டெல்லி கட்டிட இடிப்பு.. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பில்லையா? பாஜக, ஆம்ஆத்மியை விளாசிய ஜோதிமணி எம்பி
டெல்லி: டெல்லி ஆக்கிரமிப்பு அகற்றம் விவகாரத்தில் பாஜக, ஆம்ஆத்மி கட்சிகளை காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கடுமையாக விமர்சித்துள்ளார். உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தும் புல்டோசர்கள் கொண்டு ஏழை மக்களின் கடைகள், வீடுகளை பாஜக சூரையாடுவதாகவும், அதனை மறைமுகமாக ஆதரித்து ஆம்ஆத்மி வேடிக்கை பார்ப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் 'அனுமன் ஜெயந்தி' என கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் ஊர்வலம் நடத்தப்பட்டது.
ஜஹாங்கிர்புரி பகுதியில் இருதரப்பு இடையே வன்முறை ஏற்பட்டது. கற்கள் வீசப்பட்டன. வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. போலீசார் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கைது எண்ணிக்கை அதிகரிப்பு
மேலும் துப்பாக்கிச்சூடு சம்பவமும் அரங்கேறியது. இந்த வன்முறையில் போலீசார் உள்பட பலர் படுகாயமடைந்தனர். பதற்றம் நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர். வன்முறை தொடர்பாக 24 பேர் கைது செய்யப்பட்டனர். இன்னும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இதனால் கைது எண்ணிக்கை அதிகரிக்கலாம்.

ஆக்கிரமிப்பு அகற்றம்
இந்நிலையில் தான் வன்முறை நடந்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிக்கப்படும் என டெல்லி வடக்கு மாநகராட்சி கூறியது. இன்று காலையில் புல்டோசர் மூலம் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியது. இந்த பணிக்கு உச்சநீதிமன்றம் தற்காலிக தடை விதித்ததால் சில மணிநேரத்தில் ஆக்கிரமிப்பு அகற்றுவது நிறுத்தப்பட்டது. ஜஹாங்கிர்புரி பகுதியில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாஜகவை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

ஜோதிமணி விமர்சனம்
இதற்கிடையே கரூர் மக்களவை தொகுதியின் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி ஆக்கிரமிப்பு அகற்றும் விவகாரம் தொடர்பாக பாஜக, ஆம்ஆத்மியை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது: இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் ஜகாங்கீர்புரி பகுதியின் ஆக்கிரமிப்புகளை இடிக்கும் பணிகளை நிறத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் அதை மதிக்காமல் தொடர்ந்த புல்டோசர்களை கொண்டு ஏழை மக்களின் கடைகள் மற்றும் வீடுகளை சூரையாடும் பாசிச பாஜக அரசின் போக்கு கண்டனத்துக்குரியது. இதை மறைமுகமாக ஆதரிக்கும் ஆத்ஆத்மி கட்சி மக்களை பாதுகாக்காமல் வேடிக்கை பார்ப்பதும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு கூறியுள்ளார்.
Recommended Video

ராகுலுக்கு ரீட்விட்
மேலும் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தியும் பாஜக அரசை விமர்சனம் செய்திருந்தார். இதுதொடர்பாக அவர் பதிவிட்ட ஒரு டுவிட்டையும் ஜோதிமணி ரீட்விட் செய்துள்ளார். அதில், ‛‛இது அரசியலமைப்பின் விழுமியங்ள் மீது நடத்தப்படும் தாக்குதல். இது ஏழைகள் மட்டும் சிறுபான்மையினரை இலக்காக கொண்டு செயல்படுத்தப்படுகிறது. பாஜக இத்தகைய செயலில் ஈடுபடுவதை விட தங்களின் இதயத்தில் உள்ள வெறுப்புணர்வை கட்டாயம் அகற்ற வேண்டும் '' என ராகுல் காந்தி தெிரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications