Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

2024 தேர்தல் ‘தீ’ வியூகம்! காங்கிரஸூக்கு ‘ஓகே’ சொன்ன நிதிஷ்.. மாஸ்டர் ஸ்ட்ரோக்! இனிமேதான் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி : பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டுமானால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என்பதே அரசியல் தலைவர்கள், அரசியல் பார்வையாளர்கள் என பலரும் முன்வைக்கும் யோசனை. ஆனால், காங்கிரஸ் தலைமையில் ஓரணியாகத் திரள சில மாநிலக் கட்சிகள் தயாராக இல்லை. பாஜகவுக்கு எதிரான வலுவான அணியை அமைப்பதில் காங்கிரஸ் கட்சியும் கோட்டை விடுவதாகவே தெரிகிறது. இந்நிலையில், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் வியூகம் அரசியல் அரங்கில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது.

காங்கிரஸ் கட்சி வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் திமுக, காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவை அளித்து வருகிறது. திமுக கூட்டணியில் இருக்கும் பிற கட்சிகளும், காங்கிரஸ் தலைமையில், அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.

காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்

காங்கிரஸ் தோல்விக்குக் காரணம்

அதேசமயம், பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்ற விரும்பும் பல கட்சிகள், காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கத் தயாராக இல்லை. பிஆர்.எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்ட பலரும் மூன்றாவது அணி அமைக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. பாஜக - காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி, பாஜகவுக்கு சாதகமாகவே முடியும், எதிர்க்கட்சிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்றால், மீண்டும் பாஜக அசுர பலத்தோடு ஆட்சிக்கு வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று அரசியல் நோக்கர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். பல மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு, மற்ற கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டணி அமைக்காததே காரணம் என விமர்சிக்கப்படுகிறது.

கூட்டணியில் இணையும் கட்சிகள்

கூட்டணியில் இணையும் கட்சிகள்

இந்நிலையில் தான், 2024 தேர்தலை முன்வைத்து காங்கிரஸ் கட்சி தீவிரமாகக் களப்பணி ஆற்றி வருகிறது. நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. இந்த பயணம் முக்கால்வாசி நிறைவடைந்துவிட்டது. இந்த யாத்திரையின்போது பல்வேறு கட்சித் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்தார் ராகுல் காந்தி. அந்தவகையில், காங்கிரஸ் கட்சியோடு கூட்டணியில் இல்லாத சில கட்சிகளின் தலைவர்களும் ராகுலின் யாத்திரையில் பங்கேற்றனர். இது காங்கிரஸ் கூட்டணிக்கு பலத்தை அதிகரித்துள்ளது. காங்கிரஸ் கூட்டணியை வலுப்படுத்துவதே இனி காங்கிரஸ் தலைமையின் நோக்கமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங். கருத்தை ஏற்ற நிதிஷ்

காங். கருத்தை ஏற்ற நிதிஷ்

இந்நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலை பொறுத்தவரையில் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் முகமாக ராகுல் காந்தி திகழ்வார். பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே அனைத்து எதிர்க்கட்சிகளாலும் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவார் என தெரிவித்தார். இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்துவதில் தவறில்லை என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

நிதிஷ் குமார்

நிதிஷ் குமார்

பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை முன்னிறுத்த காங்கிரஸ் முயல்கிறது. இதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் ஏற்கனவே பிரதமர் பதவிக்கு போட்டியிட மாட்டேன் என தெரிவித்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம், நிதிஷ் குமார் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு வலிமை சேர்த்துள்ளார்.

நிதிஷ் திட்டம்

நிதிஷ் திட்டம்

சில மாதங்களுக்கு முன்பு பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்ட நிதிஷ் குமாரின் இந்த கணக்கு பாஜகவுக்கு எதிராக எடுத்த மாஸ்டர் பிளான் என்று கூறப்படுகிறது. பிரதமர் பதவியிலிருந்து நரேந்திர மோடியை எப்படியாவது அகற்ற வேண்டும் என்பதில் நிதிஷ் குமார் உறுதியாக இருக்கிறாராம். அடுத்த கட்டமாக பா.ஜ.க அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களை சந்தித்து பேசி, லோக்சபா தேர்தலில் அவர்களை ஓரணியில் திரட்டும் முயற்சியும் தொடங்க உள்ளதாம்.

 மற்ற மாநிலங்களுக்கு

மற்ற மாநிலங்களுக்கு

இதையொட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் உள்ளிட்ட தலைவர்களை வரும் பிப்ரவரியில் சந்திக்க முடிவு செய்துள்ளாராம் நிதிஷ் குமார். இந்த முயற்சி மற்ற மாநிலங்களுக்கும் விரிவடையும் எனக் கூறப்படுகிறது. பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், பா.ஜகவில் அதிருப்தியில் உள்ள தலைவர்களை அடையாளம் கண்டு, அவர்களை ஐக்கிய ஜனதா தளத்துக்கு அழைத்து வரும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார் நிதிஷ்.

 ஜனதா ஆக்ஷன்

ஜனதா ஆக்ஷன்

பழைய ஜனதா கட்சியில் இருந்து பிரிந்து சென்ற கட்சிகளை பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரட்டும் முயற்சியையும் நிதிஷ் குமார் மேற்கொள்ள இருக்கிறாராம். இதற்காக, மதச்சார்பற்ற ஜனதா தளம், இந்திய தேசிய லோக்தளம், சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய லோக்தளம் ஆகிய கட்சிகளின் தலைவர்களுடன் பேச்சு துவங்கியுள்ளதாக கூறப்படுகிறது. நிதிஷின் இந்த முயற்சி பலித்தால், காங்கிரஸ் கூட்டணி மிகவும் பலம் வாய்ந்த கூட்டணியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி

பாஜகவை ஆட்சி அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கான 'லட்சிய கூட்டணி' நிதிஷ் குமாரின் இந்த முயற்சிகளால் சாத்தியப்படும் எனக் கூறப்படுகிறது. பாஜகவுக்கு எதிரான மாநிலக் கட்சிகளை அணி சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிதிஷ் குமார், இதற்காக காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டுக்கு மேல் இருக்கும் நிலையில், இந்த முயற்சிகள் பலிக்குமா, லட்சியம் நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+