டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நீங்கள் N-95 ரக முக கவசங்களை பயன்படுத்துகிறீர்களா? மத்திய அரசு முக்கிய எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: வால்வு வைத்த N-95 ரக முககவசங்கள் கொரோனா தொற்று பரவலை தடுப்பதில்லை என மத்திய அரசு எச்சரித்துள்ளது.

Recommended Video

    N95 mask கொரோனா வைரஸை தடுப்பதில்லை - மத்திய அரசு

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் 37,148 பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் இந்தியாவில் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 11,55,191ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஒரே நாளில் 587 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கையானது 28,084 ஆக அதிகரித்துள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதலே கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, வெளியில் செல்லும் போது கட்டாயம் அனைவரும் அல்லது முகக் கவசங்களை (மாஸ்க்) அணிய வேண்டும் மத்திய மற்றம் மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. சிலர் துணியால் ஆன முககவசத்தையும், சிலர் N-95 ரக மாஸ்குகளையும் அணிகிறார்கள்.

    பருவமழை சீசன்.. மீனவர்கள் இறந்த பின் பல லட்சங்கள் வேண்டாம்.. உயிரை காக்கும் கருவிகள் வேணும்.. கமல்பருவமழை சீசன்.. மீனவர்கள் இறந்த பின் பல லட்சங்கள் வேண்டாம்.. உயிரை காக்கும் கருவிகள் வேணும்.. கமல்

    உண்மை வேறு

    உண்மை வேறு

    இந்நிலையில் வால்வ் வைத்த N-95 ரக மாஸ்க்குகள் தான் கொரோனாவை தடுக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. இதனால் அந்த மாஸ்குகளை அணிவதை மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். ஆனால் கள உண்மை வேறாக உள்ளது.

    கொரோனாவை தடுக்காது

    கொரோனாவை தடுக்காது

    ஆனால் வால்வ் வைத்த N-95 ரக மாஸ்க்குகள் கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதில்லை என்று மத்திய அரசு. தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறையின் பொது சுகாதார சேவைகளுக்கான இயக்குநர், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச சுகாதாரத் துறை செயலர்கள் மற்றும் சுகாதாரத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

    தொற்றை தடுக்காது

    தொற்றை தடுக்காது

    அதில் அவர், "வால்வ் வைத்து பயன்படுத்தப்படும் N-95 மாஸ்க்குகள், கொரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த எடுக்கப்படும் நடவடிக்கைகளை மட்டுப்படுத்துகிறது. ஏனெனில் இந்த முககவசங்கள் தொற்றுப் பரவலை தடுப்பதில்லை. எனவே, இந்த பாதிப்புகளை கவனத்தில் கொண்டு N-95 முகக் கவசங்கள் தவறாக பயன்படுத்துப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    எப்படி பயன்படுத்துவது

    எப்படி பயன்படுத்துவது

    முககவசங்களை அணியும் மக்கள் தினமும் அதை துவைக்க வேண்டும். பருத்தியாலான துணியில் முகக் கவசம் செய்தால் நல்லது. முகக் கவசமானது, எந்த வண்ணத்தில் வேண்டுமானாலும் இருக்கலாம் . ஆனால் அதே நேரத்தில் 5 நிமிடமாவது கொதிக்கும் நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும். நீரில் உப்பு சேர்த்து அலசினால் நல்லது . எப்போதும் உங்கள் முகக் கவசங்களை இன்னொரு நபருடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் தனித் தனி முகக் கவசங்களைப் பயன்படுத்த வேண்டும். முகக் கவசங்களைப் பயன்படுத்தும் முன் கைகளை நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். முகக் கவசம் ஈரமானால் புதிதான ஒன்றைப் பயன்படுத்த வேண்டும்" என்று அரசு மக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.

    English summary
    The Director-General of Health Services (DGHS) in the Ministry of Health has written to all states and union territories warning against the use of N-95 masks with valved respirators by people, saying these do not prevent the virus from spreading out
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X