நாட்டில் நிலவிய உச்சக்கட்ட கொரோனா குழப்பம்.. காரணம் ஐசிஎம்ஆர் தான்?ஆதாரங்களுடன் விளாசும் ஆய்வாளர்கள்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா பரவல் நாட்டில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரஸ் பரவலும், உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்தபோது, அப்போது இருந்த நிலையை மேலும் குழப்பும் வகையிலேயே ஐசிம்ஆர் பரிந்துரைகள் இருந்ததாக ஆய்வாளர்கள் விமர்சித்துள்ளனர்

டெல்லியில் அமைந்துள்ள ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்தாலும், கொரோனாவுக்கு முன்பு வரை அது குறித்து இந்தியாவில் அதிகப்படியான மக்களுக்குத் தெரியாது.

நாட்டில் கொரோனா பரவ தொடங்கிய பிறகு அமெரிக்காவின் சிடிசி போன்ற தொற்று நோய் நிறுவனங்களுக்கு இணையாக இதுவும் முக்கியத்துவம் பெற்றது. ஆனால் நாட்டில் கொரோனா நிலை குழப்பமடைய ஐசிஎம்ஆரும் ஒரு காரணமாக இருந்தது என்ற குற்றச்சாட்டுகளும் பரவலாக எழுந்துள்ளது.

கேள்வி

கேள்வி

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் முக்கிய மருத்துவ ஆலோசகராக ஐசிஎம்ஆர் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசிடம் ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த மருந்துகள், உருமாறிய கொரோனா குறித்து நாட்டில் உள்ள மற்ற முக்கிய ஆய்வாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தற்போது உலக நாடுகளுக்கும் பரவி வருகிறது.

பரிந்துரைகள்

பரிந்துரைகள்

கடந்த மார்ச் மாதம் முதல் மே வரை டெல்டா கொரோனா காரணமாக நாட்டில் கொரோனா கேஸ்கள் மிக வேகமாக அதிகரித்தது. அப்போது நாடு எதிர்கொண்ட நிலையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். இந்தச் சூழலில் மூன்றாவது அலை எதிர்கொள்ள இந்தியா தயாராக இல்லை என்று பல்வேறு மூத்த சுகாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். நோய்ப் பாதிப்பு உச்சத்தில் இருந்த போது ஐசிஎம்ஆர் அளித்த சில பரிந்துரைகளை நோயாளிகள் நலனைக் காப்பதற்குப் பதிலாக மருந்து நிறுவனங்களுக்கே சாதகமாக இருந்தன.

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து

ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா பரவ தொடங்கிய போது, மலேரியா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஐசிஎம்ஆர் கொரோனா சிகிச்சைக்குப் பரிந்துரை அளித்திருந்தது. சுமார் 1.5 ஆண்டுகளாக இந்த மருந்து ஐசிஎம்ஆர் பட்டியலில் இருந்தது. இந்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளால் கொரோனா சிக்கைக்கு நிராகரிக்கப்பட்ட ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

கருப்பு சந்தை

கருப்பு சந்தை

கொரோனா அதிகரிக்கத் தொடங்கியதும், இதுபோல அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத மருந்துகளை நாட்டிலுள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கத் தொடங்கினர். இதனால் மருந்துகளுக்குச் செயற்கை தட்டுப்பாடு ஏற்பட்டு, கருப்பு சந்தையில் அவை அதிக விலைக்கு விற்கப்பட்டன என்றும் இது ஏழை மக்களைக் கடுமையாகப் பாதித்தது என்றும் சேவக்ராமின் மகாத்மா காந்தி மருத்துவ அறிவியல் கழகத்தின் மருத்துவப் பேராசிரியர் கலந்த்ரி தெரிவித்துள்ளார்.

மருந்து பற்றாக்குறை

மருந்து பற்றாக்குறை

இது குறித்து டெல்லியிலுள்ள மூத்த ஆய்வாளர் அபர்ணா முகர்ஜி கூறுகையில், "பல சிகிச்சை முறைகள் தொடக்கத்தில் நம்பிக்கைக்குரியவையாக இருந்தன. அப்போது ஐசிஎம்ஆர் தனது பரிந்துரைகளை தொடர்ந்து அப்டேட் செய்து வந்தது. ஒரு சில மருந்துகள் கொரோனாவுக்கு எதிராக வேலை செய்யலாம் என நம்பிக்கை இருந்தது. ஆனால் அந்த மருந்துக்குப் பற்றாக்குறை இருந்த ஒரே காரணத்தால் மட்டும் அதைப் பயன்படுத்த வேண்டாம் என கூறியதை ஏற்றுக்கொள்ள முடியாது" என விமர்சித்தார்.

