டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று தூக்கு தண்டனை இல்லை.. 3ஆவது முறையாக நிறுத்தி வைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு இன்று நிறைவேற்றுவதாக இருந்த தூக்கு தண்டனை மீண்டும் 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Nirbhaya convicts defferes for 3rd time

    டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் முகேஷ் குமார் சிங் (32), பவன் குப்தா (25), வினய் குமார் சர்மா (26), அக்‌ஷய் குமார் (31) ஆகிய 4 பேருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் தற்போது டெல்லி திகார் சிறையில் உள்ளனர்.

    இந்த 4 பேரும் மரண தண்டனையை எதிர்த்து மறுஆய்வு மனு, சீராய்வு மனு, கருணை மனு என மாறி மாறி தாக்கல் செய்ததால் அவர்களை தூக்கில் போடுவது 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில் 4 பேரையும் தனித்தனியாக தூக்கில் போட உத்தரவிடக் கோரி மத்திய அரசின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

     நெருப்போடு விளையாடுறீங்க.. நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை நெருப்போடு விளையாடுறீங்க.. நிர்பயா குற்றவாளிகளின் வழக்கறிஞருக்கு டெல்லி நீதிமன்றம் எச்சரிக்கை

    மேல்முறையீட்டு

    மேல்முறையீட்டு

    இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த 4 பேரையும் இன்று காலை 6 மணிக்கு தூக்கில் போட டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

    விசாரணை

    விசாரணை

    ஆனால் 4 பேரில் ஒருவரான பவன்குப்தா, தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் என்வி ரமணா, பானுமதி, பாலி நாரிமன், அசோக் பூஷண் ஆகியோர் முன்பு நேற்று காலை விசாரணைக்கு வந்தது.

    தள்ளுபடி

    தள்ளுபடி

    அப்போது அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து பவன்குப்தா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பப்பட்டது. இந்த மனு உள்துறை அமைச்சகத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி பவன்குப்தா, அக்ஷய் குமார் சார்பில் டெல்லி கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஏற்கெனவே மனு தாக்கல் செய்யப்பட்டு அந்த மனு நேற்று தள்ளுபடி செய்யப்பட்டது.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    உள்துறை அமைச்சகத்திடம் தாக்கல் செய்த கருணை மனு நிலுவையில் இருப்பதால் குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது என குற்றவாளி தரப்பு வழக்கறிஞர் வாதம் செய்தார். இதனிடையே பவன்குப்தாவின் மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்தார். டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு ஒத்திவைக்கப்பட்ட பின்னர் நேற்று பிற்பகல் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அக்ஷய்குமார் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்து இருப்பதாக நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

    3ஆவது முறை ஒத்தி வைப்பு

    3ஆவது முறை ஒத்தி வைப்பு

    இதையடுத்து நீதிபதி தர்மேந்தர் ராணா, நெருப்புடன் விளையாடுகிறீர்கள், எச்சரிக்கையாக இருங்கள் என குற்றவாளிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் தெரிவித்தார். மேலும் குற்றவாளியின் கருணை மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் 4 பேரையும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுவதை மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தள்ளி வைக்க உத்தரவிடுவதாகவும் தெரிவித்தார். இவர்களது தண்டனை 3ஆவது முறையாக ஒத்திவைக்கப்பட்டது.

    English summary
    Death sentence scheduled today for Nirbhaya Gang rape convicts deferred for 3rd time by Additional Sessions court Delhi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X