தயிர் உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா! அப்போ இதை படிங்க முதல்ல.. நன்மைகள் பல ஆனாலும் சில சிக்கல் இருக்கு
டெல்லி: இங்குப் பலருக்கும் உணவில் தவிர்க்கவே முடியாத உணவாகத் தயிர் இருக்கிறது. தயிர் பெரும்பாலானோருக்கு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது என்ற போதிலும் சிலருக்குக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.
இந்தியாவில் நாம் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் ஒவ்வொரு மாநிலத்திலும் உணவுப் பழக்க வழக்கங்களும் மாறிக் கொண்டே இருக்கும்.. தமிழ்நாட்டில் இருக்கும் உணவு முறைக்கும் கேரளாவில் இருக்கும் உணவுப் பழக்கத்திற்குமே கூட பெரிய வித்தியாசம் இருக்கும்.
ஆனால், நாடு முழுக்க இருக்கும் ஒரு சில உணவுகளில் ஒன்று தயிர். சிலருக்கு எல்லாம் மதிய சாப்பாட்டைத் தயிருடன் முடித்தால் தான் சாப்பிட்டது போன்ற உணர்வே ஏற்படும். ஆனால், தயிர் சாப்பிடுவதிலும் சில பிரச்சினைகள் உள்ளன. அது என்ன என்பதைப் பார்க்கலாம்..

தயிர்
தயிர் என்பது நமது நாட்டில் பலரின் அன்றாட உணவாகும். உணவின் சுவையை உயர்த்தும் இயற்கையான, ருசியான உணவாகவே தயிர் இருக்கிறது. இது மட்டுமில்லாமல்.. நம்மை ஆரோக்கியமாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கவும் இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம். தயிரில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன.. அதாவது இதில் இருக்கும் ஆபத்தை விளைவிக்காத பாக்டீரியாக்கள் மற்றும் ஈஸ்ட்கள் செரிமானத்தை வலுவாக வைத்திருக்கவும் குடல் ஆரோக்கியத்தை ஒழுங்குபடுத்தவும் உதவுகின்றன.

ஏகப்பட்ட நன்மைகள்
இது குறித்து ஏற்கனவே விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.. தயிர் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிப்பதால் தொற்று நோய் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.. வலுவான எலும்புகள் மற்றும் பற்களை இது உருவாக்குகிறது.. மேலும், செரிமானத்தை மேம்படுத்துகிறது.. இது குடல் ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.. குறிப்பிட்ட சில நீண்ட கால நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது.. மேலும், முன்கூட்டியே ஏற்படும் முதுமையைத் தடுக்கிறது.. இது மட்டுமின்றி தலையில் பொடுகு ஏற்படுவதையும் குறைக்கிறது.

சில சிக்கல்கள்
இருப்பினும், இந்த அற்புதமான நன்மைகளைத் தவிர, தயிர் சிலருக்குச் சின்ன சின்ன பக்க விளைவுகளையும் இது ஏற்படுத்தும். அதை நாம் கவனிக்க வேண்டும். இந்த பக்க விளைவுகளால் நீண்ட கால ஆரோக்கியத்திற்கு எந்த தீங்கும் ஏற்படாது என்றாலும், தீவிர நோய்கள் பாதிப்பு உள்ளவர்கள் மோசமான அசவுகரியத்தை எதிர்கொள்ள நேரிடும்.. ஏப்பம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளுக்குத் தயிர் உதவினாலும் கூட.. புரோபயாடிக்கில் இருக்கும் சில பாக்டீரியாக்கள் வயிற்றில் வாயுவை ஏற்படுத்தும்.. வீக்கத்தையும் அதிகரிக்கும்..

தயிர் சாப்பிடுவதை நிறுத்துங்கள்
தொடர்ந்து தயிரை எடுத்துக் கொள்வோருக்கு மலச்சிக்கல் மற்றும் அதிக தாகம் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.. இதுபோன்ற சிக்கல் தொடர்ந்து ஏற்பட்டால் தயிர் சாப்பிடுவதைக் கொஞ்ச நாள் நிறுத்தி வைக்கலாம்.. அல்லது மருத்துவரை அணுகலாம் என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.. சில குறிப்பிட்ட உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் தலைவலி ஏற்படும். ஆனால், பெரும்பாலும் அவை வழக்கமாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவு என்பதால் தலைவலிக்கு அந்த உணவு தான் காரணம் என்பதை நாம் கவனிப்பதில்லை. அதுபோன்ற ஒரு உணவு தான் தயிர். தயிரைத் தொடர்ந்து சாப்பிட்டால் ஒற்றைத் தலைவலி கூட ஏற்படும் ஆபத்து உள்ளது.

அலர்ஜி
புரோட்டீன் கொண்ட உணவுகளில் சில தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களால் புளிக்கப்படும் போது உருவாகும் பயோஜெனிக் அமின்களால் இது ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்த அமின்கள் நரம்பு மண்டலத்தை மோசமாக்குவதாகவும், ரத்த ஓட்டத்தைப் பெருமளவில் குறைக்கின்றன அல்லது அதிகரிக்கின்றன.. இதன் காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது. சிலருக்குக் குறிப்பிட்ட உணவைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்படும். அப்படி அலர்ஜி ஏற்பட புரோபயாடிக்குகள் தான் முக்கிய காரணம். தயிரில் சில புரோபயாடிக் சப்ளிமெண்ட்ஸின் இருக்க வாய்ப்பு உள்ளது. இதனால் தயிரைச் சாப்பிட்டால் அலர்ஜி ஏற்பட வாய்ப்புள்ளது.

யார் சாப்பிடக் கூடாது.
பெரும்பாலான மக்கள் தயிர் சாப்பிடும்போது எந்தவொரு பிரச்சினையும் ஏற்படாது என்றாலும், சிலருக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். ரொம்பவே அரிதான சந்தர்ப்பங்களில், தயிரின் புரோபயாடிக்குகளில் உள்ள பாக்டீரியா அல்லது ஈஸ்ட்கள் ரத்த ஓட்டத்தில் நுழைந்து பலவீனமான நபர்களுக்குத் தொற்று பாதிப்பை ஏற்படுத்தும். குறைந்த நோயெதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், தொடர்ச்சியாக மருத்துவமனைகளில் இருப்போர், அறுவை சிகிச்சை செய்து கொஞ்ச நாட்களே ஆனவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படும். அதேபோல கடுமையான கணைய அழற்சி உள்ளவர்கள் ப்ரோபயாடிக்குகளை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.. ஏனெனில் இது உயிரிழக்கும் வாய்ப்பை கூட அதிகரிக்கலாம்.

மூட்டு வலி
மூட்டுவலி நோயாளிகள் தொடர்ச்சியாகத் தயிரைச் சாப்பிட்டால் வலி அதிகரிக்கும்.. தயிர் போன்ற புரத வகை பால் பொருட்களால் கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீக்கம் மற்றும் மூட்டு வலிக்கான வாய்ப்புகள் அதிகம்.. எலும்புகள் வீக்காவதே இதற்கான காரணமாகும்.
மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications