குலுங்கிய கட்டிடங்கள்! தலைநகர் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்! ரிக்டர் அளவுகோலில் 5.4 ஆக பதிவு!
டெல்லி : நேபாளத்தில் இன்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இந்தியாவின் தலைநகரான டெல்லி, நொய்டா, குருகிராம் உள்ளிட்ட பகுதிகளிலும் நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் போட்டி மாவட்டத்தில் நேற்று முன் தினம் சக்தி வாய்ந்த நில நடுக்கும் பதிவாகிவானது. பூமியிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகி இருந்தது.

இந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமான நிலையில் இடுபாடுகளில் சிக்கிய 6 பொதுமக்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்த நிலையில் தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் நேற்று முன் தினம் டெல்லியில் உணரப்பட்டது.
இந்த நிலையில் இன்று இரவு சுமார் எட்டு மணி அளவில் நேபாளத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவின் பல பகுதிகளில் நிலநடுக்கத்தின் தாக்கம் பதிவாகி இருக்கிறது. டெல்லி நொய்டா, குருகிராம், பரிதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு நிமிடத்திற்கு நிலநடுக்கம் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
நேபாளத்தை போலவே டெல்லியில் உணரப்பட்ட நிலநடுக்கவும் 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவுகோலில் இது 5.4 பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக கட்டிடங்கள் லேசாக குலுங்கியதாகவும் , வீட்டில் இருந்த பொருட்கள் கீழே விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications