டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்தம்.. அதிமுக, ஜேடியூ மனது வைத்தால் நடக்கும்.. என்ன முடிவு எடுப்பார்கள்?

ராஜ்யசபாவில் இன்று தாக்கலாகும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுகவும், ஐக்கிய ஜனதா தளமும் மனது வைத்தால் தோல்வி அடைய செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Google Oneindia Tamil News

Recommended Video

    குடியுரிமை சட்ட திருத்தம்.. ஏன் இது சர்ச்சையாகிறது?

    டெல்லி: ராஜ்யசபாவில் இன்று தாக்கலாகும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அதிமுகவும், ஐக்கிய ஜனதா தளமும் மனது வைத்தால் தோல்வி அடைய செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் லோக்சபாவில் நிறைவேறியது. இதையடுத்து குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார்.

    இதன் மீதான விவாதம் நாளை 6 மணி நேரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    எப்படி முக்கியம்

    எப்படி முக்கியம்

    இந்த மசோதாவை அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரண்டு கட்சிகளும் நினைத்தால் மட்டுமே நிறைவேற்ற முடியும். அதிமுகவிற்கு அவையில் 11 எம்பிக்கள் பலம் இருக்கிறது. இன்னொரு பக்கம் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு 6 எம்பிக்கள் பலம் இருக்கிறது.

    எவ்வளவு தேவை

    எவ்வளவு தேவை

    ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்ற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. என்டிஏ கூட்டணி சேர்த்தும் நட்பான கட்சிகளின் ஆதரவு சேர்த்தும் பாஜகவிற்கு 129 எம்பிக்கள் ஆதரவு இருக்கிறது. அதிமுக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கினால் இந்த மசோதா நிறைவேறாது.

    மசோதா எப்படி

    மசோதா எப்படி

    லோக்சபாவில் ஐக்கிய ஜனதா தளம் இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்தது. இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்கும்படி நிதிஷ் குமார் உத்தரவிட்டு இருந்தார். இதனால் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குள் பெரிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பிரஷாந்த் கிஷோர், பவன் வர்மா ஆகியோர் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் முடிவை எதிர்த்து உள்ளனர்.

    மசோதா

    மசோதா

    இதனால் கட்சிக்குள் மசோதாவை ஆதரிக்கும் குழு, மசோதாவை எதிர்க்கும் குழு என்று இரண்டு குழுக்கள் உருவாகி உள்ளது. ஆகவே இன்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி ராஜ்யசபாவில் மசோதாவை ஆதரித்து வாக்களிக்குமா, எதிர்த்து வாக்களிக்குமா அல்லது வெளிநடப்பு செய்யுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    அதிமுக எப்படி

    அதிமுக எப்படி

    அதேபோல் இன்னொரு பக்கம் லோக்சபாவில் அதிமுகவின் ஒரு எம்பி இந்த மசோதாவை ஆதரித்து வாக்களித்தார். இதனால் ராஜ்யசபாவிலும் மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அதிமுக இதனால் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. முக்கியமாக ஈழ தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது என்று விமர்சனம் எழுந்துள்ளது .

    முகம் போய்விட்டது

    முகம் போய்விட்டது

    அதிமுக தன்னுடைய மத சார்பற்ற முகத்தை இழந்து வருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா இதை கண்டிப்பாக விரும்ப மாட்டார் என்று பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆகவே அதிமுக கட்சி ராஜ்ய சபாவில் இந்த மசோதாவை ஆதரிக்குமா அல்லது பின்வாங்குமா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    Citizenship Amendment Bill: AIADMK and JDU will play a major role in Rajya Sabha today.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X