மிரட்டிய ஜோதிமணி? ஓம்பிர்லாவின் அறைக்குள் பெரும் பரபரப்பு.. காங்கிரஸ் எம்பிக்களின் ஆக்ரோஷ வீடியோ
டெல்லி: நாடாளுமன்றத்தில் சபாநாயகர் ஓம்பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாக பேசியதோடு, பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்ததாக காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி உள்பட 20 முதல் 25 எம்பிக்கள் மிரட்டியதாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு இன்று தனது எக்ஸ் வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ மொத்தம் 9 வினாடிகள் உள்ளது.

அதில் சபாநாயகர் ஓம்பிர்லா தனது அலுவலக அறையில் உள்ள இருக்கையில் அமர்ந்துள்ளார். அவரை சுற்றி காங்கிரஸ் எம்பிக்கள் உள்ளன. ஜோதிமணி உள்பட பல எம்பிக்கள் விரல்களை நீட்டி வாதம் செய்கின்றனர்.
சபாநாயகர் அறையில்..
இந்த வீடியோ பற்றி கிரண் ரிஜுஜு, ‛‛சபாநாயகர் அறைக்குள் நுழைந்த 20 முதல் 25 காங்கிரஸ் எம்பிக்கள் சட்டவிரோதமாக வீடியோ எடுத்துள்ளனர். சபாநாயகரை அவதூறாக திட்டி ள்ளனர். பிரதமர் மோடிக்கு மிரட்டல் விடுத்துள்ளனர். எங்களின் கட்சி வாதம் மற்றும் விவாதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளது. உடல்ரீதியிலான மிரட்டலுக்கு நாங்கள் ஒருபோதும் அனுமதிப்பது இல்லை'' என்று கூறியுள்ளார்.
This is the illegal video clip taken by a Congress MP when 20-25 Congress MPs entered the Chamber of Hon’ble Speaker, abused him and threatened Honb'le Prime Minister. Our party believes in debate & discussion and never encourage MPs to threaten physically. https://t.co/bezzALc7D3 pic.twitter.com/iM0a50Z4rg
— Kiren Rijiju (@KirenRijiju) February 12, 2026
வீடியோ வெளியீடு
இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் பாஜகவினர், காங்கிரஸ் கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். வீடியோ வெளியிட்ட பிறகு சம்பவம் பற்றி கிரண் ரிஜுஜு பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
பிரியங்கா காந்தி - கேசி வேணுகோபால்
‛‛20 முதல் 25 எம்பிக்கள் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை திட்டினர். பிரியங்கா காந்தி, கேசி வேணுகோபால் உள்ளிட்டோர் அங்கிருந்து அதனை ஊக்குவித்தனர். நானும் அங்கு இருந்தேன். காங்கிரஸ் கட்சியினரை சமாதானம் செய்தேன். சபாநாயகர் சாப்ட்டான நபர். அதேவேளையில் கடும் நடவடிக்கை எடுக்கக்கூடியவர்''என்று கூறியுள்ளார்.
பிரியங்கா காந்தி மறுப்பு
ஆனால் இந்த சம்பவத்தை காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி முற்றிலுமாக மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛நாங்கள் யாரையும் திட்டவில்லை. அவதூறாக பேசவில்லை. ஒன்று அல்லது 2 எம்பிக்கள் கோபமாகினர். அதனை அவர்கள் வெளிப்படுத்தினர். நானும் அவர்களை ஊக்குவித்ததாக கிரண் ரிஜுஜு கூறியுள்ளார். அது பொய். நான் ஒன்றும் செய்யவில்லை. அமைதியாக தான் இருந்தேன்'' என்றார்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
தற்போது நாடாளுமன்றத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு எதிராக காங்கிரஸ் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் வழங்கி உள்ளது. ராகுல் காந்திக்கு சபாநாயகர் ஓம்பிர்லா பேச அனுமதி கொடுக்கவில்லை என்று இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தொடர்ந்து லோக்சபாவில் காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். கடந்த 4ம் தேதி பிரதமர் மோடி ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேச இருந்த நிலையில் காங்கிரஸ் எம்பிக்கள் அமளியால் ரத்து செய்யப்பட்டது.
அப்போது ஜோதிமணி உள்பட காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டனர். அதுதொடர்பான வீடியோவை கிரண் ரிஜுஜு நேற்று வெளியிட்ட நிலையில் இன்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா அறையில் நடந்த சம்பவ வீடியோவை வெளியிட்டு காங்கிரஸ் எம்பிக்கள் மீது கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications