தீன் தயாள் ஸ்பர்ஸ் யோஜனா.. ரூ.6000 ஸ்காலர்ஷிப் வேணுமா.. அப்ப உடனே இதை பண்ணிடுங்க.. மத்திய அரசு சபாஷ்
டெல்லி: பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும் மத்திய அரசு எத்தனையோ திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதுபோலவே மாணவர்களுக்கும் ஒரு சிறப்பு திட்டத்தை அறிவித்து, வெற்றிகரமாகவும் நடத்தி வருகிறது. அதன்பெயர்தான் தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா திட்டமாகும்.
தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா ஊக்குவிப்புத் திட்டம் என்பது இந்திய அஞ்சல் துறையின் சார்பில், கடந்த 2017-ல் நவம்பர் 3ம்தேதி அன்று தொடங்கப்பட்டதாகும்.. தபால்தலை சேகரிப்பு மற்றும் ஆராய்ச்சியை ஒரு முக்கிய பொழுதுபோக்காக ஊக்குவிக்கும் வகையில் இந்த திட்டத்தை அஞ்சல்துறை துவங்கியது.

தபால் துறை: அதாவது தபால் துறை சார்பில் "ஸ்டாம்ப்" சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவே இந்த தீன் தயாள் ஸ்பர்ஷ் யோஜனா என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது.. தற்போதுவரை அது வெற்றிகரமாகவும் செயல்படுத்தி வருகிறது.
உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, வருடா வருடமும், கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமும் இதில் பிரத்யேகமாக இடம்பெற்றுள்ளது.. அரிய வகை தபால் தலைகளை சேகரிக்கும் பள்ளி மாணவர்களுக்கு ரூ.6,000 கல்வி உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.
தகுதிகள்: 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர் இந்த திட்டத்தில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம்.. இத்திட்டத்தின் கீழ் வருடத்துக்கு ரூ.6000/- உதவித்தொகையும் வழங்கப்படும்.. விண்ணப்பதாரர் இந்தியாவிற்குள் அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் 6 முதல் 9-ம் வகுப்புக்குள் படிக்கும் மாணவராக இருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் அஞ்சல் தலை சேகரிப்பு சங்கம் இருக்க வேண்டும். அதில் சம்பந்தப்பட்ட மாணவர் உறுப்பினராக இருக்க வேண்டும்.
அதேபோல, ஒரு மாணவர் தபால்தலை சேகரிப்பு சங்கம் இல்லாத பள்ளியில் படிக்கிறார் என்றால், அவர்கள் தங்களது சொந்த தபால்தலை சேமிப்புக் கணக்கை வைத்திருக்க வேண்டும். தேர்வு நடைமுறையானது, அஞ்சல் தலை சேகரிப்புத் தொடர்பான வினாடி வினா மற்றும் அஞ்சல் தலை சேகரிப்புத் தொடர்பான திட்ட அறிக்கை சமர்ப்பித்தல் என 2 நிலைகளில் நடைபெறும்.
முத்திரை சேகரிப்பு: போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும் முத்திரை சேகரிப்பில் முன்னோடியாக அறிவிக்கப்பட்டு, பள்ளி முழுவதும் தபால் தலை சேகரிப்பு மன்றத்தை உருவாக்க உதவி செய்யப்பெறும். மேலும் ஆர்வமுள்ள இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு அதை எப்படி பொழுதுபோக்காக தொடர்வது, ஈடுபடுத்துவது என்பன குறித்தும் ஆலோசனைகளும் வழங்கப்படும்.
அந்தவகையில், இந்த வருடமும், இந்த திட்டத்தின்கீழ் பயன் பெற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.. தகுதியுள்ள விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 8.9.2023 என்றும் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் ஆர்வம்: ஸ்காலர்ஷிப்பாக 6 ஆயிரம் ரூபாய் கிடைக்க போவதால், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என்று அனைத்து பள்ளிகளை சேர்ந்த, 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள், அரிய வகை தபால் தலைகளைச் சேகரித்து, தபால் துறையிடம் ஒப்படைக்க தயாராகி வருகிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications