எல்லா விவரமும் சின்ன சிப்பில்.. இந்தியாவில் இனி இ பாஸ்போர்ட்! எப்படி இருக்கும்? சுவாரசிய பின்னணி!
டெல்லி: இந்தியாவில் இனி இ பாஸ்போர்ட் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். இந்த இ பாஸ்போர்ட் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2022ஐ தாக்கல் செய்தார். இதில் பல புதிய டிஜிட்டல் சேவைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்,
முக்கியமாக நடப்பு நிதி ஆண்டிலேயே இந்த இ-பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். பல காலமாக எதிர்பார்த்த அறிவிப்பு இன்று வெளியானது.

இ பாஸ்போர்ட்
இந்த பாஸ்போர்ட் எப்படிப்பட்டது என்று பார்க்கலாம். இ பாஸ்போர்ட் என்பதை பயோமெட்ரிக் பாஸ்போர்ட் என்றும் அழைப்பார்கள். இதை பற்றி முழுமையான விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும், நீங்கள் நினைப்பது போல போனில் இருக்க கூடியடிஜிட்டல் பாஸ்போர்ட் போல இது இருக்காது. மாறாக இது பல்வேறு உலக நாடுகளில் பயன்படுத்தப்படும் அதே புத்தக வடிவம் கொண்ட கொண்ட பாஸ்போர்ட் போல இருக்கும். ஆனால் இதில் நம்முடைய கிரெடிட் கார்டில் இருப்பது போன்ற சிப் இருக்கும்.

சின்ன சிப்
ஏடிஎம் கார்டுகளில் இப்போது சிப் வந்துவிட்டது. அதேபோல் இந்த பாஸ்போர்டிலும் சிப் இருக்கும். இதில்தான் நம்முடைய விவரங்கள் இருக்கும். நம்முடைய அடிப்படை விவரங்கள், முந்தைய பயண விவரங்களும் இதில் இருக்கும். இது பெரும்பாலான நாடுகளில் வைபை நுட்பம் கொண்டு உள்ளது. அதாவது கார்டை ஸ்வைப் செய்ய வேண்டியது இல்லை. மாறாக விமான நிலையங்களில் உள்ள மிஷின் அருகே கொண்டு சென்றாலே அதுவே ஸ்கேன் செய்துவிடும்

ஸ்கேன் விவரம்
நமது பாஸ்போர்ட்டில் முன் பக்கம், பின் பக்கம் மற்றும் நடு பக்கங்களில் ஏதாவது ஒரு இடத்தில் இந்த சிப் பொருத்தப்பட்டு இருக்கும். இந்த சிப் வகை பாஸ்போர்டுகளில் எந்த விதமான மோசடியும் செய்ய முடியாது. பொய்யான போலி பாஸ்போர்டுகளை உருவாக்க முடியாது. மலேசியாவில் 1998 லேயே இப்படியான இ பாஸ்போர்ட் கொண்டு வரப்பட்டுவிட்டன. 2019 கணக்குப்படி உலகம் 150க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த இ பாஸ்போர்டுகளை பயன்படுத்துகின்றன.
Recommended Video

குட்டி சிப்
இந்த சிப்பில் உங்களுடைய படம், கை ரேகை, கண்களின் புகைப்படம் எல்லாம் இருக்கும். விமான நிலையங்களில் சோதனையின் போது, இந்த சிப்பை ஸ்கேன் செய்வார்கள். அதன் மூலம் உங்களின் விவரம் கணினியில் வரும். இதை வைத்து உங்களுடைய முகத்துடன் ஒப்பீடு செய்வார்கள். நெதர்லாந்து, அல்பேனியா, பிரேசில் போன்ற நாடுகளில் அவர்களின் தேசிய அடையாள அட்டையில் கூட இப்படிப்பட்ட சிப்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்த சிப் பாஸ்போர்டுகள் இந்தியாவில் அமலுக்கு வர உள்ளன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications