டெல்லி நொய்டா சட்டவிரோத இரட்டை கோபுரம்..328 அடி உயர கட்டிடம்- 9 நொடிகளில் தகர்ந்தது!
டெல்லி: டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட 328 அடிய உயரம் கொண்ட 32 மாடி இரட்டை கோபுர கட்டிடம் இன்று உச்சநீதிமன்றத்தின் உத்தரவால் 9 வினாடிகளில் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
நொய்டாவில் சூப்பர் டெக் நிறுவனத்தால் அபெக்ஸ், செயேன் என்ற இரட்டை மாடி கட்டிடங்கள் கட்டப்பட்டன. 328 அடி உயரத்தில் 32 மாடிகளுடன் கட்டப்பட்ட நொய்டா இரட்டைக் கோபுரம் என்ற இந்த கட்டிடம், உரிய அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக கட்டப்பட்டது. இதனால் உச்சநீதிமன்றம் இந்த கட்டிடத்தைத் தகர்க்க உத்தரவிட்டது.

இதனையடுத்து இன்று பிற்பகல் இந்த 328 அடி உயர இரட்டை கோபுர கட்டிடம் தகர்க்கப்பட்டது. இத்தகைய கட்டிடங்களை இடித்து தரைமட்டமாக ஆண்டுகள் கணக்கு எடுத்துக் கொள்ளும். ஆனால் நவீன தொழில்நுட்ப முறையில் 9 வினாடிகளில் இந்த கட்டிடம் தகர்க்கப்பட்டது.
இந்த கட்டிடத்தில் மொத்தம் 25,000 துளைகள் இடப்பட்டன.. இந்த துளைகளில் 3,700 கிலோ வெடிபொருட்கள் நிரப்பப்பட்டன. இத்துளைகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டன.
கட்டிட இடிப்புக்கான நேரத்தில் ஒரே நேரத்தில் அனைத்து வெடிபொருட்களும் வெடிக்க வைக்கப்பட்டன.. இதனால் ஒட்டுமொத்த கட்டிடமும் 9 வினாடிகளில் தரைமட்டமாகின.
நொய்டாவின் செக்டார் 93A இல் 2004-ம் ஆண்டு சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் ஹவுசிங் சொசைட்டி என்ற பெயரில் பிரம்மாண்ட கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதனடிப்படையில் 9 மாடிகளுடன் 14 கோபுரங்களுடன் கட்டிடம் கட்டுவதற்கு நொய்டா உள்ளாட்சி நிர்வாகம் அனுமதித்தது. ஆனால் 2012-ம் ஆண்டு இந்த திட்டம் அப்படியே திருத்தப்பட்டு 40 மாடிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதற்கு எதிராக குடியிருப்போர் சங்கத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் முதலில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம் 2014-ம் ஆண்டே இந்த சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது.

அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் உச்சநீதிமன்றமும் இந்த சட்டவிரோத கட்டிடத்தை இடிக்க உத்தரவிட்டது. இக்கட்டிடம் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி இடிப்பது என முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று இடிக்கப்பட்டது.

கொச்சியில் 2020-ம் ஆண்டு இதேபோல பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று இடிக்கப்பட்டது. இந்த பணியை தமிழ்நாட்டின்விஜய் ஸ்டீல்ஸ் அண்ட் எக்ஸ்ப்ளோசிவ்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications