டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"மோடி அரசுக்கு மிதப்பு அதிகமாகிவிட்டது".. ரெப்போ வட்டி விகிதம் உயர்வு.. கடுமையாக எச்சரித்த சிபிஎம்

Google Oneindia Tamil News

டெல்லி: வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இவ்வாறு வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இது நான்காவது முறையாகும்.

கடந்த மே முதல் தற்போது வரை மட்டும் 1.4% சதவிகிதம் வட்டி உயர்ந்துள்ளது. இந்த உயர்வுக்கு சிபிஎம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

 இந்த 3 போட்டோஸை பாருங்க.. காங்கிரஸ் தலைவர் ரிசல்ட் ஈஸியா தெரிஞ்சிடும்.. இவர்தான் அடுத்த தலைவரா? இந்த 3 போட்டோஸை பாருங்க.. காங்கிரஸ் தலைவர் ரிசல்ட் ஈஸியா தெரிஞ்சிடும்.. இவர்தான் அடுத்த தலைவரா?

ரொப்போ கடன்

ரொப்போ கடன்

ரிசர்வ் வங்கி தரப்பில் அடிக்கடி இவ்வாறு ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படுவதாக அவ்வப்போது அறிவிப்புகள் வெளியாவதும், அதற்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவிப்பதும் தொடர் செய்திகளாக இருக்கின்றன. இந்த ரெப்போ வட்டி விகிதம் என்றால் என்ன? ஏன் அரசியல் கட்சியினர் இந்த உயர்வுக்கு கண்டனம் தெரிவிக்கின்றனர் என்று தெரியுமா? ரிசர்வ் வங்கியால் பல தனியார் வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்தான் ரெப்போ கடன் என சொல்லப்படுகிறது.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம்

இவ்வாறு வங்கிகள் பெறும் கடன் சாதாரண சாமானிய மக்களுக்கு வங்கி தரப்பிலிருந்து கடனாக கொடுக்கப்படும். இந்த கடன்களுக்கு மக்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட வட்டி போடப்படும். இப்போது ரெப்போ கடனுக்கு வருவோம். ரிசர்வ் வங்கி இவ்வாறு வங்கிகளுக்கு கொடுக்கும் கடனுக்கு வட்டி போடும். இந்த வட்டி விகிதத்தைதான் தற்போது ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தனியார் வங்கிகள் வாங்கிய கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய நிலை உருவாகும்.

 பாதிப்பு யாருக்கு?

பாதிப்பு யாருக்கு?

தனியார் வங்கி எப்படி செலுத்தும்? அது யாரிடம் கடனை கொடுத்ததோ அவர்களிடம் கூடுதல் வட்டி கோரும். ஆக இது வங்கிகளிலிருந்து கடன் வாங்கிய சாமானிய மக்கள் தலையில்தான் வந்து விடியும். எனவேதான் அரசியல் கட்சியினர் பலர் இந்த ரெப்போ வட்டி விகிதம் உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் தனது கண்டனத்தை டிவிட்டர் வாயிலாக பதிவு செய்துள்ளார்.

கண்டனம்

கண்டனம்

அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை மீண்டும் உயர்த்தி 5.90% ஆக ஆக்கியுள்ளது. இதனால் வீட்டுக்கடன், வங்கிக்கடன் மற்றும் பிற EMI வட்டி விகிதம் உயரும். சாதாரண உழைப்பாளிகளின் துயரம் அதிகரிக்கும். ரூபாய் மதிப்பு சரிவு, விலைவாசி உயர்வு, வேலையின்மை என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினால் மக்கள் தவிப்பில் உள்ளார்கள். இப்போது அரசு மென்மேலும் புதிய சுமையை சுமத்துகிறது.

பாரதிதாசன்

பாரதிதாசன்

மக்களை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லை. உணர்ச்சித் தூண்டல் அரசியலே போதும் என்ற மிதப்பில் மோடி ஆட்சி வெகுதூரம் சென்றுவிட்டது. ஓடப்ப ராயிருக்கும் ஏழையப்பர் உதையப்ப ராகிவிட்டால் ஓர்நொடிக்குள் ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி ஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ! என்ற பாரதிதாசன் கவிதை வரிகள்தான் நினைவிற்கு வருகின்றன." என்று கூறியுள்ளார்.

English summary
RBI Governor Shaktikanta Das has said that the repo interest rate for short-term loans to banks has been increased to 0.5 percent. With this, the repo interest rate has increased to 5.9 percent. This is the fourth such increase in interest rate this year. The interest rate has increased by 1.4% since last May till now. CPM strongly condemned this hike.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X