டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வாவ்.. அழகோ அழகு!.. நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும்?.. அட்டகாசமாக 3டி படம் அனுப்பிய ஆர்பிட்டர்!

Google Oneindia Tamil News

டெல்லி: நிலவின் மேற்பரப்பு எப்படி இருக்கும் என்பது குறித்து முப்பரிமாண புகைப்படத்தை நிலவை சுற்றிக் கொண்டிருக்கும் ஆர்பிட்டர் அனுப்பியுள்ளது.

நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ சந்திரயான் 2 என்ற விண்கலத்தை அனுப்பியது. இந்த நிலையில் செப்டம்பர் 5-ஆம் தேதி நிலவில் லேண்டர் மெதுவாக தரையிறங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது இஸ்ரோவுடனான தொடர்பை லேண்டர் துண்டித்து கொண்டது.

இதனால் அதன் நிலை தெரியாமல் விஞ்ஞானிகள் சோகமடைந்தனர். இதையடுத்து நிலவை சுற்றி வந்த ஆர்பிட்டர், நிலவில் சாய்வாக விழுந்திருந்த லேண்டர் குறித்த புகைப்படங்களை அனுப்பியது. இதனால் மெதுவாக தரையிறங்குதலுக்கு பதிலாக வேகமாக லேண்டர் தரையிறங்கியதை விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.

பாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணைபாத்திமா லத்தீப் தற்கொலை.. மத்திய குற்ற பிரிவுக்கு அதிரடி மாற்றம்..உயர் அதிகாரிகள் தலைமையில் விசாரணை

மனிதர்கள்

மனிதர்கள்

பின்னர் லேண்டருடனான சிக்னலை பெற முயற்சித்தனர். எனினும் அது முடியவில்லை. இதையடுத்து நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தில் இஸ்ரோ கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டரின் ஆயுள் காலத்தை இஸ்ரோ நீட்டித்தது.

பூமிக்கு

பூமிக்கு

அந்த ஆர்பிட்டரில் டெரைன் கேமரா, எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சூரியசக்தி எக்ஸ்ரே மானிட்டர், இரட்டை அதிர்வலை கொண்ட ரேடார் உள்பட 8 கருவிகள் உள்ளன. இந்த கருவிகள் தான் நிலவு குறித்த பல்வேறு தகவல்களை பூமிக்கு அனுப்பி வருகின்றன.

3டி படம்

3டி படம்

ஆர்பிட்டரில் உள்ள டெரைன் கேமரா நிலவின் மேற்பரப்பை தெளிவாக படம் பிடித்து அனுப்பியுள்ளது. அதில் பள்ளங்களும் மேடுகளும் இருப்பது நன்றாகவே தெரிகிறது. இந்த படம் முப்பரிமானமாக எடுக்கப்பட்டது.

மேற்பரப்பு

இந்த புகைப்படத்தை இஸ்ரோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இதை மக்கள் பார்த்து மகிழ்கின்றனர். இஸ்ரோவின் இந்த ட்வீட் வைரலாகி வருகிறது. நிலவின் ஒரு பக்கத்தையே தினமும் ரசிக்கிறோம், மேற்பரப்பென்றால் சும்மாதானா!

English summary
Chandrayaan -2: ISRO releases the 3D images of Moon's surface which was caught by Orbiter's Terrain Camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X