டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டெல்லியில் பயங்கர டிராபிக் ஜாம் .. ஸ்தம்பித்தது போக்குவரத்து.. பல மெட்ரோ நிலையங்கள் மூடல்

Google Oneindia Tamil News

Recommended Video

    டெல்லியில் பயங்கர டிராபிக் ஜாம் ..

    டெல்லி: குடியுரிமை சட்ட போராட்டங்களால் டெல்லியின் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. போராட்டம் நடத்தக்கூடும் என்ற முன்னெச்சரிக்கையால் சாலைகளில் போலீசார் தடுப்பு அமைத்து சோதனை செய்ததால் டெல்லி- குர்கான் சாலையில் மிக மோசமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    டெல்லியின் ஜாமியா நகர், சீலாம்பூர், பிரிஜ்புரி உள்பட பகுதிகளில் குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணர்வர்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்நிலையில் மத்திய டெல்லியில் உள்ள செங்கோட்டைக்கு அருகே 144 தடைவிதிக்கப்பட்டுள்ளது. அங்கு கூட்டங்களை நடத்த காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். ஏற்கனவே அங்கு பேரணிகளில் ஈடுபட உள்ளதாக அறிவித்து அங்கு வந்த பல போராட்டக்கார்களை தடுத்துவைத்தனர்.

    டெல்லியில் போராட்டம் தீவிரம்.. செல்போன் சேவை முடக்கம்.. இன்டர்நெட் மட்டுமல்ல, வாய்ஸ் அழைப்பும் டெல்லியில் போராட்டம் தீவிரம்.. செல்போன் சேவை முடக்கம்.. இன்டர்நெட் மட்டுமல்ல, வாய்ஸ் அழைப்பும்

    கம்யூனிஸ்ட் போராட்டம்

    கம்யூனிஸ்ட் போராட்டம்

    முன்னதாக குடியிருப்பு திருத்தச் சட்டத்தை எதித்து இன்று மதியம் 12 மணியளவில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மண்டி மாளிகையில் இருந்து ஜந்தர் மந்தர் வரை போராட்டம் நடத்த அனுமதி கோரிய நிலையில் காவல்துறையால் அனுமதி வழங்கப்படவில்லை.

    போராட்டக்காரர்கள்

    எனவே இடதுசாரிக் கட்சிகள் மற்றும் பிற குழுக்கள் பேரணிக்கு வருவதை தடுக்கும் வகையில் டெல்லி மாநகரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு காரையும் போலீசார் பரிசோதனை செய்தனர்.

    பொதுமக்கள் வேதனை

    இதன் காரணமாக டெல்லி- குர்கான் சாலையில் மிக மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பல கிலோமீட்டருக்கு வாகனங்கள் அணி வகுத் நின்றன. விமான நிலையம் சென்றவர்கள். விமானத்தை பிடிக்காமல் பிடியாமல் தவறிவிட்டனர். அவசர வேலையான சென்றவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    போலீசுக்கு கண்டிப்பு

    போலீசுக்கு கண்டிப்பு

    இது தொடர்பாக டுவிட்டர் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் டெல்லியின் போக்குவரத்து நெரிசல் மற்றும் புகைப்படங்களை பொதுமக்கள் வெளியிட்டு டெல்லி போலீசின் செயலை கண்டித்து வருகின்றனர்.

    இணையம் துண்டிப்பு

    இணையம் துண்டிப்பு

    இது ஒருபுறம் எனில் போராட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக டெல்லியின் சில முக்கிய மெட்ரோ ரயில் நிலையங்களும் மூடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பயணிகள் கடுமையாக பாதிக்கப்பபட்டுள்ளனர். இத்துடன் டெல்லியின் சில முக்கிய பகுதிகளில் இணைய சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளதால் டெல்லியில் பதற்றமும் பரபரப்பும் நிலவுகிறது.

    English summary
    citizenship amendment act protest : Massive jams in many parts of delhi on Thursday morning as the authorities barricaded roads, imposed traffic restrictions
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X