அடுக்கடுக்கானகுற்றச்சாட்டு

அடுக்கடுக்கானகுற்றச்சாட்டு

இதுமட்டுமில்லை கடந்த ஓர் ஆண்டாகவே அரசும் ஐசிஎம்ஆரும் உருமாறிய கொரோனா பற்றிய தரவுகளைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது. மேலும், முக்கியமான சோதனை முடியும் முன்பே ஒரு குறிப்பிட்ட உள்நாட்டுத் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டதும் சர்ச்சையானது. ஒரு மருந்தை ஐசிஎம்ஆர் ஏன் அனுமதிக்கிறது அல்லது ஏன் மறுக்கிறது ஆகியவற்றுக்குத் தெளிவான காரணங்கள் இல்லை. அதேபோல இந்தியாவில் உருவாக்கப்பட்ட அந்த வேக்சினுக்கு எந்தளவு நிதி வழங்கப்பட்டது என்பதிலும் வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.

வெளிப்படைத்தன்மை இல்லை

வெளிப்படைத்தன்மை இல்லை

ஐசிஎம்ஆர் நிறுனவத்தின் இந்த முடிவுகள் நாட்டில் நிலவிய கொரோனா நிலையை மேலும் குழப்பியது. மருத்துவத் துறையில் பல ஆண்டுகளாக இருந்த வெளிப்படைத்தன்மை இல்லாதது. முறையான சுகாதார கட்டமைப்பு இல்லாதது ஆகியவை பிரதமர் மோடி ஆட்சிக் காலத்திலும் தொடர்ந்தது. எனவே, மத்திய அரசு ஒரு முடிவை எடுக்கும் முன் ஐசிஎம்ஆர் சிறந்த சான்றுகளுடன் பரிந்துரை அளிக்க வேண்டும் என வைராலஜிஸ்ட் ஷாஹித் ஜமீல் வலியுறுத்தினார்.

லான்செட் இதழ்

லான்செட் இதழ்

குறிப்பாக புகழ்பெற்ற லான்செட் மருத்துவ இதழ், ஐசிஎம்ஆர் அறிவியல் சான்றுகளிலிருந்து விலகி, அரசியல் ரீதியாக முடிவுகளை எடுக்கத் தொடங்கியுள்ளதாகத் தோன்றுகிறது என விமர்சித்திருந்தது. இது போன்ற முடிவுகளே வைரஸ் பாதிப்பு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்தது எனக் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் லான்செட் விமர்சித்திருந்தது.

ஐசிஎம்ஆர்

ஐசிஎம்ஆர்

தலைநகர் டெல்லியில் நாடாளுமன்றத்திற்கு எதிரில் அமைந்துள்ள ஐசிஎம்ஆர் கடந்த 1911ஆம் ஆண்டு பிரிட்டன் அரசால் உருவாக்கப்பட்டது. கடந்த காலங்களில் தொற்றுநோய்களைக் கையாண்டதில் இந்தியாவின் நோய் கட்டுப்பாட்டு மையம் ( India's National Centre for Disease Control) பங்கு முக்கியமானதாக இருந்துள்ளது. அந்தக் குழுவில் பல தொற்றுநோய் வல்லுநர்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால், கொரோனா பாதிப்பில் ஐசிஎம்ஆருக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

தரவுகள்

தரவுகள்

ஐசிஎம்ஆர் நிறுவனம் நாட்டிலுள்ள பல்வேறு பகுதிகளில் சிரோ சர்வே நடத்தும். இதில் கொரோனாவுக்கு எதிரான ஆன்டிபாடிகள் எத்தனை நபர்களின் உடல்களில் உள்ளது என்பது கண்டறியப்படும். அதேபோல உருமாறிய கொரோனா குறித்தும் தொடர் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இது பற்றிய விரிவான தரவுகள் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளப்படுவது இல்லை. இதனால் நாட்டிலுள்ள மற்ற ஆய்வாளர்களால் எந்த ஒரு ஆய்ச்சியும் செய்ய முடிவதில்லை. இது குறித்த தரவுகளைப் பொதுவெளியில் வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்திக் கடந்த ஏப்ரல் மாதம் 300க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர். ஆனால் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

குழப்பம்

குழப்பம்

நாட்டில் கடந்த ஏப்ரல் கொரோனா 2ஆம் அலை தொடங்கியது. அப்போது நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. ஆக்சிஜன் பற்றாக்குறை உள்ளிட்ட பல காரணங்களால் உயிரிழப்புகள் அதிகரித்தது. இந்தியாவில் நிலைமை மிக மோசமானது. இப்போது வைரஸ் பாதிப்பு குறைந்திருந்தாலும், நமது சுகாதார கட்டமைப்பு அப்படியே தான் உள்ளது. எனவே அடுத்த அலையை நாடு நிச்சயம் தாங்காது என்பதே வல்லுநர்களின் கருத்து. தளர்வுகள் அறிவிப்பு குறித்தும் ஐசிஎம்ஆர் எந்தவொரு கருத்தையும் வெளிப்படையாக அறிவித்தாக தெரியவில்லை. சுருங்கச் சொன்னால், இந்தியாவில் கொரோனா குழப்பம் அதிகரிக்க ஐசிஎம்ஆர் அமைப்பும் ஒரு முக்கிய காரணமாக இருந்தது என்பதே பல மூத்த ஆய்வாளர்களின் குற்றச்சாட்டு!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+