டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. முக்கிய கட்சியை உள்ளே இழுக்க பிளான்.. அமித் ஷா ஆடும் நம்பர் கேம்!

இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும்பாலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    Citizenship amendment bill | குடியுரிமை சட்ட திருத்த மசோதா.. முக்கிய கட்சியை இழுக்க திட்டம்

    டெல்லி: இன்று ராஜ்ய சபாவில் தாக்கல் செய்யப்படும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா பெரும்பாலும் வெற்றிபெற வாய்ப்புள்ளது என்கிறார்கள். பாஜகவிற்கு 129 எம்பிக்கள் ஆதரவு அளிக்க வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

    குடியுரிமை சட்ட திருத்த மசோதா இன்று காலை ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்கிறார். இதன் மீதான விவாதம் நாளை 6 மணி நேரம் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குடியுரிமை சட்ட திருத்த மசோதா நேற்று முதல்நாள் லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது.

    இதில், சட்டத் திருத்த மசோதாவுக்கு ஆதரவாக 311 ஓட்டுகளும், எதிராக 80 ஓட்டுகளும் கிடைத்தன. இந்த நிலையில் இந்த மசோதா நிறைவேற அதிக வாய்ப்புள்ளதாக கூறுகிறார்கள். பாஜகவிற்கு அவையில் போதிய பலம் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது.

    எத்தனை தேவை

    எத்தனை தேவை

    ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்ற 121 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. 245 இடங்களை கொண்ட மாநிலங்களவையின் தற்போதைய பலம் 238 ஆகும். இதனால் உறுப்பினர்கள் இருந்தால் மசோதா நிறைவேறும்.

    பாஜக எப்படி

    பாஜக எப்படி

    தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜகவிற்கு 83 எம்பிக்கள் உள்ளனர். பாஜவின் கூட்டணியில் அதிமுக (11), லோக் ஜனசக்தி பார்ட்டி (1), ரிபப்ளிக்கன் பார்ட்டி ஆப் இந்தியா (1), சிரோமணி அகாலி தளம் (3), ஐக்கிய ஜனதா தளம் (6), ஏஜிபி (1), போடோலாந்து பீப்பிள் பிரண்ட் (1), பாமக (1) அனைத்தும் சேர்த்து பாஜகவிற்கு 108 எம்பிக்கள் பலம் உள்ளது.

    ஆதரவு தரும் கட்சிகள்

    ஆதரவு தரும் கட்சிகள்

    இது இல்லாமல் பாஜகவிற்கு ஆதரவு தரும் கட்சிகள் என்றால், பிஜு ஜனதா தளம் (7), சிவசேனா (3), ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் (2), தெலுங்கு தேசம் (2).ஆகவே தற்போது பாஜகவிக்கு 129 எம்பிக்கள் பலம் இருக்கிறது. மசோதாவை நிறைவேற்ற தேவையானதை விட 8 எம்பிக்கள் பாஜகவிற்கு அதிகமாக இருக்கிறார்கள்.

    எளிதாக நிறைவேறும்

    எளிதாக நிறைவேறும்

    இதனால் மசோதா எளிதாக நிறைவேறிவிடும். மசோதாவிற்கு எதிராக 105 எம்பிக்கள் வாக்களிக்க உள்ளனர். காங்கிரஸ் (46), திரிணாமுல் காங்கிரஸ் (13), பகுஜன் சமாஜ் (4), சிபிஐ (1), சிபிஎம் (5), திமுக (5), ஐயூஎம்எல் (1), பிடிபி (2), கேரளா காங்கிரஸ் (1), சமாஜ்வாதி கட்சி (9), டிஆர்எஸ் (6), தேசியவாத காங்கிரஸ்4), ராஷ்டிரிய ஜனதா தளம் (4), ஆம் ஆத்மி (3) மதிமுக (1). ஆகிய கட்சிகள் எதிராக வாக்களிக்கும்.

    பெரிய சிக்கல்

    பெரிய சிக்கல்

    இந்த மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் தற்போது ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த கட்சி ராஜ்யசபாவில் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்குமா என்று கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளம் பின் வாங்கினால் இந்த மசோதா நிறைவேற வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Citizenship Amendment Bill : BJP will play the number game for their support in RS today .
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X