டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா.. மோடி கொடுத்த ஐடியாக்கள்.. வியந்து பாராட்டிய சார்க் தலைவர்கள்.. என்ன விவாதித்தார்கள்?

கொரோனா வைரஸ் குறித்த சார்க் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் திட்டங்களை கேட்டு சார்க் நாட்டின் பிற நாட்டு தலைவர்கள் பெரிய அளவில் பாராட்டி இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா வைரஸ் குறித்த சார்க் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சு மற்றும் திட்டங்களை கேட்டு சார்க் நாட்டின் பிற நாட்டு தலைவர்கள் பெரிய அளவில் பாராட்டி இருக்கிறார்கள்.

கொரோனா வைரஸ் குறித்து இன்று சார்க் நாடுகள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை செய்தது. பிரதமர் மோடியின் அழைப்பின் பெயரில் சார்க் நாடுகள் ஒன்றாக சேர்ந்து இன்று வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆலோசனை செய்தது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவு அதிபர் இமராகிம் முகமது, நேபாள் பிரதமர் கேபி சர்மா, பூடான் அதிகாரி லோட்டேய் டெஷெரிங், வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஆப்கான் பிரதமர் அஸ்ரப் காணி, பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு துணை அதிகாரி ஷாபர் மிர்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

 கொரோனாவை எதிர்கொள்ள அவசர நிதி.. இந்தியா ரூ. 74 கோடி வழங்க முடிவு.. சார்க் ஆலோசனையில் மோடி அறிவிப்பு கொரோனாவை எதிர்கொள்ள அவசர நிதி.. இந்தியா ரூ. 74 கோடி வழங்க முடிவு.. சார்க் ஆலோசனையில் மோடி அறிவிப்பு

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதில் பேசிய பிரதமர் மோடி பல்வேறு முன்னெடுப்புகளை தொடங்கினார். பிரதமர் மோடி இதில் முழுக்க ஆங்கிலத்தில் பேசினார். முக்கியமாக இந்த வைரசுக்கு எதிராக அவசர நிதியாக சார்க் நாடுகள் நிதி அளிக்க வேண்டும். இந்தியா இதற்காக 10 மில்லியன் டாலர் அளிக்கும். சார்க் நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக ஆராய்ச்சி மையங்களை தொடங்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி தனது பேச்சில், நாம் இந்த வைரசுக்கு எதிராக ஒன்றாக இணைய வேண்டும்.

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இதில் பேசிய பிரதமர் மோடி பல்வேறு முன்னெடுப்புகளை தொடங்கினார். பிரதமர் மோடி இதில் முழுக்க ஆங்கிலத்தில் பேசினார். முக்கியமாக இந்த வைரசுக்கு எதிராக அவசர நிதியாக சார்க் நாடுகள் நிதி அளிக்க வேண்டும். இந்தியா இதற்காக 10 மில்லியன் டாலர் அளிக்கும். சார்க் நாடுகள் ஒன்றாக சேர்ந்து இதற்காக ஆராய்ச்சி மையங்களை தொடங்க வேண்டும் என்று கூறினார். இந்த ஆலோசனையில் பிரதமர் மோடி தனது பேச்சில், நாம் இந்த வைரசுக்கு எதிராக ஒன்றாக இணைய வேண்டும்.

அதிகாரிகள்

அதிகாரிகள்

அதேபோல் அரசு அதிகாரிகள் ஒருவர் ஒருவருடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும். அந்தந்த நாடுகளில் இந்த வைரஸ் குறித்து ஆராய்ச்சியை செய்யும் நபர்களை ஒருங்கிணைக்க வேண்டும். அவர்கள் ஒன்றாக சேர்ந்து ஆலோசனை செய்ய வேண்டும். நம்மை போல சார்க் நாடுகளின் ஆராய்ச்சியாளர்கள் ஒன்றாக சேர்ந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் விவாதிக்க வேண்டும், என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

சார்க் நாடு

சார்க் நாடு

பிரதமர் மோடியின் இந்த பேச்சை சார்க் நாட்டின் ஆலோசனையில் கலந்து கொண்ட தலைவர்கள் பெரிய அளவில் வரவேற்றார்கள். ஆப்கானிஸ்தான் பிரதமர் அஷ்ரப் காணி தனது பேச்சில், அவசர நிதி குறித்து பிரதமர் மோடியின் அறிவிப்பை வரவேற்கிறேன். இதற்காக நாம் இணைந்து செயல்பட வேண்டும். இதை நாங்கள் வரவேற்கிறோம் என்று குறிப்புட்டுள்ளார்.

சொன்னார்

சொன்னார்

மாலத்தீவு பிரதமர் இப்ராஹிம் முகமது, கொரோனா பாதுகாப்பில் இந்தியா எங்களுக்கு உதவியது. சீனாவில் இருக்கும் எங்கள் நாட்டு மக்களை மீட்க இந்தியா எங்களுக்கு உதவியது. இந்தியாவிற்கு இதனால் நாங்கள் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பிரதமர் மோடிக்கும் இந்தியாவை சேர்ந்த மக்களுக்கும் நாங்கள் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

இலங்கை அதிபர்

இலங்கை அதிபர்

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இதில் பேசிய போது, தெற்காசியாவில் உள்ள நாடுகள் இந்த வைரசுக்கு ஆலோசனை செய்ய வேண்டும். இதற்கு எதிரான திட்டங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும் . இந்த வைரஸ் வேகமாக பரவுவதை தடுக்க வேண்டும். பாகிஸ்தான் பாகிஸ்தான் பிரதமரின் சிறப்பு துணை அதிகாரி ஷாபர் மிர்ஸா, இந்த வைரசுக்கு எதிராக நாம் துரிதமாக செய்லபட வேண்டும்.

திட்டங்கள்

திட்டங்கள்

சார்க் அமைப்பு மூலம் திட்டங்கள், ஆலோசனைகளை பகிர்ந்து கொள்ள வேண்டும். அறிவியல் தொடர்பான அறிவிப்புகள், தேசிய பாதுகாப்பு திட்டங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். இதில் பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா, பிரதமர் மோடியின் அவசர நிதி உதவி திட்டம் சிறப்பானது. இதை நாம் பின்பற்ற வேண்டும். இந்த ஆலோசனை கூட்டத்தை கூட்டிய பிரதமர் மோடிக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டார்.

English summary
Coronavirus: PM Modi proposes good ideas in the meet, Saarc leaders applaud.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X