டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டிரிக்ட் லாக் டவுன்.. அடுத்த 2 வாரம் "வேற மாதிரி" இருக்கும்.. மத்திய அரசு அதிரடி திட்டம்.. பின்னணி

இந்தியாவில் மேலும் இரண்டு வாரங்களுக்கு லாக் டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் மேலும் இரண்டு வாரங்களுக்கு லாக் டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இந்த வாரங்கள் மிகவும் கடுமையாக லாக் டவுன் விதிகள் அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.

கொரோனா பாதிப்பு தொடர்பாக இன்று பிரதமர் மோடி, மாநில முதல்வர்கள் உடன் ஆலோசனை செய்தார். கொரோனாவை மாநில அரசுகள் எப்படி தடுக்கிறது, எப்படி பணிகளை செய்கிறது என்று பிரதமர் மோடி ஆலோசனை செய்தார்.

தற்போது விதிக்கப்பட்டு இருக்கும் கொரோனா லாக் டவுன் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட்டு உள்ளது. தற்போது உள்ள கொரோனா லாக் டவுன் வரும் ஏப்ரல் 14ம் தேதியோடு முடிவிற்கு வருவது குறிப்பிடத்தக்கது.

கேம் சேஞ்சராக மாறும்.. தென் கொரியாவின் 'கொரோனா' மாடல்.. பிளாஸ்மா தெரபியை கையில் எடுத்த கேரளா! கேம் சேஞ்சராக மாறும்.. தென் கொரியாவின் 'கொரோனா' மாடல்.. பிளாஸ்மா தெரபியை கையில் எடுத்த கேரளா!

 என்ன அறிவுறுத்தல்

என்ன அறிவுறுத்தல்

இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாநில முதல்வர்கள் பலர் லாக் டவுனை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். முக்கியமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட டெல்லி, மகாராஷ்டிரா, ராஜஸ்தான் , தமிழகம், ஆந்திர பிரதேசம், தெலுங்கானா ஆகிய மாநில முதல்வர்கள் லாக் டவுனை நீட்டிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

என்ன கோரிக்கை

என்ன கோரிக்கை

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்தியாவில் கொரோனாவின் ஸ்டேஜ் 3 எப்படி இருக்கும் என்றும் ஆலோசனை செய்து உள்ளனர். ஸ்டேஜ் 3யின் தொடக்க நிலையில் நாம் இருக்கிறோம் என்றும் ஏற்கனவே ஸ்டேஜ் 3 வந்துவிட்டது என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் லாக் டவுனை தீவிரப்படுத்த வேண்டும். ஸ்டேஜ் 3ஐ தடுக்க வேண்டும் என்றால், கடுமையான லாக் டவுன் முறைகளை கொண்டு வர வேண்டும் என்று மாநில முதல்வர்கள் அறிவுரை செய்துள்ளனர்.

நீட்டிக்க முடிவு

நீட்டிக்க முடிவு

இந்த நிலையில் இந்தியாவில் மேலும் இரண்டு வாரங்களுக்கு லாக் டவுன் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இதற்கான அறிவிப்பு நாளை மாலை வரலாம் என்று கூறுகிறார்கள்.இதற்கான அடிப்படை திட்டங்களை மத்திய அரசு தற்போது வகுத்து வருகிறது. இந்த வாரங்கள் மிகவும் கடுமையான லாக் டவுன் விதிகள் அமல்படுத்தப்படும் என்று கூறுகிறார்கள்.

அடுத்த இரண்டு வாரம்

அடுத்த இரண்டு வாரம்

இந்த ஆலோசனை கூட்டம் குறித்து பேசிய கர்நாடக முதல்வர், அடுத்த இரண்டு வாரம் வேறு மாதிரி இருக்கும். கடந்த 3 வாரங்களாக இருந்த லாக் டவுன் போல இருக்காது. இன்னும் கடுமையான விதிகள் பின்பற்றப்படலாம். பிரதமர் மோடி இது பற்றி எங்களிடம் அறிவுரை வழங்கினார். எங்களிடம் தீவிரமாக இருக்கும்படி கூறியுள்ளார். எங்கேயும் விட்டுக்கொடுக்க கூடாது, கடுமையாக விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இது தொடர்பான அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வரலாம். முக்கியமான புதிய லாக் டவுன் விதிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகும், என்று கூறியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளா அரசு எப்படி கொரோனாவை எதிர்கொண்டது என்று ஆலோசனை செய்துள்ளார். அதேபோல் ராஜஸ்தானில் பில்வாரா மாவட்டத்தில் எப்படி கொரோனாவை விரட்டி அடித்தார்கள் என்று ஆலோசனை செய்துள்ளனர்.

கேரளா மாடல்

கேரளா மாடல்

கேரளா, பில்வாரா என்று இரண்டிலும் மிக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. மக்கள் உணவு தேவைக்கு கூட வெளியே வரவில்லை. அதேபோல் அங்கு விரைவான சோதனைகள், விரைவான முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதேபோல் காண்டாக்ட் டிரேசிங் செயல்பாடுகளும் அங்கு மிக தீவிரமாக, அதே சமயம் மிக வேகமாக செய்யப்பட்டது. அங்கு கட்டுப்பாடுகளும் தீவிரமாக இருந்தது.

சமூக பரவல் எப்படி

சமூக பரவல் எப்படி

இந்த நிலையில் அதேபோல் தற்போது இந்தியா முழுக்க தீவிரமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள். இதுதான் சமூக பரவலை தடுக்க ஒரே வாய்ப்பு. பெரும்பாலும் மக்கள் அடிப்படை பொருட்கள் வாங்க கூட வெளியே செல்ல முடியாது. அடிப்படை பொருட்கள் வீட்டிற்கே வரும் வாய்ப்புகள் ஏற்படும், போக்குவரத்து இன்னும் கடுமையாக முடக்கப்படும் என்றும் கூறுகிறார்கள்.

English summary
Coronavirus: The next two weeks' lockdown will be different and hard from the last three weeks in India.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X