"புல்லட் ப்ரூஃப் காரில் பாத யாத்திரை போகட்டா!" டெல்லி போலீஸ் விளக்கம்.. நக்கலடித்த ராகுல் காந்தி
டெல்லி: துப்பாக்கி குண்டுகள் துளைக்காத 'புல்லட் ப்ரூஃப்'காரிலா பாத யாத்திரை மேற்கொள்ள முடியும்? இல்லை., இதற்கு முன்பு நடைப்பயணம் மேற்கொண்ட பாஜக தலைவர்கள் அப்படிதான் செய்தார்களா? எனக் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வியெழுப்பியுள்ளார்.
பாரத் ஜோடோ நடைப்பயணத்தில் ராகுல் காந்தி, பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்கவில்லை என டெல்லி காவல்துறை கூறியுள்ள நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக ராகுல் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த நடைப்பயணம் இந்தியாவின் உணர்வுகளை வெளிக்காட்டுவதாகவும், இதிலிருந்து தாம் நிறையக் கற்றுக்கொண்டதாகவும் ராகுல் கூறினார்.

"டெல்லி போலீஸார் மெத்தனம்"
நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் பாரத் ஜோடோ நடைப்பயணம் 100 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. கடந்த வாரம் டெல்லிக்குள் இந்த யாத்திரை நுழைந்தது. இந்நிலையில், ராகுலின் நடைப்பயணத்திற்கு டெல்லி போலீஸார் முறையாகப் பாதுகாப்பு வழங்குவதில்லை என காங்கிரஸ் சார்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதப்பட்டது. அதில், "பாரத் ஜோடோ யாத்திரைக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் டெல்லி போலீஸார் மெத்தனம் காட்டி வருகிறார்கள். ராகுலைச் சுற்றிப் பாதுகாப்பு வளையமாகவும் அவர்கள் நிற்பதில்லை. 'இசட்' பிரிவு பாதுகாப்பு கொண்டிருக்கும் ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு அளிப்பதில் அலட்சியம் காட்டப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

"பாதுகாப்பு விதிகளை மீறும் ராகுல்"
இதனிடையே, இந்தக் கடிதத்திற்குப் பதிலளிக்குமாறு டெல்லி போலீஸாருக்கும், சிஆர்பிஎப்-க்கும் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இதற்கு டெல்லி காவல்துறையும், சிஆர்பிஎப்-ம் தனித்தனியாக பதில் அளித்திருந்தன. அதில், ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு கொடுப்பதில் குளறுபடி ஏற்படவில்லை என்றும், அவர் அடிக்கடி பாதுகாப்பு விதிகளை மீறுகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ராகுல் காந்திக்குப் பாதுகாப்பு வளையமாக போலீஸார் நின்றிருந்த போதிலும், அதை உடைத்துக் கொண்டு அவர் செல்கிறார் எனவும் டெல்லி போலீஸ் சார்பில் கூறப்பட்டது.

'புல்லட் ப்ரூஃப்' காரிலா?
இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தியிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ராகுல், "நான் மேற்கொண்டிருப்பது நடைப்பயணம். பொதுவெளியில் நடந்து செல்வதுதான் நடைப்பயணம். பாதுகாப்பு விதிகளை நான் மீறுவதாக டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர். அப்படியென்றால், துப்பாக்கி குண்டுகள் துளைக்காத 'புல்லட் ப்ரூஃப்' காரிலா பாதயாத்திரை மேற்கொள்ள முடியும்.

"நிறைய கற்றுக்கொண்டேன்"
நான் அப்படி செல்வதைத்தான் மத்திய அரசு விரும்புகிறது. பாஜக தலைவர்கள் இதற்கு முன்பு எத்தனையோ முறை பாதயாத்திரை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் என்ன காரிலா சென்றார்கள்? எனது இந்த நடைப்பயணம் இந்திய மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. இந்த நடைப்பயணம் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. பாஜக மீது பெரும்பாலான மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதையும் இந்த நடைப்பயணத்தில்தான் தெரிந்துகொண்டேன்" என ராகுல் கூறினார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications