பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாக காரணம் திடீர் மேக கூட்டம்: வெளியான விசாரணை அறிக்கை
டெல்லி: ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய ராணுவ முப்படை தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 14 பேர் உயிரிழந்தது தொடர்பாக இந்திய விமானப்படை அமைத்த முப்படை விசாரணை குழு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
விபத்துக்கு, சதிவேலை காரணம் இல்லை என்று முதல்கட்ட அறிக்கையில் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேகமூட்டம்தான் விபத்துக்கு காரணம் எனச் சுட்டிக் காட்டியுள்ளது இந்த அறிக்கை.
கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி, குன்னூர் அருகே காட்டேரி மலைப்பாதையில் இந்திய விமானப்படையின் Mi-17V5 வகை ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. கோவை சூலூர் விமானப்படை தளத்திலிருந்து குன்னூர் வெலிங்க்டன் பயிற்சி மையத்திற்கு முப்படை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மற்றும் ராணுவத்தைச் சேர்ந்த 14 பேர் அதில் பயணம் செய்தனர்.

முப்படை விசாரணை
இந்த விபத்தில், பிபின் ராவத் உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, முப்படை விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது. ஏர் சீஃப் மார்ஷல் விஆர் சவுதாரி மற்றும் ஏர் மார்ஷல் மன்வேந்திர சிங் தலைமையில் முப்படை விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருந்தது. முதல்கட்ட விசாரணையின் முடிவுகளை அந்த குழு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் சமர்ப்பித்துள்ளது.

தீவிர விசாரணை
ட்ரை-சர்வீசஸ் கோர்ட் ஆஃப் என்கொய்ரி தனது விசாரணையின்போது விமான டேட்டா ரெக்கார்டர்கள் மற்றும் காக்பிட் குரல் ரெக்கார்டர்களை ஆய்வு செய்ததாக கூறப்பட்டுள்ளது.

விபத்துக்கான காரணம்
வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றமே இந்த விபத்துக்கு காரணம் என்று அறிக்கையில் கூறப்படுகிறது. இதனால் விமானியின் கவனம் நிலைகுலைந்தது. இதுதான் விபத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது.

வானிலை மோசம்
இயந்திரக் கோளாறு, நாசவேலை அல்லது விமானியின் அலட்சியம் ஆகியவை விபத்துக்கான காரணங்களா என்பது பற்றியும் விசாரிக்கப்பட்டது. ஆனால் இதில் எதுவும் காரணம் இல்லை என்று தெரிய வந்துள்ளது. வானிலையில் ஏற்பட்ட எதிர்பாராத மாற்றத்தால் மேகங்கள் திடீரென ஹெலிகாப்டர் பறந்த பாதையில் குறுக்கே வந்ததன், விளைவுதான் இந்த விபத்து. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications