இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,338 பேருக்கு கொரோனா.. 164 பேர் பலி!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12,338 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிந்துள்ளது. 223 நாட்களில் மிக குறைவான ஆக்டிவ் கேஸ்கள் இந்தியாவில் தற்போது உள்ளது. 1,76,599 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 164 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். 4,52,485 பேர் இதுவரை கொரோனா காரணமாக இந்தியாவில் பலியாகி உள்ளனர்.

ஆக்டிவ் கேஸ்கள்
இந்தியாவில் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. நேற்று முன் தினம் வரை 15 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வந்தது. ஆனால் நேற்று 13 ஆயிரத்திற்கும் குறைவாக கேஸ்கள் பதிவாகி உள்ளது. இந்தியாவில் இதுவரை மொத்தமாக 3,40,93,387 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 19,452 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 3,34,51,170 பேர் இந்தியாவில் மொத்தமாக டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கொரோனா பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முறையான கொரோனா தடுப்பு நடவடிக்கைள், வேக்சின் முகாம்கள் காரணமாக கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,88,284 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.தமிழ்நாட்டில் புதிதாக 1192 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 35,912 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 26,37,802 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 14,570 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 13 பேர் பலியாகி உள்ளனர்.
Recommended Video

கேரளா
கேரளாவில் ஒரு பக்கம் புயல் வெள்ளம் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் தொடர்ந்து 6 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 6676 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,60,997 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 83,250 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 26,925 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 47,50,293 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 60 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் மூன்றாம் அலை வேகமாக ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு மூன்றாம் அலைக்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 65,93,182 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 28,008 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,39,816 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,21,756 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 27 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,83,673 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 214 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 37,953 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,36,527 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 9164 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 12 பேர் பலியாகி உள்ளனர்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications