ஜம்முன்னு ரெடியாகும் சென்னை-பெங்களூர் 8 வழி எக்ஸ்பிரஸ் சாலை! எந்த ரூட்ல போகுது தெரியுமா?
டெல்லி: சென்னை முதல் பெங்களூர் வரையிலான எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் வருகிற மார்ச் 2024-க்குள் தயாராகிவிடும் என்று அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ள நிலையில், தமிழகத்தில் இந்த சாலை எந்தெந்த மாவட்டங்கள் வழியாக அமைகிறது என்று பார்க்கலாம்.
மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் சார்பில் நாட்டின் முக்கிய நகரங்களுக்கு இடையே நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி சென்னை - பெங்களூர், பெங்களூர் - மைசூர் எனப் பல நெடுஞ்சாலை பணிகள் இப்போது நடைபெற்று வருகிறது.

மார்ச் 2024-க்குள் தயாராகிவிடும்
சுமார் 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் பெங்களூர் முதல் சென்னை வரையிலான எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் மார்ச் 2024-க்குள் தயாராகிவிடும் என்று அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். 8 வழிச்சாலையாக அமையும் இந்த எக்ஸ்பிரஸ் சாலை மொத்தம் 262 கி.மீ நீளம் கொண்டது. கர்நாடகாவில் 71 கி.மீட்டரும், தமிழகத்தில் 106 கி.மீட்டரும், ஆந்திராவில் 85 கி.மீட்டரும் நீளம் கொண்டதாக இந்த சாலை அமைகிறது.

4 மணி நேரமாக குறையும்
இது சிக்னல் ஏதும் இல்லாத உயர்த்தப்பட்ட பசுமை வழிச்சாலையாக அமைய உள்ளது. உலகத்தரம் வாய்ந்த எக்ஸ்பிரஸ் வே சாலையாக இது அமைய உள்ளது. இந்த சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு சென்னை - பெங்களூரு இடையேயான பயண தூரம் 4 மணி நேரமாக குறையும் என்கிறார்கள். ஆனால் சில அனுபவமிக்க கார் ஓட்டுநர்கள், அதிகபட்சம் 3 மணி நேரம் போதும் என்கிறார்கள். தற்போது சென்னை - பெங்களூர் செல்ல கார்களில் 5 முதல் 6 மணி நேரம் ஆகிறது. இந்த சாலையில் அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீட்டர் வேகம் வரை செல்ல அனுமதி அளிக்கப்படும். அந்த அளவுக்கு சாலை சிறப்பாக வடிவமைக்கப்படுகிறது. சென்னை - பெங்களூர் நகரங்களில் தொழில்துறையை ஊக்குவிக்க இந்த சாலை உதவிகரமாக இருக்கும்.

ராணிப்பேட்டை, குடியாத்தம், ஸ்ரீபெரும்பதூர் வழியாக
டிரக்குகள் நிறுத்துவதற்கான வசதி, விலங்குகளும் வாகனங்களும் செல்லும் வகையில் சுரங்கப்பாதைகள் உள்பட பல்வேறு வசதிகளுடன் இந்த சாலைகள் அமைய உள்ளன. பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே சாலை மூன்று மாநிலங்கள் வழியாக அமைகிறது. அதாவது கர்நாடகா, ஆந்திர பிரதேசம், தமிழ்நாடு என மூன்று மாநிலத்தின் வழியாக செல்கிறது. பெங்களூரின் கிழக்கு புறநகர் பகுதியான ஹொசகோட் பகுதியிலிருந்து, மாலூர் மற்றும் ஆந்திராவின் வி கோடா, பலமனேர், பங்காருபாலம், சித்தூர் வழியாக தமிழகத்தின் ராணிப்பேட்டை, குடியாத்தம், அரக்கோணம், ஸ்ரீபெரும்பதூரில் இந்த சாலை நிறைவடைகிறது.

ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி
தற்போது சென்னையில் இருந்து பெங்களூரிற்கு வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாகவும் அல்லது சித்தூர், கோலார் வழியாகவும் 2 முக்கிய சாலைகள் பயன்பாட்டில் உள்ளன. இதில், வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் ரூட்தான் அதிகம் பேரால் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இந்த சாலையில் ராணிப்பேட்டை முதல் பெங்களூர் வரை சிறப்பான கட்டமைப்பு உள்ளது. எனினும் இவற்றுடன் ஒப்பிடும் போது விரைவில் திறக்கப்பட இருக்கும் சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ்வே குறைவான தொலைவு கொண்டதாகும். அதாவது 262 கி.மீதான். இந்த சாலைக்காக மொத்த திட்ட மதிப்பு 18 ஆயிரம் கோடியாகும். இதில் சாலைகள் அமைப்பதற்காக 5,700 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகைகள் நிலம் கையகப்படுத்துதல், திட்ட நிர்வாகம், டோல்கேட் மெகானிசம் உள்ளிட்டவைகளுக்காக பயன்படுத்தப்பட உள்ளது.

சாலைக்கான சுங்க கட்டணம்
சென்னை - பெங்களூரு எக்ஸ்பிரஸ்வே சாலைக்கான சுங்க கட்டணம் அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த சாலையில் சுங்க கட்டணம் இந்த ரேஞ்சில் தான் இருக்கும் என மதிப்பிட்டு தோராயமான கட்டண விவரங்களும் வெளியாகி இருக்கின்றன. இதன்படி, இலகு ரக வாகனம் என்று சொல்லப்படும் கார்கள், ஜீப்கள் போன்ற வாகனங்களுக்கு ஒரு கி.மீட்டருக்கு 0.65 வசூலிக்கப்படலாம். ஆனால் இது இப்போதுள்ள சாலைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணத்தை போலவே இருப்பதால் இதுதான் கட்டணமா என்பதை உறுதிப்படுத்த முடியவில்லை.

சுங்க கட்டணம் எவ்வளவு
* சரக்குகள் மற்றும் மினி பேருந்துகள்- ரூ.1.05 (ஒரு கி.மீட்டருக்கு)
* பேருந்து மற்றும் டிரக்குகள் - ரூ.2.20
* மூன்று ஆக்ஸில் கொண்ட டிரக்குகள் - ரூ.2.40
* மல்டி ஆக்சில் டிரக்குகள் - ரூ.3.45
* மிகப்பெரிய டிரக்குகள் - ரூ.4.20
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications