டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா.. கவனமாக இருக்க வேண்டும்.. ஆனால் பயப்பட கூடாது.. சார்க் மாநாட்டில் மோடி அறிவுரை!

கொரோனாவிற்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும், ஆனால் பயப்பட கூடாது என்று சார்க் நாடுகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனாவிற்கு எதிராக கவனமாக செயல்பட வேண்டும், ஆனால் பயப்பட கூடாது என்று சார்க் நாடுகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசி உள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க 120 நாடுகளில் பரவி உள்ளது. சீனாவில் தோன்றி தற்போது அங்கு இந்த வைரஸ் வேகம் குறைந்து வருகிறது. ஆனால் மற்ற ஐரோப்பா நாடுகளிலும், ஆசிய நாடுகளிலும் இந்த வைரஸ் வேகம் எடுத்து வருகிறது.

இந்தியாவில் வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சார்க் நாடுகளின் கூட்டமைப்பு உடன் ஆலோசனை நடத்த பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். சார்க் குழுவில் உள்ள தெற்காசிய நாடுகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து கொரோனா குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்து இருந்தார்.

ரசம் சோறு.. கொக்கெய்ன்.. சீன உணவகம்.. கொரோனா குறித்த பகீர் வதந்திகளும்.. ஷாக்கிங் உண்மைகளும்! ரசம் சோறு.. கொக்கெய்ன்.. சீன உணவகம்.. கொரோனா குறித்த பகீர் வதந்திகளும்.. ஷாக்கிங் உண்மைகளும்!

ஆலோசனை செய்தது

ஆலோசனை செய்தது

பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்றுக்கொண்டு இன்று சார்க் நாடுகளுடன் உடன் இந்தியா கொரோனா வைரஸ் குறித்து ஆலோசனை செய்தது. ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவு, நேபால், பாகிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகள் கொரோனா குறித்து ஆலோசனை செய்தது. வீடியோ கான்பிரன்ஸ் மூலம் இந்த நாடுகள் கொரோனா குறித்து ஆலோசனை செய்தது.

சார்க் நெருக்கம்

சார்க் நெருக்கம்

இந்த ஆலோசனையில் பேசிய பிரதமர் மோடி, சார்க் நாடுகள் மிகவும் நெருக்கமானது. நாம் ஒன்று சேர்ந்தால் இந்த வைரஸை பரவுவதை தடுக்க முடியும். இதற்கு எதிராக கடுமையான பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இந்தியாவின் படிப்படியான நடவடிக்கைகள் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த பெரிய அளவில் உதவி உள்ளது.

பாதுகாப்பு முறை

பாதுகாப்பு முறை

இந்த வைரசுக்கு எதிரான பாதுகாப்பு முறைகள், விழிப்புணர்வு பல்வேறு வகைகளில் மக்களிடம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர்களுக்கு இது தொடர்பாக முறையான பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு இது தொடர்பாக முறையான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதற்கான சோதனைகள் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆராய்ச்சி செய்கிறோம்

ஆராய்ச்சி செய்கிறோம்

இந்தியாவில் இதற்காக நிறைய ஆராய்ச்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருக்கும் 1400 இந்தியர்கள் மீட்கப்பட்டு இருக்கிறார்கள். அண்டை நாடுகளுக்கும் இதற்காக உதவி வருகிறோம். மற்ற நாடுகளின் மக்களுக்கும் உதவி வருகிறோம். இந்தியாவில் 150க்கும் குறைவான பேருக்குத்தான் கொரோனா ஏற்பட்டுள்ளது. ஆனால் நாம் அனைத்திற்கும் தயாராகி இருக்கே வேண்டும்.

இந்தியா திட்டம்

இந்தியா திட்டம்

நாம் கவனமாக இருக்க வேண்டும், ஆனால் அச்சப்பட கூடாது. பயப்படாமல் செயல்பட வேண்டும். இதுதான் இந்தியாவின் திட்டம். ஜனவரி பாதியில் இருந்தே நாம் வெளிநாட்டில் இருந்து வரும் மக்களை கண்காணிக்க, சோதிக்க தொடங்கிவிட்டோம். இதற்கான கடுமையான முறைகளை இந்தியா கடைப்பிடித்து வருகிறது என்று பிரதமர் மோடி தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார் .

English summary
Coronavirus: Avoid Knee-Jerk Reactions says PM Modi on SAARC meet today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X