டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மகிழ்ச்சியில் மமதா.. சந்தோசத்தில் சிபிஐ.. இரண்டு தரப்பும் கொண்டாடும் தீர்ப்பு.. யாருக்கு வெற்றி?

கொல்கத்தா கமிஷனரை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு என இரண்டு தரப்பும் வரவேற்று இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கொல்கத்தா கமிஷனர் வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி- வீடியோ

    டெல்லி: கொல்கத்தா கமிஷனரை சிபிஐ விசாரிக்க கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவை சிபிஐ மற்றும் மேற்கு வங்க அரசு என இரண்டு தரப்பும் வரவேற்று இருக்கிறது. இதனால் இது யாருக்கான வெற்றி என்ற கேள்வி எழுந்துள்ளது.

    சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக மேற்கு வங்க போலீசுக்கு எதிராக நேற்று சிபிஐ வழக்கு தொடுத்து இருந்தது. கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ வழக்கு தொடுத்து இருந்தது.

    இதில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்னும் சில நாட்களுக்கு தொடரும் என்று கூறப்படுகிறது. முதற்கட்ட உத்தரவு மட்டுமே இதில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    என்ன உத்தரவு

    என்ன உத்தரவு

    இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி கொல்கத்தா கமிஷனர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு கமிஷனர் ஒத்துழைக்க வேண்டும். ஆனால் அவரை சிபிஐ கைது செய்ய கூடாது, அவரிடம் வாக்குமூலம் வாங்க கூடாது என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.

    இரண்டு தரப்பு

    இரண்டு தரப்பு

    இந்த தீர்ப்பை தற்போது இரண்டு தரப்பும் கொண்டாடி வருகிறது. இந்த தீர்ப்பு மூலம் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டு இருக்கிறது. இந்த உத்தரவு ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி, கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமார் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பார். இது தார்மீக வெற்றி என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    சிபிஐ என்ன சொன்னது

    சிபிஐ என்ன சொன்னது

    இதுகுறித்து சிபிஐயும் கருத்து தெரிவித்துள்ளது, அதன்படி ராஜீவ் குமாரை விசாரிக்கலாம் என்று கூறியது தங்களுக்கு கிடைத்த வெற்றி. இதனால் இந்த வழக்கில் முக்கிய விசாரணைகளை மேற்கொள்ள முடியும். வழக்கின் உத்தரவு தங்களுக்கு சாதகமாக வந்துள்ளது, என்று சிபிஐ கூறியுள்ளது.

     இரண்டு பேருக்கும்

    இரண்டு பேருக்கும்

    ஒரு வகையில் பார்த்தால் இருவர் சொல்வதும் உண்மைதான். இது இருவருக்குமான வெற்றிதான் என்பதே சரியாக இருக்கும்.

    1.சிபிஐக்கு வெற்றி : சிபிஐ நினைத்தது போல இனி ராஜீவ் குமாரை விசாரிக்க முடியும். அவரை நினைக்கும் நேரத்தில் சந்திக்க முடியும்.

    2.மமதாவிற்கு வெற்றி: மமதாவின் விருப்பப்படியே, ராஜீவ் குமாரை சிபிஐ கைது செய்ய முடியாது. அதேபோல் அவரிடம் வாக்குமூலம் வாங்க முடியாது. கஸ்டடியிலும் எடுக்க முடியாது. இதனால் இது இரண்டு தரப்பிற்குமான வெற்றியாக பார்க்கப்படுகிறது.

    English summary
    CBI vs Mamata Banerjee: CBI and Mamata both claims victory, To say precisely, both of them actullay won it.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X