டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்த 10 மாநிலங்களுக்கு மிக மிக கவனம் தேவை.. தளர்வுகள் கொடுக்க கூடாது.. மத்திய அரசு அதிரடி வார்னிங்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மீண்டும் கொரோனா வேகம் எடுக்க தொடங்கி இருக்கிறது. கேரளாவில் மட்டும் நாட்டின் மொத்த பாதிப்பில் 50% இருக்கிறது. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களிலும் தொற்றின் வேகம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் கேரள, மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, ஒடிசா, அசாம், மிசோரம், மேகாலயா, ஆந்திரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் கொரோனா நிலைமையை ஆய்வு செய்ய மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது.

தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு! தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொரோனா.. உடனே களத்தில் இறங்கிய முதல்வர் ஸ்டாலின்.. செம விழிப்புணர்வு!

10 மாநிலங்கள்

10 மாநிலங்கள்

இந்த மாநிலங்களில் சுகாதார அதிகாரிகளால் கொரோனா கண்காணிப்பு, கட்டுப்பாடு மற்றும் மேலாண்மைக்காக எடுக்கப்பட்ட பொது சுகாதார நடவடிக்கைகள் குறிதது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டன. அப்போது மேற்கண்ட இந்த 10 மாநிலங்கள் 10 சதவிகிதத்திற்கு கொரோனா நேர்மறை பாதிப்பு விகிதம்(பாஸிட்டிவ் ரேட்) பதிவாகி வருவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

46 மாவட்டங்கள்

46 மாவட்டங்கள்

46 மாவட்டங்கள் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான பாஸிடிவ் ரேட் விகிதத்தை காட்டும் அதே வேளையில், 53 மாவட்டங்கள் ஐந்து முதல் 10 சதவிகிதம் வரை பாஸிடிவ் விகிதம் கொண்டுள்ளதாகவும் கொரோனா கண்டறிவதற்கான சோதனையை விரைவுபடுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. இந்த நிலைமையும் எந்த தளர்வும் மேற்கண்ட மாவட்டங்களில் நிலைமையை மோசமடைய வழிவகுக்கும் என்று சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் அழுத்தமாக பதிவு செய்துள்ளார்.

Recommended Video

    கொரோனா மீண்டும் அதிகரிப்பது ஏன் | Dr. Shanthi Ravindranath Explain | Oneindia Tamil
    மக்கள் நடமாட்டத்தை தடுக்கணும்

    மக்கள் நடமாட்டத்தை தடுக்கணும்

    குறிப்பாக தொற்று அதிகமாக உள்ள 10 மாநிலங்களில் மக்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் அல்லது கூட்டத்தை குறைக்க கடுமையான கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த மாநிலங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமான ஆக்டிவ் கேஸ் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இந்த பாதிப்புகள் மற்றவர்களுக்கு பரவாமல் இருக்கத் கண்காணிக்க வேண்டிய அவசியம் என்று வலியுறுதப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் அதிகரிப்பு

    தமிழ்நாட்டில் அதிகரிப்பு

    மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும், வீட்டில் தனிமையில் உள்ளவர்களையும் போதிய மருத்துவ வசதிகள் கொடுத்து கண்காணிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. கேரளாவை பொறுத்தவரை அங்கு தொடர்ந்து பாதிப்பு தினமும் 20,000-க்கும் மேல் பதிவாகி அச்சசத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் தொடர்ந்து இரண்டு நாட்களாக பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    English summary
    10 states including Kerala and Tamil Nadu should be very careful. The federal government has warned that relaxations should not be given
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X