பாரத் பந்த்- Live Updates: தமிழகத்தில் பல மாவட்டங்களில் சாலை மறியல் போராட்டம்- ஆயிரக்கணக்கானோர் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: டெல்லியில் போராடும் விவசாயிகளின் பாரத் பந்த் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த மறியல் போராட்டத்தில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் கடும் குளிர், பனியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தின் ஒரு கட்டமாக நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு விவசாயிகள் சங்க போராட்டக் குழு அழைப்பு விடுத்தது.

இந்த பாரத் பந்த் போராட்டத்துக்கு 11 மாநில அரசுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நாடு தழுவிய அளவில் அனைத்து எதிர்க்கட்சிகளும் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கின்றன.

Dec 08, 2020, 4:33 pm IST

டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் போராட்டம்
Dec 08, 2020, 4:32 pm IST

டெல்லியில் முதல்வர் கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதை கண்டித்து துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தலைமையில் போராட்டம்
Dec 08, 2020, 3:14 pm IST

டெல்லியில் அமித்ஷாவுடன் இன்று இரவு விவசாய சங்க பிரதிநிதிகள் சந்திப்பு
Dec 08, 2020, 2:42 pm IST

பழனியில் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்ற விவசாயிகளுக்கு ஆதரவான போராட்டம்
Dec 08, 2020, 2:35 pm IST

விவசாயிகளுக்கு ஆதரவாக செங்கல்பட்டில் போராட்டம்- சாலை மறியல்- 200பேர் கைது
Dec 08, 2020, 2:35 pm IST

குளித்தலை பேருந்து நிலையம் முன்பு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது
Dec 08, 2020, 2:10 pm IST

அம்பாசமுத்திரத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்- 100க்கும் மேற்பட்டோர் கைது
Dec 08, 2020, 2:09 pm IST

திருப்பூரில் 90% கடைகள் மூடல்- 10,000க்கும் மேற்பட்ட சிறு, குறு ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்களும் மூடல்
Dec 08, 2020, 2:07 pm IST

சேலத்தில் அனைத்து கடைகளும் திறக்கப்பட்டு அனைத்து வாகனங்களும் வழக்கம்போல இயங்கின
Dec 08, 2020, 1:49 pm IST

டெல்லி திக்ரி எல்லையில் போராட்டத்தில் பங்கேற்ற 32 வயது விவசாயி மரணம்
Dec 08, 2020, 1:47 pm IST

விவசாய சட்டங்கள்- அரசியல் கட்சி தலைவர்களுடன் சரத்பவார் ஆலோசனை- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்திக்கிறார்
Dec 08, 2020, 1:47 pm IST

புதுச்சேரியில் விவசாயிகளுக்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி பங்கேற்பு
Dec 08, 2020, 1:45 pm IST

டெல்லி சரோஜினிநகர் மார்க்கெட்டில் வர்த்தகர்கள் கையில் கறுப்பு பட்டை அணிந்து விவசாயிகளுக்கு ஆதரவு
Dec 08, 2020, 12:30 pm IST

பாரத் பந்த்- அனைத்துக் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் போராட்டம்
Dec 08, 2020, 12:21 pm IST

பாரத் பந்த் போராட்டத்தில் விமான சேவைகளில் எந்த பாதிப்பும் இல்லை- டெல்லி விமான நிலையம்
Dec 08, 2020, 12:17 pm IST

தெலுங்கானாவில் டிஆர்எஸ் தலைவர்கள் பாரத் பந்த்-க்கு ஆதரவாக போராட்டம்
Dec 08, 2020, 12:15 pm IST

சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து கடைகள் அடைப்பு
Dec 08, 2020, 11:48 am IST

#StandWithFarmers என நடைபெறும் #BharatBandh வெல்லட்டும்! மூன்று சட்டங்களும் நொறுங்கட்டும்- மு.க.ஸ்டாலின்
Dec 08, 2020, 11:42 am IST

ரத்தம் உறையும் குளிரிலும் சித்தம் உறையாத விவசாயிகளின் போராட்டம்- கவிஞர் வைரமுத்து
Dec 08, 2020, 11:39 am IST

கோவையில் அனைத்து கடைகள் , காய்கறி சந்தை, மீன் மார்க்கெட் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது.
Dec 08, 2020, 11:25 am IST

Bharat Bandh-ற்கு 11 மாநில அரசுகள் முழு ஆதரவு
Dec 08, 2020, 11:24 am IST

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் சென்னை சாஸ்திரி பவன் எதிரில் ஆர்ப்பாட்டம்
Dec 08, 2020, 10:38 am IST

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
Dec 08, 2020, 10:37 am IST

திண்டுக்கல் மாவட்டம் எரியோட்டில் திமுக கூட்டணி கட்சியினர் போராட்டம்
Dec 08, 2020, 10:35 am IST

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இடதுசாரிகள் போராட்டம்
Dec 08, 2020, 10:34 am IST

திருச்சியில் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்- 500க்கும் மேற்பட்டோர் கைது
Dec 08, 2020, 10:33 am IST

ஆந்திராவில் என்.ஹெச். 16-ல் இடதுசாரிகள், மாணவர் அமைப்பினர் போராட்டம்
Dec 08, 2020, 10:32 am IST

விழுப்புரம் அருகே செஞ்சியில் கோலம் போட்டு விவசாயிகளுக்கு ஆதரவாக பெண்கள் போராட்டம்
Dec 08, 2020, 10:32 am IST

சென்னை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் திமுக தலைமையில் எதிர்க்கட்சியினர் சாலை மறியல் போராட்டம்
Dec 08, 2020, 10:29 am IST

தஞ்சை மாவட்டத்தில் 45,000 கடைகள் அடைக்கப்பட்டன
READ MORE

Bharat Bandh Today Live Updates: All Oppn Partices back to shut down
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+