டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கற்களை வீசி,பயங்கர ஆயுதங்களுடன்.. கொடூரமாக மோதிக்கொண்ட இந்திய-சீன ராணுவம்..கல்வான் மோதல் ஷாக் வீடியோ

Google Oneindia Tamil News

டெல்லி: இந்திய - சீன ராணுவத்திற்கு இடையே எல்லை விவகாரத்தில் இன்னும் உடன்பாடு எட்டப்படாத நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட கல்வான் மோதல் தொடர்பான வீடியோவை சீனா வெளியிட்டுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

இந்திய எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தானுடன் மட்டுமில்லை, சீனா உடனும் கடந்த சில ஆண்டுகளாகவே மோதல் போக்கே நிலவி வருகிறது. இதனால் எல்லையில் பதற்றமான சூழல் ஏற்பட்டிருந்தது.

குறிப்பாக கல்வான் மோதலுக்குப் பிறகு நிலைமை மேலும் மோசமாகிவிட்டது. இரு நாட்டு ராணுவங்களும் எல்லையில் தொடர்ந்து ராணுவத்தைக் குவித்து வருகிறது.

300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா300 பெண்களை சீரழித்த காமகொடூரன்.. வீடியோ காட்டி மிரட்டி மிரட்டியே.. அதிர்ச்சியில் ஆந்திரா

அமைதி பேச்சுவார்த்தை

அமைதி பேச்சுவார்த்தை

எல்லையில் ஏற்பட்டுள்ள இந்த பதற்றமான சூழலைத் தணிக்க இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதுவரை 12கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளன. ஆனால், அதில் பெரியளவில் உடன்பாடு ஏற்பட்டதாகத் தெரியவில்லை. ஒரு சில இடங்களைத் தவிர மற்ற இடங்களில் ராணும் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை. இந்தச் சூழலில் கல்வான் மோதல் தொடர்பான வீடியோ ஒன்றைச் சீனா வெளியிட்டுள்ளது.

கல்வான் மோதல்

கல்வான் மோதல்

கடந்த ஆண்டு ஜூன் 15 தேதிகளில் இந்த மோதல் நடந்தது. இந்தியாவின் எல்லையில் சீனா கூடாரம் அமைத்ததாகவும் அதை நீக்க இந்திய வீரர்கள் முயன்ற போது மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் இந்தியாவில் இருந்து 20 வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சீனா நான்கு வீரர்கள் மட்டுமே உயிரிழந்துள்ளதாகக் கூறியுள்ளது. ஆனால், உண்மையில் சீன தரப்பில் கூடுதலாக உயர் தேசம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் அதிகம் என்றே பாதுகாப்பு வல்லுநர்கள் மதிப்பிடுகின்றனர்,

வீடியோ வெளியீடு

வீடியோ வெளியீடு

கடந்த 1962ஆம் ஆண்டு ஏற்பட்ட போருக்குப் பிறகு எல்லையில் ஏற்பட்ட மோசமான தாக்குதல் இதுதான். இது தொடர்பான வீடியோவை தான் சீனா இப்போது வெளியிட்டுள்ளது. அதில் ராணுவ கூடாரம் ஒன்றைச் சிலர் நீக்க முயல்வதும் அப்போது சீன ராணுவத்தினர் அவர்களுடன் மோதுவதும் பதிவாகியுள்ளது. கல்வான் நதி அருகே இந்தியா ராணுவத்தை நோக்கி கற்களை வீசுவது போலவும் அந்த வீடியோவில் உள்ளது. மேலும், காயமடைந்த வீரர்களைக் குளிர்ச்சியான நீர் நிறைந்த கல்வான் நதியில் சீன ராணுவம் சிரமப்பட்டுத் தூக்கிச் செல்வது போன்ற காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

12ஆம் கட்ட பேச்சுவார்த்தை

12ஆம் கட்ட பேச்சுவார்த்தை

இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகளுக்கு இடையே ஆகஸ்ட் 1ஆம் தேதி தான் 12ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. சுமார் 9 மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையில் ஒரே நேரத்தில் இரு நாடுகளும் ஒன்றாக ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என இந்தியா சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பரஸ்பரம் இரு நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இந்தியா வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், இதில் எந்தவொரு முக்கிய முடிவும் எடுக்கப்படவில்லை.

மீண்டும் பதற்றம்

மீண்டும் பதற்றம்

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு இரு நாட்டு ராணுவமும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையிலும்கூட எல்லை பிரச்சினைக்கு விரைவாகத் தீர்வு காணப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த கூட்டறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே கல்வான் மோதல் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இது பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாகப் பாதுகாப்பு வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

அமைச்சர்கள் சந்திப்பு

பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு எல்லையில் பாங்கோங் ஏரியில் மட்டும் ராணுவம் திரும்பப் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யி-யை சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இந்த மீட்டிங்கில் தான் எல்லையில் அமைதி திரும்பத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் இரு நாட்டின் ராணுவ தளபதிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை மீண்டும் தொடங்கப்பட வேண்டும் என்பதையும் இரு நாட்டு அமைச்சர்களும் ஒப்புக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

English summary
China have released footage of the clashes which took place between Indian and Chinese soldiers in the Galwan Valley in Ladakh in June last year. The clashes between Indian and Chinese troops, the worst since the 1962 war, took place on June 15 last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X