டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இலங்கையை போல பொருளாதார பேரழிவில் வங்கதேசம்.. வளைத்து போட சீனா வியூகம்.. எச்சரிக்கையுடன் இந்தியா!

Google Oneindia Tamil News

டெல்லி: இலங்கையைப் போல பொருளாதார பேரழிவில் வங்கதேசம் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதனை தமக்கு சாதகமாக்க சீனா வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான எதிர்நடவடிக்கைகளில் இந்தியாவும் உன்னிப்பாக இருந்து வருகிறது.

Recommended Video

    Indian Ocean தான் குறி! China Spy Ship-க்கு முன்பாக Sri Lanka போன Indiaவின் Gift Dornier228

    கொரோனாவுக்கு முந்தைய காலம் வங்கதேசத்தின் பொருளாதாரத்தில் வசந்த காலமாக இருந்தது. வங்கதேசம் எனும் தேசத்தை உருவாக்கிக் கொடுத்த தெற்காசியாவின் வல்லரசு இந்தியாவை பொருளாதாரத்தில் வளர்ந்த நாடாக வங்கதேசம் உருவெடுத்திருந்தது. 2018-ம் ஆண்டு நமது நாட்டின் பொருளாதார வளர்ச்சி (ஜிடிபி) 6.8%; ஆனால் வங்கதேசத்தின் ஜிடிபி 7.9%.

    வங்கதேசத்தின் பெருமை மிகு இந்த காலம் உலக நாடுகளை நாசமாக்கிய கொரோனா பெருந்தொற்றால் எல்லாமும் தலைகீழாகிப் போனது. கொரோனா பெருந்தொற்று பரவல், ரஷ்யா- உக்ரைன் மோதல்கள் வங்கதேசத்தின் பொருளாதாரத்தை மிக மோசமாகவே பாதித்துவிட்டது. அதனால்தான் இப்போது இலங்கை, பாகிஸ்தான் வரிசையில் சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்-ன் உதவிக்காக தவித்துக் கொண்டிருக்கிறது. சர்வதேச நிதியத்திடம் இருந்து 4.5 பில்லியன் டாலர் கடன் கேட்கிறது வங்கதேசம். இதேபோல உலக வங்கியிடமும் கடனுக்காக கதவுகளை தட்டியிருக்கிறது வங்கதேசம்.

    4 வருட தலைமறைவு.. சூடான பிரெஞ்ச் பிரைஸுக்கு ஆசைப்பட்டு.. போலீசில் சிக்கிய குற்றவாளி!4 வருட தலைமறைவு.. சூடான பிரெஞ்ச் பிரைஸுக்கு ஆசைப்பட்டு.. போலீசில் சிக்கிய குற்றவாளி!

    எரிபொருட்கள் விலை உயர்வு

    எரிபொருட்கள் விலை உயர்வு

    வங்கதேசமானது உணவுப் பொருட்கள், எரிபொருட்களை இறக்குமதி செய்யக் கூடிய நாடு. உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தத்தால் உரங்களுக்கு கடுமையாகப் போராடி வருகிறது வங்கதேசம். இதனால் அந்நாட்டின் வேளாண்துறை மிக மோசமான வீழ்ச்சியை எதிர்கொண்டிருக்கிறது. வங்கதேசத்தின் எரிபொருட்கள் விலையும் 50% அதிகரித்துவிட்டன. மின்சார விநியோகத்தில் கட்டுப்பாடு, அரசு ஊழியர்கள் வெளிநாடு செல்ல தடை, அரசு வாகனங்கள் வாங்க தடை என பல்வேறு கட்டுப்பாடுகளை இடைவிடாமல் வங்கதேசம் செயல்படுத்தி வருகிறது.

    அன்னிய செலாவணி வீழ்ச்சி

    அன்னிய செலாவணி வீழ்ச்சி

    வங்கதேசத்தின் அன்னிய செலாவணி கையிருப்பானது மிக மோசமாக குறைந்துவிட்டது. வங்கதேசத்தின் அன்னிய செலாவணி இருப்பானது 48 பில்லியன் டாலரில் இருந்து 39 பில்லியன் டாலராக குறைந்துவிட்டது. இந்த நிலைமையால் 5 மாதங்களுக்குதான் இறக்குமதியை வங்கதேசத்தால் தாக்குப் பிடிக்க முடியும். அதன்பின்னர் இலங்கையைப் போல தத்தளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு வங்கதேசம் தள்ளப்பட்டுவிட்டது.

    வங்கதேச தேர்தல்

    வங்கதேச தேர்தல்

    வங்கதேசத்தில் அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி அந்நாட்டு அரசுக்கு பெரும் பின்னடைவாகிவிட்டது. வங்கதேசத்தின் எதிர்க்கட்சிகள் ஒருசேர அரசாங்கத்தின் மீது பாய்ந்து பாய்ந்து விமர்சனங்களை முன்வைக்கின்றன. வங்கதேசத்தின் ஏற்றுமதியும் மோசமான பாதிப்பை எதிர்கொண்டிருக்கிறது. அமெரிக்க டாலருக்கு எதிரான வங்கதேச நாணய மதிப்பும் வீழ்ச்சி அடைந்துவிட்டது. கொரோனா பரவல் காலத்தில் வெளிநாட்டு வங்கதேச நாட்டவர்கள் வேலை இழப்பை எதிர்கொண்டனர். இதனால் அவர்கள் மூலமாக கிடைத்து வந்த கணிசமான அன்னிய செலாவணியும் குறைந்துவிட்டது.

    சீனாவின் சேட்டை

    சீனாவின் சேட்டை

    இலங்கைக்கு கடன் கொடுத்து அதன் நிலப்பகுதிகளை கபளீகரம் செய்கிற பாணியை சீனா வங்கதேசத்தின் பக்கமும் திருப்பிவிட்டுள்ளது. இலங்கையின் அம்பாந்தோட்டா துறைமுகத்தை சீரமைத்து மேம்படுத்த பெருமளவு கடனுதவி வழங்கியது சீனா. இந்த கடனை திருப்பிச் செலுத்த முடியாத இலங்கை, சீனாவுக்கே 99 ஆண்டுகளுக்கு அத்துறைமுகத்தை தாரைவார்த்து கொடுத்தது. சீனாவிடம் கடன் பெறும் போது இலங்கையிடம் இருந்து வங்கதேசம் பாடம் பெற்றாக வேண்டும் என்கிற எச்சரிக்கையும் முன்வைக்கப்பட்டு வருகிறது.இந்தியாவின் அண்டைநாடான இலங்கையின் பொருளாதார சீரழிவை தமது பூகோள அரசியல் நலனுக்காக சீனா பயன்படுத்துவதில் படுமுனைப்பாக இருக்கிறது. இதன் ஒருபகுதியாகவே இலங்கைக்கு உளவு கப்பலை சீனா அனுப்பி வைத்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. இதே வியூகத்தையும் இந்தியாவின் மற்றொரு அண்டை நாடான வங்கதேசத்தில் அமல்படுத்தவும் சீனா முயற்சிக்கிறது. இந்தியா இதனையும் எச்சரிக்கையுடன் கையாண்டு வருகிறது.

    English summary
    According to the experts reports China's eye on Bangladesh's economic crisis like Srilanka.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X