இன்று தாக்கல் செய்யப்படும் பொருளாதார ஆய்வறிக்கை.. அப்படி என்றால் என்ன? ஏன் முக்கியம்? முழு தகவல்
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை இன்று, ஜனவரி 31ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
நாளை பிப். 1ஆம் தேதி 2022 நிதியாண்டிற்கான மத்திய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். இதற்கிடையே அதற்கு முந்தைய நாள் அதாவது இன்று நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பிக்கப்பட உள்ளது.
வரும் 2022-23 நிதி ஆண்டில் இந்தியாவின் வளர்ச்சி சுமார் 9 சதவீதமாக இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் கணிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன
பொருளாதார ஆய்வறிக்கையை என்பதை நமது நாட்டின் பொருளாதாரத்தின் அதிகாரப்பூர்வ அறிக்கை என்று கூறலாம். இது எப்போதும் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு ஒரு நாள் முன்னதாக மத்திய நிதியமைச்சரால் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நாட்டின் பொருளாதார நிலை, வளர்ச்சிக்கான வாய்ப்புகள் மற்றும் கொள்கை மாற்றங்கள் குறித்து இதில் வழக்கமாக இருக்கும். அதேபோல எடுக்க வேண்டிய சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்தும் இதில் கூறப்பட்டிருக்கும். இவை வரும் காலத்தில் எதிர்கால கொள்கை முடிவுகளைக் குறிப்பதாக அமையும்.

யார் தயார் செய்வார்
பொதுவாக நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகரால் தான் இந்த பொருளாதார ஆய்வறிக்கை எழுதப்படும். ஆனால் இந்த ஆண்டு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆனந்த நாகேஸ்வரனை தலைமை பொருளாதார ஆலோசகராக மத்திய அரசு நியமித்தது. எனவே, இந்த ஆண்டு முதன்மை பொருளாதார ஆலோசகர் உள்ளிட்ட அதிகாரிகளால் இந்த ஆவணம் தயார் செய்யப்படுகிறது.

முதல்முறை இல்லை
முன்னதாக கடந்த 2014ஆம் ஆண்டு பாஜக அரசின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை கூட மூத்த பொருளாதார ஆலோசகர் இலா பட்நாயக்கால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் அந்த சமயத்தில் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகராக இருந்த ரகுராம் ராஜன் அப்போது தான் ரிசர்வ் வங்கி ஆளுநராக நியமிக்கப்பட்டார். இதனால் தலைமை பொருளாதார ஆலோசகர் பதவி காலியாக இருந்ததால் இலா பட்நாயக் அந்த ஆண்டிற்கான ஆய்வறிக்கையைத் தயார் செய்தார்

நாட்டின் வளர்ச்சி
இந்த பொருளாதார ஆய்வறிக்கையில் அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 9%ஆக இருக்கும் என்று கணிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக 2020-21 நிதியாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.3% வரை சரிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு இதேபோல வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இந்த ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 11%ஆக இருக்கும் எனக் கணித்திருந்தது. ஆனால், தேசிய புள்ளியில் அலுவலகம் இந்த ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 9.2%ஆக உள்ளதாகக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications