டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கெஜரிவாலுக்கு எதிராக போராட்டம் நடத்துவதாக வாகன கட்டுப்பாட்டை மீறிய பாஜக தலைவருக்கு அபராதம்

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லியில் கெஜரிவாலுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த முயன்று வாகன கட்டுப்பாட்டை மீறிய பாஜக தலைவர் விஜய் கோயலிடம் போலீஸார் அபராதம் வசூலித்தனர்.

டெல்லியில் காற்று மாசால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மூச்சு திணறும் அளவுக்கு காற்று மாசு இருந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக காற்று மாசால் அவதிப்பட்டு வரும் டெல்லி மற்றும் வடமாநிலங்களில் காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு முயற்சித்து வருகிறது.

BJP leader fined for defying odd even scheme

அதன் ஒரு பகுதியாக வாகன கட்டுப்பாட்டை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜரிவால் அரசு இன்று முதல் அமல்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக தலைவர் விஜய் கோயல் தனது ஒற்றை இலக்க பதிவெண் கொண்ட காரை அவரது வீட்டை விட்டு 100 மீட்டர் தூரத்தில் எடுத்து சென்றார்.

அப்போது ஒற்றை- இரட்டை படை வாகன கட்டுப்பாட்டு அரசியல் ஸ்டென்ட் என எழுதப்பட்டிருந்த விளம்பர பலகையை வைத்திருந்தார். பின்னர் அவரது வாகனத்தை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அவருக்கு ரூ 4000 அபராதம் விதித்தனர்.

வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு தேவை.. உச்சநீதிமன்றம் நோக்கி மெகா பேரணி நடத்திய வக்கீல்கள்வழக்கறிஞர்களுக்கு பாதுகாப்பு தேவை.. உச்சநீதிமன்றம் நோக்கி மெகா பேரணி நடத்திய வக்கீல்கள்

அப்போது அங்கு வந்த டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட், கையில் பூங்கொத்துடன் விஜய் கோயலிடம் கொடுத்து காற்று மாசை கட்டுப்படுத்த கொண்டு வரப்பட்ட வாகன கட்டுப்பாட்டுக்கு ஆதரவு தருமாறு கோரினார்.

English summary
BJP leader Vijay Goel drived odd numbered plate vehicle in Delhi and was stopped by police and fined Rs 4000.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X