டெல்லி விமான நிலையத்தில் சினிமா பாணியில் சம்பவம்.. இண்டிகோ விமானத்தின் கீழே "சர்ருன்னு" சென்ற கார்!
டெல்லி: டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில், புறப்பட தயாராக இருந்த விமானம் மீது சினிமா பாணியில் விறுட்டென கார் ஒன்று மோத முயன்ற சம்பவம் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே விமானங்கள் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.
இதேபோல் அதிர்ஷ்டவசமாக பெரும் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் அடிக்கடி அரங்கேறும் இத்தகைய சம்பவங்கள் விமானப் பயணிகள் மத்தியில் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

சினிமா பாணியில். .
இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில், நின்று கொண்டிருந்த இண்டிகோ விமானத்தின் மீது கார் ஒன்று மிக நெருக்கமாக சென்று மோதுவது போல் நின்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பாணியில் இந்த சம்பவம் நடந்தது விமான பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லி விமான நிலையத்தில் டி2 முனையத்தில் இருந்து இண்டிகோ விமானம் பாட்னவிற்கு புறப்பட தயராக இருந்தது. இந்த விமானம் புறப்பட சில நிமிடங்களே எஞ்சியிருந்ததாக சொல்லப்படுகிறது.

விறுட்டென வந்த கார்
அப்போது விறுட்டென வேகமாக வந்த ஒரு மாருதி ஸ்விஃப்ட் டிசையர் கார், விமானத்தை நோக்கி வேகமாக சென்றது. விமானத்தின் மூக்கு பகுதி என்று சொல்லப்படும் முன்பகுதியை நோக்கி சென்ற அந்த கார், விமானத்தின் முன் சக்கரத்தை ஒட்டிச்சென்று நின்றது. சினிமா காட்சிகள் போல நடந்த இந்த சம்பவம் அங்கு இருந்தவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் எந்த சேதமும் ஏற்படவில்லை. உடனடியாக விரைந்து சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் காரின் டிரைவரை பிடித்து விசரணை நடத்தினர்.

மது குடித்து விட்டு ஓட்டவில்லை
கோ பர்ஸ் விமான நிறுவனத்திற்கு சொந்தமான அந்த காரின் டிரைவர் மது போதையில் காரை இப்படி அத்துமீறி ஓட்டிச்சென்றாரா? என்ற சந்தேகத்தில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவுகள் நெகட்டிவ் என வந்துள்ளது. அதாவது, டிரைவர் மது போதையில் காரை அத்துமீறி ஓட்டவில்லை என்பது தெரியவந்துள்ளது. எனினும் இந்த பரபரப்புக்கு மத்தியில் இண்டிகோ விமானம் எந்த தாமதமும் இன்றி திட்டமிட்டபடி புறப்பட்டுச் சென்றது. டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இண்டிகோ நிறுவனமோ, கோ பர்ஸ்ட் நிறுவனமோ இதுவரை வாய் திறக்கவில்லை.

விசாரணை நடத்தப்படும்
டெல்லி விமான நிலையத்தின் டி2 முனையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையம் மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் ஒன்றாகும். உள்நாடு மற்றும் வெளிநாட்டை சேர்ந்த பயணிகள் என தினமும் ஆயிரக்கணக்கான பேர் வந்து செல்லும் விமான நிலையத்தில் நடைபெற்ற இந்த சம்பவம், அங்குள்ள பாதுகாப்பு சூழல் குறித்த கேள்விகளை எழுப்புவதாக பயணிகள் மத்தியில் பேசப்பட்டது.
-
குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் முதல்வர் விஜய் சந்திப்பு! காங். தலைவர்களை சந்திப்பாரா? -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள்












Click it and Unblock the Notifications