வேகமாக பரவும் ஓமிக்ரான்.. மீண்டும் வருகிறது ஊரடங்கு?.. மத்திய அரசு கொடுத்த சிக்னல்.. பரபர தகவல்!
டெல்லி: சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொடிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் வைரஸ் பரவி வருவது கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Recommended Video
இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்று உலக சுகாதார அமைப்பும் எச்சரிக்கை விடுத்துள்ளது. முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. மேலும் டெல்டா வைரஸை விட இது வீரியம்மிக்கது என்றும் மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக தகவல்கள் வருகின்றன.

பயமுறுத்தும் ஓமிக்ரான்
ஓமிக்ரானை தடுக்கும் வகையில் நமது நாட்டிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டு வந்திருந்த நிலையில் அதனையும் தாண்டி ஓமிக்ரான் வைரஸ் இந்தியாவுக்குள் புகுந்து விட்டது. முதன் முதலில் கர்நாடகாவில்தான் ஓமிக்ரான் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பிறகு மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு என்று பல மாநிலங்களுக்கும் பரவியது. இந்தியாவில் தற்போது மகாராஷ்டிரா, டெல்லி, தெலங்கானா, கர்நாடகா, ராஜஸ்தான், கேரளா, குஜராத், ஒடிசா ஆகிய மாநிலங்களில் இதுவரை மொத்தம் 220--க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி உள்ளன.

கூடுதல் கவனம் வேண்டும்
இந்த நிலையில் இந்தியாவில் ஓமிக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது என்றும் தேவைப்பட்டால் மாநிலங்கள் ஊரடங்கு போட்டு கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக மாநிலங்களுக்கு மத்திய அரசு எழுதியுள்ள கடிதத்தில் தற்போதைய அறிவியல் சான்றுகளின்" அடிப்படையில், ஓமிக்ரான் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக பரவுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட அளவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தேவைப்பட்டால் ஊரடங்கு
கடந்த ஒரு வாரத்தில் ஒரு மாவட்டத்தில் 10% அல்லது அதற்கும் அதிகமான பாசிடிவ் கேஸ்கள் பதிவானால் மாநிலம் முழுவதும் பாதிப்புகள் பரவுவதற்கு முன்னரே கண்டிப்பாக கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். தேவைப்பட்டால் இரவு நேர ஊரடங்கு விதித்துக் கொள்ளலாம். பெரிய கூட்டங்களை கடுமையாகக் கட்டுப்படுத்துதல், திருமணம் மற்றும் இறுதிச் சடங்குகளில் பங்கேற்பவர்கள் எண்ணிக்கையைக் குறைத்தல் போன்ற நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

பொதுப் போக்குவரத்து
பொதுப் போக்குவரத்தில் மக்கள் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த வேண்டும். அலுவலகங்கள், தொழில் நிறுவனங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டும். அதிக தொலைநோக்கு பார்வை, தரவு பகுப்பாய்வு, ஆற்றல்மிக்க முடிவெடுத்தல் வேண்டும் என்றும் மத்திய அரசு மாநிலங்களுக்கு எழுதிய கடித்தத்தில் கூறியுள்ளது. மாவட்டம்தோறும் வீடு வீடாகச் சென்று பாதிப்புகளை கண்டறிய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
-
அதானிக்கு கிடைத்த மெகா அங்கீகாரம்.. உலகின் அழகான விமான நிலையங்கள் பட்டியலில் 2 இந்திய ஏர்போர்ட்டுகள் -
இந்தியாவில் டெலிகாரம் செயலிக்கு தடை.. ஜூன் 22 வரை யூஸ் செய்ய முடியாது! நீட் லீக் விவகாரத்தில் அதிரடி -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
ஹார்முஸை பத்திரமாக கடந்த முதல் இந்திய டேங்கர் திஷா.. அமைதி ஒப்பந்தம் வந்தவுடனேயே நடந்த மாற்றம்! -
கரப்பான் பூச்சி நிறுவனரை தாக்கிய ஆர்எஸ்எஸ் அமைப்பினர்? திப்கே பகிரங்க குற்றச்சாட்டு.. என்ன நடந்தது -
டாக்டர் சீட்டு இல்லையா? இனி சிரப் வாங்கவே முடியாது.. மத்திய அரசு புதிய கட்டுப்பாடு.. பின்னணி -
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு












Click it and Unblock the Notifications