டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மெல்ல வேகமெடுக்கும் கொரோனா.. ஒரே நாளில் 39% அதிகம்! இந்தியாவில் வைரஸ் பாதிப்பு அதிகரிக்க காரணம் என்ன

Google Oneindia Tamil News

டெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஓமிக்ரான் 3ஆம் அலைக்குப் பின்னர், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு வெகுவாக கட்டுக்குள் வந்து இருந்தது. கொரோனா வேக்சின் பணிகள் காரணமாக உயிரிழப்புகளும் வெகுவாக கட்டுக்குள் வந்துவிட்டது.

Recommended Video

    5 மாவட்டங்களில் வேகமெடுக்கும் கொரோனா தொற்று.. “உடனே டெஸ்ட் பண்ணுங்க” - ராதாகிருஷ்ணன்

    கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாகவே மீண்டும் மெல்ல உயரத் தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் BA5 வகை கொரோனா வைரசே இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் எனச் சொல்லப்படுகிறது.

     அதிகரிக்கும் கொரோனா.. அலர்ட்டாக இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் அதிகரிக்கும் கொரோனா.. அலர்ட்டாக இருக்க மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

     கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இந்தியாவில் வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நாட்டில் 99 நாட்களுக்குப் பின்னர் தினரசி வைரஸ் பாதிப்பு 7000ஐ தாண்டி உள்ளது. நாட்டில் ஒரே நாளில் 7240 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய வைரஸ் பாதிப்பைக் காட்டிலும் சுமார் 39% அதிகமாகும். நாட்டில் கடந்த மார்ச் 1ஆம் தேதி 7,554 பேருக்கு கொரோனா கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     பாசிட்டிவ் விகிதம்

    பாசிட்டிவ் விகிதம்

    அதேபோல பாசிட்டிவ் விகிதமும் சுமார் 111 நாட்களுக்குப் பிறகு 2%ஐ தாண்டியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7,240 கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் இந்தியாவில் இதுவரை உறுதி செய்யப்பட்ட கொரோனா கேஸ்கள் 4,31,97,522ஆக உள்ளது. இப்போது 8 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ள நிலையில், ஒட்டுமொத்த உயிரிழப்புகள் 5,24,723ஆக உயர்ந்துள்ளது. எட்டு புதிய இறப்புகளில் டெல்லி மற்றும் சத்தீஸ்கரில் இருந்து தலா ஒருவரும் கேரளாவில் இருந்து ஆறு இறப்புகளும் அடங்கும்.

     ஆக்டிவ் கேஸ்கள்

    ஆக்டிவ் கேஸ்கள்

    அதேபோல ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 32,498ஆக அதிகரித்துள்ளது, இது மொத்த வைரஸ் பாதிப்பில் 0.08% ஆகும். அதேபோல கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 98.71%ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் 3,641 உயர்ந்துள்ளது. தினசரி பாசிட்டிவ் விகிதம் 2.13%ஆகவும், வாராந்திர பாசிட்டிவ் விகிதம் 1.31% ஆகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. நோயிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4,26,40,301ஆக உயர்ந்துள்ளது, அதே நேரத்தில் உயிரிழப்பு விகிதம் 1.21%ஆக உள்ளது.

     வேக்சின்

    வேக்சின்

    இந்தியாவில் வேக்தின் பணிகளில் கீழ் 194.59 கோடி வேக்சின்கள் போடப்பட்டு உள்ளது. இந்தியாவின் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கை கடந்த ஆகஸ்ட் 7, 2020இல் 20 லட்சத்தையும், செப்டம்பர் 16, 2020இல் 50 லட்சத்தையும் தாண்டியது.டிசம்பர் 19, 2020இல் அன்று ஒரு கோடியைத் தாண்டியது. அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மே 4இல் இரண்டு கோடி கேஸ்களும் ஜூன் 23இல் மூன்று கோடி கேஸ்களும் பதிவாகி இருந்தது.

    காரணம்

    காரணம்

    கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க ஓமிக்ரான் திரிபுகளே காரணம் எனக் கூறப்படுகிறது. குறிப்பாக ஓமிக்ரான் BA5 கொரோனா இதற்கு முக்கிய காரணமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்தாலும் கூட அது அடுத்த அலையை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்றே ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

    English summary
    Sudden raise of Corona cases in India: (இந்தியாவில் சுமார் 39% அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு) Raise of Coronavirus in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X