ஏழ்மையான மாநிலங்களில் பீகார் முதலிடம்.. உ.பி 3-வது இடம்.. தமிழ்நாடு எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது.
நிதி ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீடு (எம்.பி.ஐ) அறிக்கையின்படி பீகார், ஜார்கண்ட் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இந்தியாவின் ஏழ்மையான மாநிலங்களாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பீகாரில் அதிக ஏழைகள்
பீகாரில் 51.91 சதவீத மக்கள் ஏழைகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஜார்கண்டில் 42.16 சதவீதம் பேர் ஏழைகள் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 3-வது இடத்தில் உள்ள உத்தரப்பிரதேசத்தில் 37.79 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் 4-வது இடத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தில் 36.65 சதவீதம் ஏழைகளும் உள்ளனர் என்று நிதி ஆயோக்கின் முதல் பல பரிமாண வறுமைக் குறியீட்டில் கூறப்பட்டுள்ளது.

கேரளா இதில் முதலிடம்
மேகாலயா 32.67 சதவீத ஏழைகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது. இந்தியா முழுவதும் மிகக் குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்களில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோவா மாநிலம் உள்ளது. தொடர்ந்து சிக்கிம், தமிழ்நாடு ஆகியவை குறைந்த வறுமையைப் பதிவு செய்த மாநிலங்கள் வரிசையில் உள்ளன.

தமிழ்நாடு எத்தனை?
கேரளாவில் 0.71 சதவீதம் ஏழைகள் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் 4.89 சதவீதம் ஏழைகள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவாவில் 3.76 சதவீதம் ஏழைகள், சிக்கிமில் 3.82 சதவீத ஏழைகள், பஞ்சாபில் 5.59 சதவீத ஏழைகள் உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை புதுச்சேரி மக்கள் தொகையில் 1.72 சதவீதம் பேர் ஏழைகளாக உள்ளனர்,

ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள்
லட்சத்தீவுகள் (1.82 சதவீதம்), அந்தமான் & நிக்கோபார் தீவுகள் (4.30 சதவீதம்) மற்றும் டெல்லி (4.79 சதவீத ஏழைகள் உள்ளனர். பீகாரில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் இருக்கிறனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications