ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதிக்காக ஐநாவில் "போராடிய" சீனா! பின்னணியில் இவ்வளவு மேட்டரா? யார் இந்த ரவூப்?
டெல்லி: பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்காக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானம் சீனாவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு போதிய ஆதாரங்களை சீனா கோரியிருந்த நிலையில், ரவூப் மீதான குற்றச்சாட்டுகளை இந்தியா பட்டியலிடத் தொடங்கியுள்ளது.

ரவூப்-ஐ சர்வதேச பயங்கரவாதியாகவும், அவர் மீது உலக நாடுகள் தடை விதிக்க வேண்டும் என்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ள 15 நாடுகளில் 14 நாடுகள் ஒப்புதல் அளித்த நிலையில் சீனா மட்டும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை.
சமீபத்தில் நடைபெற்ற ஐநாவின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி அப்துல் ரவூப் மீது பொருளாதார தடைகளை விதிக்கவும், அவரை தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக அறிவிக்கவும் இந்தியா மற்றும் அமெரிக்கா தரப்பில் தீர்மானம் முன்மொழியப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலின் உறுப்பினர் நாடுகளாகிய, 15 நாடுகளில் 14 நாடுகள் ஒப்புதல் அளித்தது. ஆனால் சீனா மட்டும் இந்த குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரங்களை கேட்டு தீர்மானத்தை நிறுத்தி வைத்தது.
இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் குறித்த ஆதாரங்களை இந்திய தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. ரவூப் பாகிஸ்தானில் பஹவல்பூர் மற்றும் கராச்சியில் என நான்கு பகுதியில் குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருகிறார். மேலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் துணைத் தலைவராகவும், நிதி மற்றும் நிர்வாகத் தலைவராகவும், அவர் குழுவின் அனைத்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கும் பொறுப்பாளராக உள்ளார். மட்டுமல்லாது, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் பொதுக் கவுன்சில் உருப்பினராகவும் உள்ளார் என அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2001ம் ஆண்டு இந்திய நாடாளுமன்ற தாக்குதல் சம்பவம் மற்றும் 2003ல் பாகிஸ்தானில் அப்போதைய அதிபர் முஷாரப் மீதான கொலை முயற்சிக்கு மூளையாக செயல்பட்டவர் மசூத் அசார் ஆவார். இவர் ரவூப் அசாரின் சகோதரர் ஆவார். இந்த சம்பவங்களுக்க பின்னர் பாகிஸ்தான் பாதுக்காப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு ரகசிய சிறையில் அடைக்கப்பட்டார். இவர் செயல்பாட்டில் இருந்த காலங்களில் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தலைவராக நீடித்து வந்தார். பின்னர் இவரைத் தொடர்ந்து, இவரது சகோதரர் ரவூப் அசார் தலைவராக பொறுப்பேற்று செயல்பட்டு வருகிறார்.
கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆப்கானிஸ்தானில் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு மூளையாக செயல்பட்டவர். அதேபோல ஜம்மு காஷ்மீரில் நடந்த பல பயங்கரவாத தாக்குதல்களுக்கும் இவர் பொறுப்பேற்றுள்ளார். இந்த அமைப்பு கடந்த 2001ல் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 2019 பிப்ரவரியில் நடந்த புல்வாமா தாக்குதல் சம்பத்தின் மீதான NIA குற்றப்பத்திரிக்கையில் ரவூப் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications