கோவிட் 19 பற்றி தெரியும் அதை விட கொடிய கோவிட் 22 வரப்போகுதாம் - கவனம் மக்களே

டெல்டாவை விட கொடியதாகக் கூறப்படும் புதிய கொரோனா வைரஸ் மாறுபாடு COVID-22 பற்றி நிபுணர்கள் புதிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கோவிட் 19 கொரோனா வைரஸ் இரண்டாவது அலையின் தீவிரமே முடியாத நிலையில் விரைவில் கோவிட் 22 என்ற புதிய வைரஸ் மக்கள் தாக்கும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். டெல்டா வைரஸ் உடன் ஒப்பிடும் போது கோவிட் 22 அதிக உயிர்கொல்லியாக மாற வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கடந்த 2019 ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. கோவிட் 19 என்று பெயரிட்டப்பட்ட கொரோனா வைரஸ் படிப்படியாக உருமாற்றம் அடைந்தது. டெல்டா, டெல்டா ப்ளஸ் என உருமாற்றம் அடைந்து வருகிறது கொரோனா வைரஸ். இந்தியாவில் 3 கோடியே 25 லட்சம் பேர் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 21 கோடிக்கும் மேற்பட்டோர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பரவலை தடுக்க லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் படிப்படியாக கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா இரண்டாவது அலையே முடியாத நிலையில் மூன்றாவது அலையும் அதி தீவிரமாகக வீசும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கொரோனா எப்போது முடிவுக்கு வரும் என்று எவராலும் சொல்ல முடியாத நிலையில் புதிதாக கோவிட் 22 பற்றியும் அதன் பாதிப்பு பற்றியும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கோவிட் தடுப்பூசி

கோவிட் தடுப்பூசி

கொரோனா பாதிக்காமல் தடுக்கும் ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. பல கோடி மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர் என்றாலும் உலகம் முழுவதும் தினசரியும் 6 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில் SARS CoV-2 இன் 'சூப்பர் வேரியன்ட்' 2022 இல் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும். தடுப்பூசி போடப்படாத நபர்கள் சாத்தியமான சூப்பர் ஸ்ப்ரெடர்களாக இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

உயிர்கொல்லி வைரஸ்

உயிர்கொல்லி வைரஸ்


பெடரல் தொழில்நுட்ப நிறுவனமான ஈடிஎச் ஜூரிச்சின் பேராசிரியர் - நோயெதிர்ப்பு நிபுணர் மருத்துவர் சாய் ரெட்டி தற்போதுள்ள கொரோன வைரஸ் வகைகளை விட, இந்த 'Covid-22' வைரசானது மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். ஒரு புதிய உயிர்கொல்லி வைரஸ் தோன்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம், அதனால் இனி நாம் தடுப்பூசிகளை மட்டும் நம்பியிருக்க முடியாது என்று நோயெதிர்ப்பு நிபுணர் சாய் ரெட்டி கூறியுள்ளார்.

கோவிட் 22 பரவ வாய்ப்பு

கோவிட் 22 பரவ வாய்ப்பு

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் பேசியுள்ள ரெட்டி, 'COVID-22' என்று அழைக்கப்படும் டெல்டா வகை வைரஸ், எல்லாவற்றிற்கும் மேலாக அதிகளவில் பரவி ஆபத்தை விளைவிக்கக் கூடியது என்று தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் பரவிய பீட்டா மற்றும் பிரேசிலில் பரவிய காமா ஆகியவற்றிலிருந்து வந்த கொரோனா வைரஸ் அதிக தொற்றுநோயாக மாறினால், அல்லது டெல்டா புதிய வேரியண்ட்களை உருவாக்கினால், நாம் தொற்றுநோயின் ஒரு புதிய கட்டத்தைப் பற்றி பேச வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸை எதிர்கொள்ள புதிய தடுப்பூசி

புதிய வைரஸை எதிர்கொள்ள புதிய தடுப்பூசி

உலகம் தடுப்பூசியை மட்டுமே நம்ப முடியாது என்று கூறியுள்ள அவர், "கோவிட் -22" நாம் இப்போது பார்த்ததை விட மோசமாகலாம் அடுத்த சில வருடங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட தடுப்பூசிகளுக்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் சாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

வைரஸை எதிர்கொள்ள தயார்

வைரஸை எதிர்கொள்ள தயார்

கோவிட் -22 மாறுபாடு ஒரு பெரிய அபாயமாக இருக்கும் என்பதால் உலகம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். அத்தகைய மாறுபாடு தோன்றினால், நாங்கள் அதை விரைவில் அடையாளம் காண வேண்டும் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் தடுப்பூசியை விரைவாக மாற்றியமைக்க வேண்டும். இந்த புதிய மாறுபாடு தோன்றுவது ஒரு பெரிய ஆபத்து என்றும் சாய் ரெட்டி தெரிவித்துள்ளார்.

எதிர்கொள்ள தயாராக வேண்டும்

எதிர்கொள்ள தயாராக வேண்டும்

கோவிட்-22 வைரஸ் பரவ தொடங்கும் போது டெல்டா வைரஸ் பாதிப்பினால் நாம் இப்போது அனுபவிப்பதை விட மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம். இந்த புதிய கொரோனா வைரஸ் வகையை அதிக அளவு ஆன்டிபாடிகளுடன் நாம் எதிர்கொள்ள வேண்டி இருக்கும். தடுப்பூசியின் மூன்றாவது பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்றும் நோய் எதிர்ப்பு நிபுணர் சாய் ரெட்டி கூறியுள்ளார்.

தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம்

தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம்

உலகம் முழுவதும் கொரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசிகள் முக்கிய ஆயுதமாகப் பயன்படுகின்றன. அந்த வகையில் தொற்றிலிருந்து காத்துக் கொள்ளவும், கொரோனாவின் அடுத்தடுத்த அலைகளிலிருந்து தங்களைக் காத்துக் கொள்ளவும் உலக நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதைத் தீவிரப்படுத்தி வருகின்றன.

தடுப்பூசியின் அவசியம்

தடுப்பூசியின் அவசியம்

கோவிஷீல்ட், கோவாக்ஷின் தடுப்பூசிகள் இந்தியாவில் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவில் ஸ்புட்நிக்-வி தடுப்பூசி விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கொரோனாவைத் தடுக்க தடுப்பூசிகள் மட்டுமே ஆயுதம் என்பதால் இதுவரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுறுத்தலாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+