உண்மையை கண்டு அஞ்சும் பாஜக... நிருபரை அரை நிர்வாணப்படுத்தியதற்கு ராகுல் காந்தி கண்டனம்
டெல்லி: மத்திய பிரதேசத்தில் நிருபரை போலீஸ் நிலையத்தில் அரை நிர்வாணப்படுத்தியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உண்மையைை கண்டு பாஜக அஞ்சுகிறது என அவர் விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக எம்எல்ஏவாக இருப்பவர் கேதார்நாத் சுக்லா. இவரது மகன் குருதத். இவர்கள் குறித்து நாடக நடிகர் நீரஜ் குந்தர் அவதூறு கருத்துகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இதுபற்றிய புகாரையடுத்து நீரஜ் குந்தர் கைது செயயப்பட்டார். இதை கண்டித்து சித்தி மாவட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சமூக ஆர்வலர்கள், யூடியூபர்கள் பங்கேற்றனர்.

அரைநிர்வாண படங்கள்
செய்தி சேகரிக்க நிருபர்கள் சென்றனர். அங்கு வந்த போலீசார் நிருபர், கேமராமேன், நாடக நடிகர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட 8 பேரை கைது செய்தனர். அவர்களை போலீஸ் நிலையத்தில் போலீசார் அரை நிர்வாணப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

ராகுல்காந்தி விமர்னம்
இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக அரசை அவர் விமர்சனம் செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "ஜனநாயகத்தின் நான்காவது தூண் லாக்கப்பில் தகர்க்கப்பட்டது. பாஜக கட்சியின் அரசு உண்மையை கண்டு பயப்படுகிறது. ஒன்று அரசின் புகழ் பாடுங்கள் அல்லது சிறைக்குச் செல்லுங்கள் என்பதை தான் இந்த புதிய இந்தியா அரசு கூறுகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.

பாஜகவின் மோசடிகளை...
இதுபற்றி காங்கிரஸ் கட்சியின் ஒடிசா தலைவரான நிரஞ்சன் பட்நாயக், மத்திய பிரதேசத்தில் ஆட்சி செய்யும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசை விமர்சித்தார். அவர் டுவிட்டரில் கூறுகையில் "ஒரு பாஜக எம்எல்ஏவின் மோசடிகளை வெளிக்கொண்டு வரும் நபர்களின் ஆடைகளை அகற்ற போலீசார் கட்டாயப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. பத்திரிகையாளர் பணி என்பது உண்மையை உலகுக்கு எடுத்துரைப்பது தான்'' என கூறியுள்ளார்.

பாஜகவை பிரதிபலிக்கும் செயல்
காங்கிரஸ் தலைவர் அஜய் சிங் கூறுகையில், ‛‛ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீதான நேரடி தாக்குதல் தான் இந்த சம்பவம். இது பத்திகையாளர், போலீசார் இடையே நடந்த சம்பவத்தை மட்டுமின்றி ஊடகம் மீதிான பாஜக அரசின் அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.

பாஜகவை பிரதிபலிக்கும் செயல்
காங்கிரஸ் தலைவர் அஜய் சிங் கூறுகையில், ‛‛ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீதான நேரடி தாக்குதல் தான் இந்த சம்பவம். இது பத்திகையாளர், போலீசார் இடையே நடந்த சம்பவத்தை மட்டுமின்றி ஊடகம் மீதிான பாஜக அரசின் அணுகுமுறையையும் பிரதிபலிக்கிறது'' என தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications