அக்.16ல் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்.. நிரந்த தலைவர் குறித்து முக்கிய முடிவெடுக்க வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் உயர் முடிவுகளை எடுக்கும் காரியக் கமிட்டிக் கட்டம் வரும் 16-ம் தேதி டெல்லியில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கானதேர்தல் குறித்து விவாதிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அரசியல் சூழல், அடுத்த ஆண்டு நடக்க உள்ள டெல்லி, பஞ்சாப் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது.

காரியக் கமிட்டிக் கூட்டத்தை விரைவாகக் கூட்டக் கோரியும் பல்வேறு விவகாரங்கள் ஆலோசிக்கப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் கூறியும் சமீபத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு, மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியிருந்தார்.

இந்த சூழலில் தான் டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இந்த காரியக் கமிட்டிக் கூட்டம் அக்டோபர் 16ம்தேதி நடக்க உள்ளது. காங்கிரஸ் காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நிரந்தர அழைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

காங்கிரஸ்

காங்கிரஸ்

கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி உள்ளார். ஆனால் கட்சியின் நிரந்தரத் தலைவர் தேவை என்று ஜி-23 தலைவர்கள் நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனவே காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் குறித்து இந்தக் கூட்டத்தில் முக்கியமாக ஆலோசிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

தலைவர் பொறுப்பு

தலைவர் பொறுப்பு

இந்த கூட்டத்தில் மத்திய தேர்தல் குழு உறுப்பினர்கள், காரியக் கமிட்டி உறுப்பினர்கள், நாடாளுமன்ற வாரியத் தேர்தல் உறுப்பினர்கள் குறித்த தேர்தலையும் நடத்துவது குறித்து காரியக் கமிட்டிக் கூட்டத்தில் பேசப்படலாம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்க வேண்டும் என்று குரல்கள் மீண்டும் வலுத்து வருகின்றன. எனவே இதுபற்றியும் காரிய கமிட்டி கூடடத்தில் கோரிக்கைகள் எழுப்பப்படலாம்.

சர்ச்சை கருத்து

சர்ச்சை கருத்து

அண்மையில் காங்கிரஸ் மூத்த கபில் சிபல் கூறும் போது "காங்கிரஸ் கட்சிக்கு நிரந்திரமான தலைவர் வேண்டாம். யார் கட்சியில் முடிவுகளை எடுக்கிறார்கள் என எங்களுக்குத் தெரியவில்லை" ஆதங்கத்தை வெளிப்படுத்தார். பஞ்சாபில் நடந்த குழப்பங்கள் மற்றும் முதல்வர் மாற்றத்தை மனதில் வைத்து இப்படி பேசினார். கபில் சிபல் கருத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் நிர்வாகிகள் அவரின் வீட்டின் முன் போராட்டமும் நடத்தினார்கள்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் அஜெய் மகான் கூறும் போது, "கபில் சிபலுக்கு அங்கீகாரத்தையும், அடையாளத்தையும் அளித்த கட்சியை அவமானப்படுத்தக் கூடாது. அமைப்புரீதியான எந்தப் பின்புலமும் இல்லாத கபில் சிபலுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கியவர் சோனியா காந்தி. இது கட்சியில் உள்ள அனைவருக்கும் தெரியும்" என்று கூறினார்.

தேர்த்ல்

தேர்த்ல்

கடந்த முறை நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில், கொரோனா 2-வது அலையைக் காரணம் காட்டி, உட்கட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிவைக்கப்பட்டது, எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதற்கான தேதியும் குறிக்கப்படவில்லை. ஆதலால், வரும் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் உட்கட்சித் தேர்தல் எப்போது நடத்தப்படும், எப்போது தெரியவரலாம்.

தேர்தல் நேரம்

தேர்தல் நேரம்

இதேபோல் அடுத்த ஆண்டு 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த நேரத்தில் உட்கட்சித் தேர்தல் நடத்துவது தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்பதால் உட்கட்சித் தேர்தல் நடத்துவது தள்ளிவைக்கப்படலாம் என்றும் ஒரு கருத்து காங்கிரஸ் வட்டாரத்தில் சொல்கிறார்கள். எனவே என்ன நடக்கும் என்பது அக்போபர் 16ம் தேதி தான் தெரியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+