண்ட குழு சுப்ரீம் கோர்ட்டால் நியமனம் செய்யப்பட்டது. இந்த குழுதான் அயோத்தி பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றது.

யாருடைய குழு

யாருடைய குழு

முன்னாள் நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மத்தியஸ்தர் குழு செயல்பட்டது. ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூன்று பேரும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த குழு 4 வாரங்களுக்குள் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். அதன்பின் 8 வாரத்திற்குள் பேச்சுவார்த்தையை முடித்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை சுப்ரீம் கோர்ட் ஆய்வு செய்து இறுதி தீர்ப்பை அளிக்கும், என்று கூறியது.

இன்று சமர்ப்பணம்

இன்று சமர்ப்பணம்

இந்த நிலையில் இந்த வழக்கில் மத்தியஸ்தர் குழு கடந்த இரண்டு மாதமாக பேச்சுவார்த்தை நடத்தியது. பேச்சுவார்த்தை பல கட்டங்களாக நடந்தது. ஆனால் இந்த பேச்சுவார்த்தை குறித்து விவரங்கள் மிகவும் ரகசியமாக பாதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் மத்தியஸ்தர் குழு சமர்ப்பித்தது.

இன்று விசாரணை

இன்று விசாரணை

இதனால் அயோத்தி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜரான மத்தியஸ குழு, இந்த வழக்கில் இன்னும் சமரசம் எட்டப்படவில்லை என்று கூறியது. கூடுதல் அவகாசம் வேண்டும் சமரசம் பேச என்று நீதிமன்றத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து நீதிபதிகள் அயோத்தி பிரச்சனைக்கு தீர்வு காண சமரச குழு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு திருப்தி தெரிவித்தனர்.

என்ன சொன்னார்கள்

என்ன சொன்னார்கள்

சமரசத்தை பாதியில் முடிக்க வேண்டாம். தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்துங்கள். கூடுதல் அவகாசம் தருகிறோம் என்று நீதிபதிகள் கூறினர். இதனால், அயோத்தி வழக்கில் சமரச குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மத்தியஸ்த குழு கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

English summary
Ayodhya: Supreme Court to hear the case today after two months of the Mediation process.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X