டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

8.45க்கு திடீர் விசிட்.. பாதுகாவலர்கள் இன்றி விஸ்டா கட்டுமானத்தை பார்வையிட்டாரா மோடி.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: நேற்று மத்திய விஸ்டா திட்டத்தின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமான பணிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். இவரின் ஒரு மணி நேர விசிட்டில் என்னென்ன நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

    Central Vista Project Construction- ஐ இரவில் திடீரென சென்று பார்வையிட்ட PM Modi

    டெல்லியில் மத்திய விஸ்டா திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்ற கட்டிடம் மற்றும் பிரதமர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. ரூ. 20,000 கோடி மதிப்பிலான சென்ட்ரல் விஸ்டா திட்டம் வேகமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய லோக்சபா, ராஜ்ய சபா கட்டிடம், பிரதமர் அலுவலகம், பல்வேறு மீட்டிங் அரங்குகள் என்று மிக பிரம்மாண்டமாக இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.

    2022ல் குளிர்கால கூட்டத்தொடர் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 888 நாடாளுமன்ற லோக்சபா உறுப்பினர்கள் அமரும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. ஒரு பக்கம் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எதிர்ப்பு, பாஜக தலைவர்களின் ஆதரவு என்று பல சர்ச்சைகளுக்கு இடையில் கட்டுமானம் வேகமாக நடந்து வருகிறது.

     புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. திடீரென இரவில் வந்து பிரதமர் மோடி தந்த சர்ப்ரைஸ்.. திகைத்த ஊழியர்கள் புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. திடீரென இரவில் வந்து பிரதமர் மோடி தந்த சர்ப்ரைஸ்.. திகைத்த ஊழியர்கள்

    மோடி கட்டுமானம்

    மோடி கட்டுமானம்

    இந்த நிலையில்தான் பிரதமர் மோடி நேற்று இந்த கட்டுமான பணிகளை பார்வையிட்டார். நேற்று பிரதமர் மோடி அமெரிக்காவில் இருந்து காலையில்தான் இந்தியா திரும்பினார். இந்தியா திரும்பிய பிரதமர் மோடிக்கு டெல்லி விமான நிலையத்தில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம் இந்தியாவில் அதிகம் கவனிக்கப்பட்டதால் அவருக்கு டெல்லியில் பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. நேற்று அவரின் அமெரிக்க பயணம்தான் டாப் செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    நேரடி கட்டுமானம்

    நேரடி கட்டுமானம்

    ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியா வந்து 24 மணி நேரத்திற்கு உள்ளாகவே பிரதமர் மோடி நேரடியாக இந்த கட்டுமான பணிகளை பார்வையிட சென்றார். இது கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பயணம் ஆகும். பொதுவாக பிரதமர் ஒரு இடத்திற்கு செல்கிறார் என்றால் அதற்கான security details முன்பே கொடுக்கப்படும். அதாவது பிரதமர் செல்லும் இடத்திற்கு முன்பே பாதுகாப்பு அதிகாரிகள் சென்று சோதனைகளை செய்வார்கள்.

    திடீர் சோதனை

    திடீர் சோதனை

    பிரதமர் செல்வதற்கு முன்பே அந்த இடம் எப்படி இருக்கிறது, ஆபத்து உள்ளதா, அருகில் உயரிய கட்டிடம் உள்ளதா என்று சோதனை செய்வார்கள். ஸ்னைப்பர்கள் இல்லாமல் இருப்பதை சோதனை செய்வதற்காகவும், வெடிகுண்டுகள் குறித்த சோதனைக்காகவும் முன்பே அதிகாரிகள் பிரதமர் செல்லும் இடத்தை சோதனை செய்துவிட்டு, அங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். அதன்பின் அவர்கள் கிளியர் என்று குறிப்பிட்டால் மட்டுமே பிரதமர் பயணம் மேற்கொள்ள முடியும்.

    பாதுகாப்பு நடவடிக்கை

    பாதுகாப்பு நடவடிக்கை

    சமீப நாட்களில் இந்திய பிரதமருக்கு அமெரிக்க அதிபர்களுக்கு கொடுக்கப்படும் அளவிற்கு உயரிய பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதனால் இந்த security details பணிகள் மிக கச்சிதமாக நடக்கும். ஆனால் நேற்று பிரதமர் மோடி விஸ்டா கட்டுமானத்தை பார்வையிட சென்ற போது அப்படி security details எதுவும் செய்யப்படவில்லை. அவருடன் எப்போதும் இருக்கும் பாதுகாவலகர்கள் இருந்தனர். அவரை பாதுகாக்கும் தனிப்பட்ட ஸ்பெஷல் பாதுகாப்பு படையினர் உடன் இருந்தனர்.

    விஸ்டா திட்டம்

    விஸ்டா திட்டம்

    ஆனால் முன்பே அந்த இடத்தில் சென்று பாதுகாப்பு குறித்த சோதனைகள் செய்யப்படவில்லை. திடீரென பிரதமர் மோடி இந்த திட்டத்தை போட்டதால் அந்த சோதனை எதுவும் செய்யப்படாமல் பிரதமர் மோடி விஸ்டா கட்டுமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அங்கு நேற்று 8.45 மணிக்கு அவர் சென்றார். குறைந்த ஊழியர்களே இருந்தனர். அங்கு இருந்தவர்களிடம் வெள்ளை ஹெல்மெட் அணிந்து மோடி பேசினார். கட்டுமானங்களை பார்வையிட்டார்.

    புதிய நாடாளுமன்றம்

    புதிய நாடாளுமன்றம்

    அதோடு உட்பகுதிக்கு சென்று சோதனை செய்தார். கட்டுமான பிளானை பார்த்தார். இது முன் அறிவிப்பின்றி செய்யப்பட்ட சோதனை என்பதால்தான் நேற்று முறையான security details சோதனைகளை செய்ய முடியவில்லை. ஆனாலும் இந்த பகுதி ஏற்கனவே அதிக கண்காணிப்பு இருக்கும் பகுதி. இங்கே புகைப்படம் எடுக்க கூடாது மக்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் நேற்று தனியாக security details சோதனைகள் தேவைப்படவில்லை. மற்றபடி பிரதமருக்கு எப்போதும் இருக்கும் தனிப்பட்ட பாதுகாப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Did PM Modi visit the Vista Project construction without prior security detail yesterday in Delhi?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X