டெல்லி வன்முறைக்கும் ஜாகிர் நாயக்கிற்கு தொடர்பு.. சிங்கப்பூரிலிருந்து பணம்.. போலீஸ் அறிக்கை
டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக கைது செய்யப்பட்ட காலித் சைஃபி, மலேசியாவில் இஸ்லாமிய மதகுரு ஜாகிர் நாயக்கை சந்தித்து பேசி இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், டெல்லி வன்முறைக்கும் ஜாகிர் நாயக்கிற்கும் டெல்லி வன்முறையில் தொடர்பு இருப்பதாக டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெல்லியில் நடந்த வன்முறை தொடர்பாக டெல்லி சிறப்பு போலீஸ் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதுதொடர்பாக அறிக்கை ஒன்றையும் தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையில் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.

டெல்லி வன்முறையில் தொடர்புடையவராக கருதப்பட்டு கைது செய்யப்பட்ட காலித் சைஃபி, இஸ்லாமிய மதகுரு ஜாகிர் நாயக்கை மலேசியாவில் சந்தித்துள்ளார். மேலும், டெல்லியில் நடந்த வன்முறைகளுக்கு சவுதி அரேபியா, சிங்கப்பூரில் இருக்கும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களிடம் இருந்து நிதி வந்து உள்ளது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
டெல்லி வன்முறையில் தொடர்புடையதாக கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட காங்கிரஸ் முன்னாள் நகராட்சி கவுன்சிலர் இஷ்ரத் ஜஹானுக்கு காசியாபாத் மற்றும் மகாராஷ்டிராவில் இருக்கும் உறவினர்கள் மூலம் நிதி வந்து இருப்பதும் விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
காலித் மற்றும் இஷ்ரத்திடம் சிறப்பு போலீஸ் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக அவர்களிடம் நடத்தப்படும் விசாரணை தடைபட்டுள்ளது.

சிங்கப்பூர் வாழ் இந்தியரிடம் இருந்து காலித் சைஃபிக்கு பணம் வந்துள்ளது. இந்தப் பணம் இந்தியாவில் உமர் காலித் மற்றும் மீரட்டில் இருக்கும் அவரது நண்பரால் நடத்தப்படும் தன்னார்வ அமைப்புக்கு மாற்றப்பட்டு இருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த சிங்கப்பூர் நபர் யார் என்று அறிந்து கொள்ள விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் பணம் பெற்றதற்கான ஆதாரங்களை காலித் சைஃபி தொலைபேசியில் இருந்து சேகரிக்க முடியும் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இந்த விசாரணையில் ஜாகிர் நாயக் உடன் காலித்துக்கு எவ்வாறு தொடர்பு ஏற்பட்டது, எவ்வளவு பணம் பெறப்பட்டது போன்ற விவரங்கள் தெரிய வரும் என்று சிறப்பு போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பணம் சேகரிக்க ஜாகிர் நாயக் மற்றும் பல்வேறு நாடுகளுக்கு காலித் சைஃபி பயணம் மேற்கொண்டு இருப்பதும் அவரது பாஸ்போர்ட் மூலம் தெரிய வந்து இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியாக கருதப்படும், தஹிர் ஹூசைன் டெல்லி வன்முறைக்கு ரூ. 1.30 கோடி செலவிட்டார் என்றும், அவரது சகோதரர் உள்பட 15 மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. இதுவரை டெல்லி வன்முறை தொடர்பாக 700 எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Recommended Video
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications