மீண்டும் பயமுறுத்தும் கொரோனா! ’எதற்கும்’ தயாராக இருங்க.. மாநில அரசுகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு!
டெல்லி : கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசுகள் எதற்கும் தயாராக இருக்குமாறும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவமனைகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வூஹான் மாநிலத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் அதற்கு அடுத்ததாக உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில் அடுத்த இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது.
லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிரபடுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகள் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

மீண்டும் கொரோனா
இந்த நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உலகம் முழுவதும் மீண்டும் தலை தூக்கி இருக்கிறது. சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, பிரான்ஸ் இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதோடு பரவலானதும் அதிகரித்திருக்கிறது. சீனாவில் மட்டும் குறிப்பிடத்தக்க வகையில் புதிய பாதிப்புகள் மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து இருக்கிறது. கொரோனாவின் மாறுபட்ட வேரியன்டான ஓமைக்ரான் பிஎஃப் 7 காரணமாக சீனாவில் பாதிப்பு மீண்டும் அதிகரித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் இந்தியாவிலும் நான்கு பேருக்கு இந்த புதிய வகை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய சுகாதாரத் துறை
இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் ஆன்லைனில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில் மாநில அரசுகள் எதற்கும் தயாராக இருக்குமாறும், கொரோனா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவமனைகளை தயாராக வைத்துக் கொள்ள வேண்டும் என மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

மாநில அரசுகளுக்கு கடிதம்
அந்த கடிதத்தில்,"கடந்த சில வாரங்களில் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக குறைந்து வரும் வழக்குகள் தொடர்ந்து குறைந்தே வருகின்றன. தற்போது நாடு முழுவதும் சராசரியாக 153 புதிய வழக்குகள் பதிவாகி வருகிறது வரவிருக்கும் பண்டிகை காலம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு நோய் பரவும் அபாயத்தை குறைக்க தேவையான நடவடிக்கைகள் மற்றும் ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். முகக் கவசம் அணிவது தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் கிருமி நாசினி உபயோகப்படுத்துவது ஆகியவற்றை கடைபிடிக்குமாறு பொதுமக்களை அறிவுறுத்த வேண்டும்.

சோதனைகள் அதிகரிக்க வேண்டும்
கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு இன்புளுயன்சா மற்றும் கடுமையான சுவாச நோய் வழக்குகளை கண்டறிந்து அது குறித்து மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். ஆர்டிபிசிஆர் மற்றும் ஆன்டிஜன் சோதனைகளை மாவட்ட அளவில் உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டால் முழு மரபணு வரிசைக்கான சோதனைகளை செய்ய வேண்டும் அவ்வாறு புதிய மாறுபாடுகள் ஏதேனும் இருந்தால் அதனை உடனடியாக மத்திய அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும். மருத்துவமனைகளில் மருத்துவ பணியாளர்களின் எண்ணிக்கை மற்றும் படுக்கை வசதிகள் ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும். பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதையும் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துவதையும் உறுதி செய்ய வேண்டும்.

பண்டிகைக் காலம்
வரவிருக்கும் விழாக்களுக்கான ஆயத்தத்தைப் பொறுத்தவரை, மக்கள் கூடும் இடங்களில் , கூட்ட நெரிசலைத் தவிர்ப்பதற்கும், போதுமான காற்றோட்டத்தை உறுதி செய்வதற்கும், குறிப்பாக உள்ளரங்க நிகழ்வுகளில் முக கவசத்தை அணிவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது அவசியம். கொரோனா கட்டுப்பாட்டை பொறுத்தவரை அனைவருக்கும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications