டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஆஸ்துமா நோயாளிகளை கொரோனா எளிதில் தொற்றுமா.. ? வாய்ப்பில்லையாம்.. நம்பிக்கை தரும் ஆய்வு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. இந்த நிலையில் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு இந்த நோய்த் தொற்று எளிதாக பரவும் என்ற அச்சம் இருந்து வந்தது. ஆனால் அதற்கான வாய்ப்பு குறைவு என்று புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Recommended Video

    Health tips : மூட்டுவாதம், தோள்பட்டை வலியா.. கொரோனா வந்துடும்னு பயமா..?

    ஆஸ்துமா தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க பொதுவாக பயன்படுத்தப்படும் உள்ளிழுக்கப்பட்ட கார்டிகோஸ்டீராய்டுகள், தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸின் திறனைக் குறைக்கலாம். அதேசமயம், ஆஸ்துமாவுக்காக நாம் பயன்படுத்தும் ஸ்டீராய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து அழற்சியின் அளவை மோசமாக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும் ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களை கொரோனா வைரஸ் கோவிட் 19 எளிதாக தொற்றுவதற்கான அபாயம் இல்லை என்று ரட்ஜர்ஸ் ஆய்வாளர்கள் குழு தெரிவித்துள்ளது.

    கொரோனா நிவாரணம் - தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி கொரோனா நிவாரணம் - தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேசனில் இலவச அரிசி

    வைரஸ் தொற்றுக்கான காரணம்

    வைரஸ் தொற்றுக்கான காரணம்

    வயதான மற்றும் இதய நோய், உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய், நீரிழிவு மற்றும் உடல் பருமன் போன்ற நிலைமைகள் COVID-19 வைரஸ் தொற்றுக்கான முக்கிய காரணிகளாக அறிவிக்கப்படுகின்றன. அதேசமயம், இதில் ஆஸ்துமாவை சேர்க்க முடியாது என்றும் நுரையீரல் பராமரிப்பு மருத்துவரும், ரட்ஜர்ஸ் நிறுவனத்தின் இயக்குனரும் அலர்ஜி மற்றும் மருத்துவ நோயெதிர்ப்பு இதழில் வெளியிடப்பட்ட ஒரு கட்டுரையின் இணை ஆசிரியருமான ரெனால்ட் ஏ. பானெட்டீரி ஜூனியர் கூறினார். ஆஸ்துமா பிரச்சினை இல்லாதவர்களை விட நல்ல உடல் நலத்துடன் கூடிய அதேசமயம், ஆஸ்துமா பிரச்சினை உள்ளவர்களுக்கு குறைந்த அளவிலேயே கொரோனா பாதிப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    சுவாச பிரச்சினை

    சுவாச பிரச்சினை

    ஆஸ்துமா உள்ளவர்கள் தனிப்பட்ட சுகாதாரம் மற்றும் சமூக இடைவெளியை கூடுதலாக கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். அவர்களுக்கு அலர்ஜி பிரச்சினை உள்ளதாலும், சுவாசப் பிரச்சினை உள்ளதாலும் இந்த கூடுதல் விழிப்புணர்வு தேவை. அவர்கள் ஆஸ்துமா மருந்துகளை எடுத்துக்கொள்வதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்பதால் நோய்த் தொற்று என்பது குறைவாகவே இருக்கும்.

    ஸ்டீராய்டு மருந்துகள்

    ஸ்டீராய்டு மருந்துகள்

    ஆஸ்துமா தாக்குதல்களிலிருந்து பாதுகாக்க பொதுவாக பயன்படுத்தப்படும் உள்ளிழுக்கக்கூடிய கார்டிகோஸ்டீராய்டுகள், தொற்றுநோயை ஏற்படுத்தும் வைரஸின் திறனைக் குறைக்கலாம். இருப்பினும், ஸ்டீராய்டுகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து அழற்சியின் அளவை மோசமாக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    நோய் தொற்றின் அபாயம்

    நோய் தொற்றின் அபாயம்

    ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை உள்ள நோயாளிகளுக்கு உள்ளிழுக்கும் ஸ்டீராய்டுகள் SARS-CoV-2 நோய்த்தொற்றின் அபாயங்களை அதிகரிக்கின்றனவா அல்லது குறைக்கின்றனவா என்பதையும், ஸ்டீராய்டு வகையைப் பொறுத்து இந்த விளைவுகள் வேறுபட்டதா என்பதையும் எதிர்கால ஆய்வுகள் கவனிக்க வேண்டும்.

    English summary
    Asthma does not appear to increase the risk for a person contracting COVID-19 or influence its severity, according to a team of Rutgers researchers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X