டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே.. கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை

Google Oneindia Tamil News

Recommended Video

    கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை

    டெல்லி: போராடியும் எனக்கான நீதி கிடைக்கவில்லையே என கோகாய் மீது புகார் அளித்த பெண் வேதனை தெரிவித்தார்.

    உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது முன்னாள் பெண் ஊழியர் (35) ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இந்த புகார் குறித்து உச்சநீதிமன்றத்தில் உள்விசாரணை குழு நியமிக்கப்பட்டது.

    அந்த குழுவில் நீதிபதிகள் பாப்டே, இந்து மல்ஹோத்ரா, இந்திரா பானர்ஜி ஆகியோர் புகாரை விசாரித்தனர். இந்த விசாரணையில் கோகாய் மீதான பாலியல் புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என கூறி புகார் கூறிய பெண்ணின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

    நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை.. பகீர் கிளப்பும் பிரகாஷ் ஜாவடேகர் நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு இல்லை.. பகீர் கிளப்பும் பிரகாஷ் ஜாவடேகர்

    இன்னல்கள்

    இன்னல்கள்

    இந்த நிலையில் பாலியல் புகார் அளித்த பெண்ணுடன் சில பத்திரிகையாளர்கள் உரையாடியுள்ளனர். அந்த உரையாடலின் போது உச்சநீதிமன்ற உள் விசாரணை குழுவின் விசாரணை குறித்தும் அவர் மற்றும் அவரது குடும்பத்திற்கு ஏற்பட்ட இன்னல்கள் குறித்து பகிர்ந்துள்ளார்.

    தவறான குற்றச்சாட்டு

    தவறான குற்றச்சாட்டு

    அவர் அளித்த பேட்டி குறித்து ஆங்கில நாளிதழ் ஸ்க்ரோல் வெளியிட்ட செய்தியில் அவர் கூறுகையில் நான் உச்சநீதிமன்ற நீதிபதிகளிடம் புகார் அளித்தது அவர்கள் உண்மையை கண்டறிவார்கள் என்பதால்தான். ஆனால் நான் தலைமை நீதிபதி மீது தவறான குற்றச்சாட்டு அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

    குற்றப் பின்னணி

    குற்றப் பின்னணி

    இது முற்றிலும் தவறானது. ஏனென்றால் நான் அளித்த புகாரில் அனைத்து ஆதாரங்களையும் சேர்த்துதான் கொடுத்துள்ளேன். அத்துடன் என் மீது கடந்த 2016-ஆம் ஆண்டு இருந்த வழக்கை வைத்து நான் குற்றப் பின்னணி உடையவர் என சித்தரிக்க முயன்றுள்ளனர்.

    நெறிமுறைகள்

    நெறிமுறைகள்

    உள் விசாரணை குழுவின் நோட்டீஸ் வந்தவுடன் நான் அவர்களிடம் சில கோரிக்கைகளை வைத்தேன். எனக்கு காது கேட்பதில் சிறு குறைப்பாடு உள்ளதால் என்னுடன் விசாரணைக்கு ஒரு நபர் வர அனுமதிக்க வேண்டும். அத்துடன் இந்த விசாரணை முழுவதும் பாலியல் புகார்களை விசாரிக்கும் விசாகா நெறிமுறைகளை பின்பற்றி நடைபெற வேண்டும்.

    வீடியோவை யார் எடுத்தது

    வீடியோவை யார் எடுத்தது

    இந்த விசாரணையை வீடியோ பதிவு செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன் வைத்தேன். ஆனால் விசாரணை குழு அதற்கு மறுத்துவிட்டது. முதல் நாள் விசாரணைக்கு சென்ற போது பாப்டே என்னிடம் ஒரு சில கேள்விகளை கேட்டார். அதில் கோகாய் வீட்டுக்கு சென்று அவரது மனைவி காலில் விழுந்த வீடியோவை யார் எடுத்தது, பாலியல் தொந்தரவு நடைபெற்ற போது நேரம் என்ன, என்ன ஆடை அணிந்திருந்தேன் என கேட்டனர்.

    ஒரு நபரை அனுமதிக்க வேண்டும்

    ஒரு நபரை அனுமதிக்க வேண்டும்

    இரண்டாம் நாள் என்னிடம் கடுமையாக நடந்து கொண்டனர். முதல் நாள் விசாரணை முடிந்து விட்டு நான் வீடு திரும்பும் போது என்னை மர்மநபர்கள் பின்தொடர்ந்தனர். இதை நான் விசாரணைக்குழுவில் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் உங்கள் குடும்பத்தில் நிறைய காவலர்கள் உள்ளனர். எனவே அவர்கள் உங்களை பாதுகாப்பர் என கூறினர். மீண்டும் ஒரு முறை என்னுடன் ஒரு நபரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தேன்.

    விசாரணை தொடருவோம்

    விசாரணை தொடருவோம்

    ஆனால் அந்த குழுவினர் மறுத்துவிட்டனர். இதனால் நான் விசாரணை குழுவில் இருந்து விலகுவதாக தெரிவித்தேன். அதற்கு நீதிபதிகள் ஏன் விலகுகிறீர்கள் என கேட்டனர். மேலும் நீங்கள் விலகினால் நாங்கள் விசாரணை தொடருவோம் என்றனர். நான் அதற்கும் ஒப்புக் கொண்டு விலகினேன் என்றார் அந்த பெண்.

    English summary
    Though i struggled to get justice, i failed, woman who alledges sexual harrassment complaint on Chief Justice of India Ranjan Gogoi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X