குட் நியூஸ்.. டெல்லியில் குறைந்த கொரோனா அலை! ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு வழங்கலாம்- துணை முதல்வர்
டெல்லி: டெல்லியின் ஆக்ஸிஜன் தேவை குறைந்துவிட்டது, எனவே கூடுதல் ஆக்சிஜனை, தேவைப்படும் பிற மாநிலங்களுக்கும் கொடுக்கலாம், என்று துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா இன்று தெரிவித்தார்.
"ஆக்ஸிஜன் தேவை குறைந்து, மருத்துவமனை படுக்கைகள் காலியாகி வருகின்றன. அந்த நேரத்தில் (15 நாட்களுக்கு முன்பு), எங்களுக்கு 700 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் தேவைப்பட்டது. இப்போது, டெல்லிக்கான, ஆக்ஸிஜன் தேவை ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன்னாக குறைந்துள்ளது .

நாங்கள் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளோம், ஒரு நாளைக்கு 582 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனைக் கொண்டு எங்கள் பணிகள் செய்யப்படும் என்றும், எனவே, டெல்லியின் ஒதுக்கீட்டிலிருந்து உபரி ஆக்ஸிஜனை மற்ற மாநிலங்களுக்கு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளோம்" என்று சிசோடியா தெரிவித்தார்.
மேலும், கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலையால் கொரோனா கேஸ் எண்ணிக்கை அதிகரித்தபோது, டெல்லி துன்பத்தில் இருந்தது. அப்போது, டெல்லி மக்கள் உதவிக்கு வந்தமைக்கு மத்திய அரசு மற்றும் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு நன்றி என்றும் தெரிவித்தார்.
டெல்லி கடந்த 24 மணி நேரத்தில் 10,400 புதிய கொரோனா கேஸ்களை பதிவு செய்துள்ளது, இது நேற்றைய புள்ளிவிவரங்களை விட 21 சதவீதம் குறைவாகும். பாசிட்டிவ் ரேட் விகிதம் 14 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலதிக உத்தரவு வரும் வரை ஒவ்வொரு நாளும் 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்ஸிஜனை டெல்லிக்கு வழங்குமாறு கடந்த வாரம் உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
டெல்லியிலுள்ள பல உயர்தர மருத்துவமனைகளில் கூட ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டன. இது பல நோயாளிகளின் மரணத்திற்கு வழிவகுத்தது. இருப்பினும் இப்போது நோயாளிகள் எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது மகிழ்ச்சிக்குரிய செய்தியாக பார்க்கப்படுகிறது.
-
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு!












Click it and Unblock the Notifications