டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துணை நோய் இருப்பவர்களை அதிகமாக கொல்லும் கொரோனா அரக்கன்...ஆய்வில் புதிய பூகம்பம்!!

Google Oneindia Tamil News

டெல்லி: துணை நோய்கள் இருந்து கொரோனா தொற்று ஏற்பட்ட இந்தியர்களில் ஐந்தில் ஒருவர் இறந்து இருப்பதாக புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதாவது. துணை நோய் இருக்கும்போது கொரோனா தொற்று ஏற்பட்டால், 15 மடங்கு இறப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

துணை நோய்களான உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இருதயக் கோளாறு, கிட்னி பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு இருப்பவர்களை கொரோனா தொற்று எளிதில் பாதிக்கும் மற்றும் இறப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்று மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

கொரோனா கோரத்தாண்டவம்.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்! கொரோனா கோரத்தாண்டவம்.. இங்கிலாந்தில் மீண்டும் மின்னல் வேகம்.. அமெரிக்காவில் அதிகரித்த மரணங்கள்!

இறப்பு

இறப்பு

உலகளவில் துணை நோய் இருப்பவர்களுக்கு தொற்று ஏற்பட்டால், இறப்பு அதிகமாக இருக்கும் என்று ஆய்வுகள் ஏற்கனவே உறுதிபடுத்தி உள்ளன. இதுதொடர்பாக இதுவரை புள்ளி விவரங்களை வெளியிடாத மத்திய சுகாதாரத்துறை தற்போது இதை ஒப்புக் கொண்டுள்ளது.

இறப்பு விகிதம்

இறப்பு விகிதம்

முதன் முறையாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த ஜூன் மாதம் வெளியிட்டு இருந்த தகவலில், கொரோனா தொற்று ஏற்பட்டவர்களில் துணை நோய் இருப்பவர்கள்தான் 19.5% பேர் இறந்துள்ளனர். துணை நோய் இல்லாமல் ஆரோக்கியமாக இருந்தவர்களில் 1.6% பேர் இறந்துள்ளனர் என்று தெரிவித்து இருந்தது.

வித்தியாசம்

வித்தியாசம்

மேலும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து இருக்கும் தகவலில், ''துணை நோய் இருப்பவர்களில் 60 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 24.6% பேர் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். இதுவே எந்த நோயும் இல்லாதவர்களில் 20 பேரில் ஒருவர் இறந்து இதன் சதவீதம் 4.8 ஆக இருக்கிறது. 45 மற்றும் 60 வயதுக்குட்பட்டவர்களில் துணை நோய் இருந்து கொரோனா ஏற்பட்டவர்களின் இறப்பு விகிதம் 13.9%ஆகவும், எந்த நோயும் இல்லாதவர்களில் இறப்பு விகிதம் 1.5 ஆகவும் இருந்துள்ளது. 45 வயதுக்கு கீழ் துணை நோய் இருப்பவர்களின் இறப்பு விகிதம் 8.8 ஆகவும், எந்த நோயும் இல்லாதவர்களில் இறப்பு விகிதம் 0.2 ஆகவும் இருக்கிறது.

அதிகபட்சம்

அதிகபட்சம்

நாட்டில் 88% இறப்பு 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடமும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இறப்பு 53%மும், ஆண்கள் அதிகபட்சமாக 70% இறந்துள்ளனர்'' என்று தெரிவித்துள்ளது.

காரணம்

காரணம்

துணை நோய் இருப்பவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், தொற்று நோயில் இருந்து மீட்டு கொண்டு வருவதில் சிக்கல் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறி வருகின்றனர். பிற நோய் இருந்து கொரோனா ஏற்படும்போது அந்த தொற்றில் இருந்து மீட்டு கொண்டுவருவதும் மருத்துவர்களுக்கு சவாலாக இருக்கிறது. இதற்குக் காரணம் இந்த நோய்க்கு இன்னும் சரியான மருந்து இல்லாததுதான்.

English summary
Centre reveals comorbid patients one in five dies in India for coronavirus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X