இது ஆபாசம் இல்லை வக்கிரம்.. தூக்கிவாரி போட்ட, ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்! நாடு எங்கே போகுது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: திருமணத்துக்கு முந்தைய ஃபோட்டோஷூட் ஆபாசங்களில் புதிய உச்சத்தை தொட்டு விட்டது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம்தான் இப்போது வைரலாக சுற்றும் ஒரு போட்டோ.

திருமணத்திற்கு முன்பு மணமகன் மற்றும் மணப்பெண் ஆகியோரை அருகருகே நிறுத்தி கூட புகைப்படம் எடுக்காத கலாச்சாரம் தமிழ்நாடு மட்டுமல்லாது நாடு முழுக்க இருந்தது.

ஆனால், இப்பொழுது திருமணத்துக்கு முன்பு எடுக்கப்படும் புகைப்படங்கள் ஹனிமூன் செல்லும்போது எடுக்கும் படங்களை விடவும் மிகவும் நெருக்கமாக இருக்கிறது. சில நேரங்களில் ஆபாசத்தின் புது உச்சங்களை கூட தொட்டு விடுகிறது.

பெட்ஷீட் கட்டி ஓடும் தம்பதி

பெட்ஷீட் கட்டி ஓடும் தம்பதி

கேரளாவில் ஒரு தம்பதி பெட்ஷீட் ஒன்றை ஆடை போல உடம்பில் கட்டிக் கொண்டு காட்டுப்பகுதியில் ஓடுவது போன்ற படம் முன்பு வெளியாகி வைரலாக மாறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இதன் பிறகும் விதவிதமான போட்டோஷூட் நடைபெற்று தான் வருகின்றன. அப்படியான ஒரு போட்டோ ஷூட் தற்போது வைரலாகி வருகிறது. இது போட்டோ ஷூட் என்று சொல்வதை தாண்டி ஆபாச குடோன் என்று அழைக்கப் அனைத்து தகுதிகளையும் கொண்டதாக இருக்கிறது.

வக்கிர போட்டோ ஷூட்

வக்கிர போட்டோ ஷூட்

அந்த போட்டோ ஷூட் காட்சி இதுதான்.. ஸ்கர்ட் அணிந்து ஒரு மணப்பெண் நின்று கொண்டிருக்கிறார். அவர் தனது ஸ்கர்ட்டை முட்டிக்கு மேல் தூக்கி இருக்கிறார். அவரது இரு கால்களுக்கு நடுவே மணமகன் மேலே நோக்கி பார்க்கும் வகையில் படுக்க வைக்கப்பட்டுள்ளார். இதை புகைப்படமாக எடுக்கிறது போட்டோ ஷூட் குழு. இந்த குழுவில் பெண் ஒருவரும் இடம் பெற்றிருக்கிறார். எடுத்த புகைப்படம் எப்படி வந்திருக்கிறது என்பதை அந்த பெண், மணமகளுக்கு தனது கேமராவில் காட்டுகிறார். அதை பார்த்து ஆஹா அருமை என மணமகள் கமெண்ட் கொடுத்ததும் போட்டோ டிக் ஆகிறது. இன்னொரு பக்கம் மணமகன் முகம் குளோசப் ஷாட் எடுக்கப்படுகிறது. மிகுந்த மகிழ்ச்சியாக அவர் படுத்திருப்பது போல போட்டோவில் காட்டப்படுகிறது. ஆபாசம் என்பதைத் தாண்டி வக்கிரம் என்ற அளவிற்கு இந்த ஃபோட்டோ போய்விட்டது என்று குமுறுகிறார்கள் சமூகவலைத்தளங்களில் இதைப்பார்த்த நெட்டிசன்கள்.

பயங்கர பேமஸ்

பயங்கர பேமஸ்

இந்த புகைப்படம் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆயிரக்கணக்கானவர்களால் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. பலரும் இதைப் பார்த்து முகம் சுளித்து கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த படத்தை எப்படி குடும்பத்தோடு ஆல்பம் போட்டு பார்க்கிறார்கள் என்று பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.

நைட் டிரஸ்

நைட் டிரஸ்

இது ஒரு பக்கம் என்றால் திருமண நிகழ்ச்சியில் இரவு உடையுடன் கலந்துகொள்ள மணமகள் ஒருவர் விரும்புவது பேசும் காட்சிகள் சமூக வலைதளங்களில் சுற்றி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடைபெறும் திருமணத்திற்கு முன்பாக சேலை ஆபரணங்கள் உள்ளிட்ட உடைகளை அணிந்து கொண்டு மத சடங்குகளில் பங்கேற்பதில் சிரமம் இருப்பதால் நைட் டிரஸ் ஆடையை உடுத்திக் கொண்டு வந்து பங்கேற்க விரும்புவதாக கோரியிருக்கிறார் பருல் சேத்தி என்ற மணமகள். இவ்வாறு அவர் கூறிய வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+