டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பணமதிப்பிழப்பு வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு சொன்ன நீதிபதி பி.வி.நாகரத்னா! புதிய சாதனை காத்திருக்கு

Google Oneindia Tamil News

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரித்து 4 நீதிபதிகளும் அதை எதிர்த்து ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்துள்ளனர். இவர்களில் நோட்டுகள் செல்லாது என திடீரென அறிவித்தது தவறு என தீர்ப்பளித்தவர் நீதிபதி பி.வி. நாகரத்னா. இவர் முன்னாள் தலைமை நீதிபதி இ.எஸ். வெங்கட்ராமையாவின் மகளாவார்.

பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 58 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதன் மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

நோட்டுகள் மீதான தடை செல்லும் என 4 நீதிபதிகளும் செல்லாது என ஒரு நீதிபதியும் தீர்ப்பளித்துள்ளனர். இவர்கள் அந்த ஒரு நீதிபதி பி.வி. நாகரத்னா. இவர் யார் என்பதை பார்க்கலாம்.

உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட கசப்பு மருந்து பணமதிப்பிழப்பு! பிரதமர் மோடி அறிவிப்பு சாதித்தது என்ன? உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட கசப்பு மருந்து பணமதிப்பிழப்பு! பிரதமர் மோடி அறிவிப்பு சாதித்தது என்ன?

காலியாக இருந்த 9 நீதிபதிகளின் இடங்கள்

காலியாக இருந்த 9 நீதிபதிகளின் இடங்கள்

உச்சநீதிமன்றத்தில் காலியாக இருக்கும் 9 நீதிபதிகளின் இடங்களை நிரப்ப நடந்த தேர்வில் 3 பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர்தான் நீதிபதி பி.வி. நாகரத்னா. இவர் 2027 ஆம் ஆண்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த இவர் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி

இந்த நிலையில் இவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டால் இந்திய வரலாற்றில் நீதித் துறையில் முதல் பெண் தலைமை நீதிபதி என்ற பெருமையை பெறுவார். மேலும் இவரது தந்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியான முதல் கன்னடர் என்ற பெருமையை பெற்றார். அதே வழியில் மகள் நாகரத்னாவும் விரைவில் ஒரு சாதனையை படைக்கவுள்ளார். இவர் கடந்த 1962 ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை வெங்கடராமையாவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். கடந்த 1989 ஆம் ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாதங்கள் வரை அவர் அந்த பகுதியில் இருந்தார்.

பெங்களூரு வழக்கறிஞர்

பெங்களூரு வழக்கறிஞர்


பெங்களூருவில் வழக்கறிஞராக இருந்த பி வி நாகரத்னா கடந்த 2008 ஆம் ஆண்டில் கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கூடுதல் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2 ஆண்டுகளில் நிரந்தரமாக்கப்பட்டார். கடந்த 2009 ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரன் மீதான ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து வழக்கறிஞர்கள் ஒரு தரப்பினர் போராட்டம் நடத்தினர். அப்போது நீதிபதிகள் நாகரத்னா, கோபால கிருஷ்ண கவுடா, தலைமை நீதிபதி பி.டி. தினகரன் ஆகியோரை ஒரு அறையில் வைத்து வழக்கறிஞர்கள் பூட்டி வைத்தனர். போராட்டம் முடிந்த பிறகு மூவரும் விடுவிக்கப்பட்டனர்.

 துணிச்சல் பேட்டி

துணிச்சல் பேட்டி

இந்த சம்பவத்திற்கு பிறகு துணிச்சலாக பேட்டி அளித்தார் நாகரத்னா. அவர் கூறியிருப்பதாவது: இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன். கோழையாக இருந்துவிடமாட்டேன். அரசியலமைப்புச் சட்டத்தின்படி பதவி ஏற்றுள்ளேன். பார்கவுன்சில் வழக்கறிஞர்கள் இதை செய்ததால் நான் வெட்கப்படுகிறேன், வேதனைப்படுகிறேன் என கூறியிருந்தார். அது போல் மின்னணு ஊடகங்களை ஒழுங்குப்படுத்த கட்டுப்பாடுகள் தேவை என தீர்ப்பளித்தார். மேலும் 2019 ஆம் ஆண்டு ஒரு வழக்கில் அவர் வெளியிட்ட தீர்ப்பில் கோவில் என்பது வர்த்தக நிறுவனம் அல்ல. ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு கிராஜுவிட்டி வழங்க முடியாது என நாகரத்னா தீர்ப்பளித்துள்ளார்.

English summary
Do you know who is Justice B.V.Nagarathna? a judge of Supreme Court of India. She was served as judge of Karnataka Highcourt. she is the daughter of former Chief justice E.S.Venkataramaiah.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X